கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை

உன்னிடமிருக்கும்
ஆடைகளின்
நிறங்களும் வடிவங்களும்
எனக்கு
அத்துப்படி.

எந்த தினங்களில்
நீ
எந்த ஆடை அணிவாய் என்பதையும்

எந்த ஆடைக்கு
எந்த
காதணி அணிவாய் என்பதையும்,

எந்தக் காதணிக்கு
எந்தக்
காலணி அணிவாய் என்பதையும்,

துல்லியமாய்ச் சொல்லிய
காலங்கள்
உண்டு.

நீண்ட வருடங்களுக்குப்
பின்
ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன்
உனக்குத்
தொலை பேசுகையில்.

குழந்தை அழுகிறது
பிறகு பேசலாமா
என்ற
உன் குரலின் ஆடையையும்
புரிந்து கொள்ளாமல்
போய்விட முடியவில்லை
என்னால்.

18 comments on “கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை

 1. அண்ணா,கவிதை நல்லாயிருக்கு என்று வாசிக்கத் தொடங்கினால் முடிவு குழப்பம்தான்.

  Like

 2. //ஆண்களுக்குத் தான் இந்த கவிதை புரியும் போல//

  அப்போ எனக்குப் புரியலயா…என்ன?

  Like

 3. நல்லா தலையை சொறிஞ்ச பிறகு தான் கொஞ்சமாக புரியத் தொடங்கியது 😉
  தரிசாகிப் போன காதல் நிலத்தில் மீண்டும் போய் பழைய அன்புப் பூச்செடிகள் வைக்க நினைப்பது நாகரிகமானது அல்ல .
  என் புரிதல் சரியா?

  Like

 4. //குழந்தை அழுகிறது
  பிறகு பேசலாமா
  என்ற
  உன் குரலின் ஆடையையும்
  புரிந்து கொள்ளாமல்
  போய்விட முடியவில்லை
  என்னால்.//

  ஆடை சூடிய‌
  குரல்… !!!
  உணர்வுகளை
  அதன் வழியே வழியவிட்டிருக்கிறீர்கள் சேவியர்….
  ரசித்தேன் மிகவும்.. :))

  Like

 5. //குழந்தை அழுகிறது
  பிறகு பேசலாமா
  என்ற
  உன் குரலின் ஆடையையும்
  புரிந்து கொள்ளாமல்
  போய்விட முடியவில்லை
  என்னால்.//

  1) குழந்தைக்கு பால் கொடுக்கப் போகிறேன் என சொல்கிறாலா?

  2) எனக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது, ஏன் இன்னமும் போன் போடுகிறாய் என கேட்கிறாளா?

  3) //குரலின் ஆடையையும்// சோகத்தின் கண்ணீரா? புரியவில்லை. விளக்கம் சொல்லுங்களேன்?

  Like

 6. //ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை//

  தலைப்பை வைத்துப் பார்த்தால் உன்னிடம் பேசுவதை விட என் குழந்தையை கொஞ்சுவதில் மகிழ்ச்சி அதிகம் என சொல்ல வருகிறாளோ?

  Like

 7. //அப்போ எனக்குப் புரியலயா…என்ன//

  சேச்சே… இதுல புரிய என்ன இருக்கு ? புரியறதையும் புரியாதது மாதிரி நடிக்கிறது உங்களுக்குக் கைவந்த கலையாச்சே 😉 ( கிண்டல் தான் கோச்சுக்காதீங்க )

  Like

 8. //thalai kadaisila vechingka paarungka aappu… simple but sweet…padamum arumai//

  நன்றி தமிழ்ப் பறவை. வருகைக்கும், கருத்துக்கும் 🙂

  Like

 9. //தரிசாகிப் போன காதல் நிலத்தில் மீண்டும் போய் பழைய அன்புப் பூச்செடிகள் வைக்க நினைப்பது நாகரிகமானது அல்ல //

  அதே…

  “குழந்தை அழுகிறது” பிறகு பேசுவோமே என அவள் வனை தவிர்க்க நினைக்கிறாள். அவளது குரல் ஆடை போர்த்து வருகிறது. அதாவது இப்போது உன்னிடம் பேச விரும்பவில்லை எனும் உண்மையை உள்ளுக்குள் மறைத்து வெளியே குழந்தை அழுகிறது எனும் கற்பனை ஆடையுடன்.
  🙂

  Like

 10. //ஆடை சூடிய‌
  குரல்… !!!
  உணர்வுகளை
  அதன் வழியே வழியவிட்டிருக்கிறீர்கள் சேவியர்….
  ரசித்தேன் மிகவும்.. :))//

  வருகைக்கு மனமார்ந்த நன்றிகள் நவீன். 🙂

  Like

 11. //1) குழந்தைக்கு பால் கொடுக்கப் போகிறேன் என சொல்கிறாலா?

  2) எனக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது, ஏன் இன்னமும் போன் போடுகிறாய் என கேட்கிறாளா?

  3) //குரலின் ஆடையையும்// சோகத்தின் கண்ணீரா? புரியவில்லை. விளக்கம் சொல்லுங்களேன்
  //

  அட விக்கி… விட்டா இதுக்கு தனியா ஒரு புக் போடுவே போல 😀

  குரலின் ஆடையையும் : என்றால், குரல் உண்மையாய் வரவில்லை. மெய்யை மறைத்து ஒரு ஆடையை மூடி வருகிறது என்பதே பொருள்.

  மெய் எனும் உடலை ஆடை மூடும்
  மெய் எனும் உண்மையை குரலின் ஆடை மூடும்
  🙂

  Like

 12. //தலைப்பை வைத்துப் பார்த்தால் உன்னிடம் பேசுவதை விட என் குழந்தையை கொஞ்சுவதில் மகிழ்ச்சி அதிகம் என சொல்ல வருகிறாளோ?

  //

  ஒண்ணுமே புரியாமல் இருந்தால், சொல்வதை சொல்வது படி எடுத்துக் கொண்டால் ஆனந்தமே. உண்மை புரிந்து விட்டால் ஆனந்தம் போய்விடும். அதான் தலைப்பு 😀

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s