கவிதை : வலியே சுவை

 

உனக்காய்
பூ பறிக்கையில்
விரலில் தைத்த முள்ளை
விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன்.

தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல

முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.

12 comments on “கவிதை : வலியே சுவை

  1. “முள்ளின் முனையில்
    முளைக்கும் வலியில்
    உன்னைப்பற்றிய
    நினைவுகள் பூச்சொரிகின்றன.”

    Nijamaana valin yezhuthu vadivam……

    Like

  2. //Excellent… !!!!

    இப்படி வார்த்தைகளால்
    ஓவியம் தீட்ட எனக்கும்
    கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :))
    //

    நன்றி நவீன்.

    இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு. காதல் கடலில் கவிதைத் தோணிகளை கையும் கணக்குமில்லாமல் இறக்கி விட்டுக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிப் பேசுவது 😀

    Like

  3. //தீயை முத்தமிட்டு
    சிதறிச் சிரிக்கும்
    மத்தாப்பு போல

    முள்ளின் முனையில்
    முளைக்கும் வலியில்
    உன்னைப்பற்றிய
    நினைவுகள் பூச்சொரிகின்றன.//

    Excellent… !!!!

    இப்படி வார்த்தைகளால்
    ஓவியம் தீட்ட எனக்கும்
    கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :))

    Like

  4. கவிதைக்குப் பொய் அழகு.யாரும் நம்பாதீங்கோ.
    சேவியர் அண்ணா நிறையப் பொய் சொல்றார்.

    Like

  5. //வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
    //

    நன்றி குகன். 🙂

    Like

  6. வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.