என் விரலிடை விழுந்து விட்ட
வெண்ணிலவே.
நீண்ட நாட்களாகிறது
உனக்குக் கவிதையெழுதி.
உன்
விரல் தீண்டும் ஆசையில்
மோதிரத்தைத் தொட்டுப் பார்த்ததும்,
கரம் தொடும் ஆசையில்
கைரேகை கற்றதும்
இன்று நடந்ததாய் இனிக்கிறது.
உன் ரேகைகள் மீது
என் விரல்களால்
இரயிலோட்டும் போதெல்லாம்
எனக்குள் ஏதோ ஒரு
சின்னக்குயில் சிறகடிக்கும்.
உன் விரல்கள் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாம்ராஜ்யச் சாதனையாளனாய்
மனசுக்குள்
மகிழ்வின் பறவை சாமரம் வீசும்.
நீ
உன் இருவிரல்களால்
முதன் முதலில் முத்தமிட்டுக் கொடுத்த
அந்த சிவப்பு ரோஜா
இன்னும் உன்
கைரேகை கலையாமல்
காய்ந்து கிடக்கிறது.
மனம் தான் பூப்பதை நிறுத்தவில்லை.
நீ கொடுத்த முதல் கடிதத்தை
என்னையும் மீறி
சட்டென்று ஒரு
மழைத்துளி முத்தமிட்டு விட்டது.
ஆனாலும்
உன் பேனா மையென்பதால்
அதைப்
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
கைப்பிடி அளவுதான் இதயமாம்
அறிவியல் சொல்கிறது.
உன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது
என் இதயமும் அதன் துடிப்பும்.
நீ பின்புறம் கையொப்பமிட்டுத் தந்த
உன் புகைப்படம்
இன்னும்
என் முகம் பார்த்துச் சிரிக்கிறது.
கவிதையில் வரைந்தாலும்
நீள் கவிதை நிழல்களுக்குள்
ஓவியமாய் சிரிப்பது
நீ மட்டும் தானே.
இன்று,
தூரங்கள் நம் கரங்களை
துருவங்களுக்குத் துரத்தி விட்டன
மனசின் விரல்கள் மட்டும்
இன்னும் உன் கூந்தல் வனத்தில்.
இப்போது
கணிப்பொறி ஜன்னல்களில்
கடிதம் காணும் போதெல்லாம்
உன்
கரம்பட்டுக் கசங்கவில்லையே என்னும்
கவலை மட்டும் தான்
எனக்கும், உன் கடிதத்திற்கும்..
அற்புதமான வரிகள், கொள்ளை அழகு:))
மிகவும் ரசித்தேன்!!!
LikeLike
உன் விரல்கள் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாம்ராஜ்யச் சாதனையாளனாய்
மனசுக்குள்
மகிழ்வின் பறவை சாமரம் வீசும்.//
/////////////////
நல்லாயிருக்கு
சுகமாயிருக்கு
LikeLike
//அற்புதமான வரிகள், கொள்ளை அழகு:))
மிகவும் ரசித்தேன்!!!//
மிக்க நன்றி திவ்யா 🙂
LikeLike
//உன் விரல்கள் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாம்ராஜ்யச் சாதனையாளனாய்
மனசுக்குள்
மகிழ்வின் பறவை சாமரம் வீசும்.//
/////////////////
நல்லாயிருக்கு
சுகமாயிருக்கு
//
நன்றி பிரபு 🙂
LikeLike
//இப்போது
கணிப்பொறி ஜன்னல்களில்
கடிதம் காணும் போதெல்லாம்
உன்
கரம்பட்டுக் கசங்கவில்லையே என்னும்
கவலை மட்டும் தான்
எனக்கும், உன் கடிதத்திற்கும்.. //
:)))) மிக ரசித்தேன்..
கூந்தல் வானத்தில் மனதின்
நிழல்களாய் அழகழகான வரிகள்
கவிதையெங்கும் வீழ்ந்து கிடக்கின்றன..
அருமை சேவியர்.. :)))
LikeLike
entha poomi mithu unmai kathal enunum erkinranthu enbathin adaiyalamey entha vavithai.
LikeLike
வார்த்தைகளால் வண்ணம் தீட்ட தெரிந்தவர்களில் நீங்களும் ஒருவர்.. என்ன அழகாய் வடித்து எடுத்து இருக்கிறீர்கள்…
***
கைப்பிடி அளவுதான் இதயமாம்
அறிவியல் சொல்கிறது.
உன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது
என் இதயமும் அதன் துடிப்பும்.
***
மிகவும் பிடித்த வரிகள்….
மஹாலக்ஷ்மி.
LikeLike
///இப்போது
கணிப்பொறி ஜன்னல்களில்
கடிதம் காணும் போதெல்லாம்
உன்
கரம்பட்டுக் கசங்கவில்லையே என்னும்
கவலை மட்டும் தான்
எனக்கும், உன் கடிதத்திற்கும்.. //
:)))) மிக ரசித்தேன்..
கூந்தல் வானத்தில் மனதின்
நிழல்களாய் அழகழகான வரிகள்
கவிதையெங்கும் வீழ்ந்து கிடக்கின்றன..
அருமை சேவியர்.. :)))
//
மிக்க நன்றி நவீன். காதல் மன்னனின் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 🙂
LikeLike
//entha poomi mithu unmai kathal enunum erkinranthu enbathin adaiyalamey entha vavithai//
நன்றி பாலாஜி.
LikeLike
//வார்த்தைகளால் வண்ணம் தீட்ட தெரிந்தவர்களில் நீங்களும் ஒருவர்.. என்ன அழகாய் வடித்து எடுத்து இருக்கிறீர்கள்…
***
கைப்பிடி அளவுதான் இதயமாம்
அறிவியல் சொல்கிறது.
உன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது
என் இதயமும் அதன் துடிப்பும்.
***
மிகவும் பிடித்த வரிகள்….
//
மிக்க நன்றி மஹாலக்ஷ்மி. உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கும், வருகைக்கும், அன்புக்கும். 🙂
LikeLike
very good
LikeLike
அன்புள்ள சேவியருக்கு,
சிறகு வளரத் தொடங்கிய சில நாட்களிலேயே பறந்து விட முயலும் பறவைக் குஞ்சைப் போல,காதல் பிறந்த சில நாட்களிலேயே காதலன் தனக்கு மேலிடும் உணர்ச்சித் ததும்பலை வெளிப்படுத்த முயலும் அழகை கவிதையின் முழு பரிமாணத்தில் கொண்டு வந்துள்ளீர்கள் !!!!!!!!!!!!
உன்
விரல் தீண்டும் ஆசையில்
மோதிரத்தைத் தொட்டுப் பார்த்ததும்,
கரம் தொடும் ஆசையில்
கைரேகை கற்றதும்
இன்று நடந்ததாய் இனிக்கிறது.
அவளின் எழுதுகோல் வழியே வழிந்த மை , இவன் காதலுக்கு அவள் காகிதத்தின் வழியே கொடுத்த முதல் பூச்செண்டு.
நீ கொடுத்த முதல் கடிதத்தை
என்னையும் மீறி
சட்டென்று ஒரு
மழைத்துளி முத்தமிட்டு விட்டது.
ஆனாலும்
உன் பேனா மையென்பதால்
அதைப்
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
சிறைச்சாலைகளுக்கு உள்ளும் , வானத்தில் சுதந்திரமாய் சுற்றி திரியும் பறவைகள் கூடு கட்டி இருக்கும். அது போலவே,பிரிவுச் சோகத்துக்கு உள்ளும் இதயத்தில் விருப்பத்தின் துடிப்புகள் சத்தமான ஒலி எழுப்பும்.அதை மிக அழகாய் பிரதிபலித்து உள்ளீர்கள்!!!!!!!!!!!!!
மனசின் விரல்கள் மட்டும்
இன்னும் உன் கூந்தல் வனத்தில்.
தொழில்நுட்பம் வீணையின் நரம்புகளை ஒத்த மெல்லிய உணர்வுகளை அறுத்தெரிந்து விட்ட நிலையையும், வெறும் மின்னல் வேக செய்தி பரிமாற்ற ஊடகமாகவே இருக்கிறது என்ற நிலையையும் கவலை கொப்பளிக்க விவரிக்கும் வரிகள்.
இப்போது
கணிப்பொறி ஜன்னல்களில்
கடிதம் காணும் போதெல்லாம்
உன்
கரம்பட்டுக் கசங்கவில்லையே என்னும்
கவலை மட்டும் தான்
எனக்கும், உன் கடிதத்திற்கும்..
அதனால் தான் நாம் உணர்வின் நிலை காட்ட emoticons பயன்படுத்துகிறோமோ ? 😉
படைப்பு மிக அருமை !!!!!!!
நட்புடன்
குகன்
LikeLike
//very good/
நன்றி பாலா.
LikeLike
அன்பின் குகன்…
//சிறகு வளரத் தொடங்கிய சில நாட்களிலேயே பறந்து விட முயலும் பறவைக் குஞ்சைப் போல//
வாவ்… வியக்க வைக்கிறீர்கள்.
//சிறைச்சாலைகளுக்கு உள்ளும் , வானத்தில் சுதந்திரமாய் சுற்றி திரியும் பறவைகள் கூடு கட்டி இருக்கும். அது போலவே,பிரிவுச் சோகத்துக்கு உள்ளும் இதயத்தில் விருப்பத்தின் துடிப்புகள் சத்தமான ஒலி எழுப்பும்//
பின்னூட்டத்துக்கென்று ஏதேனும் விருது உண்டெனில் அது உங்களுக்குக் கிடைக்கட்டும் 🙂
நன்றி நண்பரே… ஊக்கமூட்டும் உங்கள் பின்னூட்டம் மனதை நிரப்புகிறது.
LikeLike
//பின்னூட்டத்துக்கென்று ஏதேனும் விருது உண்டெனில் அது உங்களுக்குக் கிடைக்கட்டும்//
உங்கள் நல்ல அன்பு எப்பொழுதும் எனக்கு தேவை. அது இருந்தால் போதும் , சேவியர் !!!!!!!!! 🙂
LikeLike
அது எப்போதும் உண்டு 🙂 சந்தேகம் வேண்டாம் 😀
LikeLike
நன்றிகள் ஆயிரம், சேவியர் !!!!!!!!!!
LikeLike
Vingnathin ellai kadhalargalin unarvugalai neruki nerukiye thennai virupaduthugirathai azhagai sollkiradhu andha kadaisi varaigal..
nijemaana kadhalin muga varigal…
Vazthukkal Xavier……
Karthick
LikeLike
மிக்க நன்றி கார்த்திக் 🙂
LikeLike