கவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்

கையிலிருக்கும்
தொலைபேசி
ஊமையாகிப் போகும்
பின்னிரவுப் பொழுதில் தான்
புரியும்
நீ தூரமாய் இருக்கிறாய்.

நீ
இல்லாத இடங்களில்
உன் நினைவுகளை இருத்தி
நீ
இருக்கும் இடங்களை
நோக்கி
தலை தெறிக்க ஓடுகிறது
என் தூக்கம்.

தூக்கம் பதறி எழுந்து
ஓடுகையில்
அதன்
பையிலிருந்து தவறி விழுந்த
சில கனவுகள்
என் கைகளில்.

வெகு நேரமாகிறது.
தொலைந்து போன
தூக்கத்தை எதிர்பார்த்து,

உன் நினைவுகள்
அமர்ந்திருக்கும்
வெற்றிடங்களை வெறித்தபடி

கையில் கனவுகளுடன்
விழித்திருக்கிறேன்
நான்.

25 comments on “கவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்

 1. நினைவுகள் வரங்களா அல்லது வலிகளா என்பது நினைவுக்குச் சொந்தமானவர்கள் நம்மிலிருந்து எங்கிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது .

  நல்ல கவிதை🙂

 2. அண்ணா உங்கள் சொந்த உணர்வு கவிதை வரிகளில் காத்துக் கிடக்கிறது.(உங்களுக்கு மட்டும்தான் கிண்டல் சொந்தமா!)

 3. //நினைவுகள் வரங்களா அல்லது வலிகளா என்பது நினைவுக்குச் சொந்தமானவர்கள் நம்மிலிருந்து எங்கிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது
  //

  வித்தியாசமான சிந்தனை.

 4. //அண்ணா உங்கள் சொந்த உணர்வு கவிதை வரிகளில் காத்துக் கிடக்கிறது.(உங்களுக்கு மட்டும்தான் கிண்டல் சொந்தமா!)

  //

  அட.. கண்டுபிடிச்சுட்டீங்களா ( உண்மையைக் கிண்டல் என்று சொல்வதா🙂

 5. //நீ
  இல்லாத இடங்களில்
  உன் நினைவுகளை இருத்தி
  நீ
  இருக்கும் இடங்களை
  நோக்கி
  தலை தெறிக்க ஓடுகிறது
  என் தூக்கம்.//

  வரி அழகா இருக்கு அண்ணே… பொல்லாத தூக்கம்… ஒன்னு கேட்கலாம்னு நினைச்சேன்… அம்மணிய பத்தியே பெசுறனு சொல்விங்க… வேண்டா விடுங்க அந்தக் கேள்வி என்னோட மண்ணோட போகடும்… ஆண்டவா சேவியர் அண்ணன் சுப்பர் அம்மணிங்க படத்த பதிவில் போடாமல் இருக்க புத்தி கொடுப்பா… மங்களூர் சிவாவுக்கு மொட்டையடிக்க வேண்டிக்கிறேன்…

 6. //ஆண்டவா சேவியர் அண்ணன் சுப்பர் அம்மணிங்க படத்த பதிவில் போடாமல் இருக்க புத்தி கொடுப்பா… //

  படத்தை Click பண்ணி பெருசா பாத்ததுக்கு அப்புறம் தானே இந்த வேண்டுதல்😀

 7. Hi,

  This is a nice poem.

  In need a help. I would like to know how to blog in tamil. I am using a wordpress instance. I have hosted it myself. Any information will help.

  Shanmugam

 8. //ஆண்டவா சேவியர் அண்ணன் இனிமே முழு உருவ படம் போடணும்பா//

  அதெல்லாம் தனிமடலில்😉

 9. /Hi,

  This is a nice poem.

  In need a help. I would like to know how to blog in tamil. I am using a wordpress instance. I have hosted it myself. Any information will help.

  Shanmugam
  //

  நன்றி ஷண்முகம். இது ரொம்ப எளிதாச்சே… யூனிகோட் ல தட்டச்சு செய்ய தெரியுமா உங்களுக்கு ?

 10. அண்ணா அப்போ….உங்க கதைதானா இது.ம்…ம்…ம்.பரவா இல்ல.

  எங்கயிருந்து இந்த அம்மணிகள் படங்கள் எல்லாம் எடுக்கிறிங்க.பாவம் விக்கிதான் தடுமாறி விழுறார்.அவருக்காக மங்களூர் சிவா மொட்டை அடிகணுமாம்.ஏற்கனவே மங்களூர் சிவா மொட்டைன்னா என்ன செய்வார் விக்கி?

 11. //எங்கயிருந்து இந்த அம்மணிகள் படங்கள் எல்லாம் எடுக்கிறிங்க.//

  ஹி..ஹி.. இணையத்துல இருந்து தான்😉

  //

  பாவம் விக்கிதான் தடுமாறி விழுறார்.//

  அவன் எப்போ எழுந்தான், விழறதுக்கு😉

  //
  அவருக்காக மங்களூர் சிவா மொட்டை அடிகணுமாம்.ஏற்கனவே மங்களூர் சிவா மொட்டைன்னா என்ன செய்வார் விக்கி?
  //

  இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தங்கச்சி🙂

  //

 12. எவ்வளவு இறுக்கமாய் மூடினாலும், பழுதான குடிநீர் குழாயிலிருந்து விழுந்து கொண்டே இருக்கும் நீர் சொட்டு போல எத்தனை மூடி மறைத்தாலும் மனக் குழாயிலிருந்து விழுந்து கொண்டே இருக்கும் சொட்டுகள் தான் நினைவுச் சொட்டுகள். அந்த நிற்காத சொட்டுக்களை நிதானமாய் எண்ணிப் பார்க்க வைத்தது வரிகள்.

 13. அண்ணா,செய்தி அறிந்தேன்.நீங்களும் அறிந்தீர்களா?

  இன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்கள்…!

  நன்றி ஆயில்யனுக்கு. http://www.kadagam.blogspot.com

 14. //எவ்வளவு இறுக்கமாய் மூடினாலும், பழுதான குடிநீர் குழாயிலிருந்து விழுந்து கொண்டே இருக்கும் நீர் சொட்டு போல எத்தனை மூடி மறைத்தாலும் மனக் குழாயிலிருந்து விழுந்து கொண்டே இருக்கும் சொட்டுகள் தான் நினைவுச் சொட்டுகள். அந்த நிற்காத சொட்டுக்களை நிதானமாய் எண்ணிப் பார்க்க வைத்தது வரிகள்//

  வாவ்… குகன்… கலக்கறீங்க குகன்.

  உவமைகள் பின்னி எடுக்கறீங்க.. நன்றி நன்றி🙂

 15. //அண்ணா,செய்தி அறிந்தேன்.நீங்களும் அறிந்தீர்களா?

  இன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்கள்
  /

  ஓ… வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்…. !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s