முற்றத்தில் முன்பெல்லாம்
அத்தப்பூ சிறு
கொத்துக் கொத்தாய்
வட்டத்துக்குள்
உட்கார்ந்திருக்கும்,
ஓணக்கோடி உடுத்தி
ஊஞ்ஞாலாடிக்கொண்டு
ஓணப் பாட்டு பாடுவது
இன்னும் என்
ஓர்மையில் உண்டு.
பக்கத்து வீட்டுப்
பிரேமாவோடு பிரேமம் கொண்டு
மலையாளம் கற்று
‘ஞான் நின்னே பிறேமிக்குந்நு’
என்று மொழியைக்
கடித்துத் துப்பிய தருணங்களும்,
அதைக் கேட்டதும்
சந்தன நெற்றியும்
வெண்ணிறக் கண்களும்
செந்நிறச் சூரியனாகி
அவள்
வெடித்துத் திட்டிய காலமும்,
புழையோரத்தில் தோணி நிறைய
சோகம் தின்று,
அதை விட அதிகமாய்
‘நாணமில்லே’ எனும் அவள்
வார்த்தையை
ஜீரணிக்கத் திராணியற்று
அசைபோட்ட மாதங்களும்,
மனசுக்குள் ஏனோ
மெல்ல மெல்ல மிதக்கின்றன.
காலத்தைப் போல அந்த
தாமரைக் கால்கள் நீளமானவை,
இன்னும் அவை
அதே பூவை
தண்ணீருக்கு மேல்
தாங்கிப் பிடித்திருக்கின்றனவே !
‘ஆத்மார்த்த பிறேமம்
நினிக்கொந்நும் அறியில்ல’
என்று
மீண்டுமொருமுறை
மொழியை கண்ணீர் தொட்டு
காயப்படுத்தி
அவள் முன் எறிந்து விட்டு வந்து விட்டேன்.
ஆயிற்று
ஆறு வருடங்கள் !
துபாயின் தெருக்களில் ஆரம்பித்து
ஊரில் ஓர்
மாடி வீடு கட்டும் எண்ணத்தில்,
இப்போது தான் மீண்டும்
என்
திண்ணைக்குத் திரும்புகிறேன்.
‘சுகமாணோ…
கண்டிட்டு கொல்லம் கொறயே
ஆயல்லோ’…
பிரியமாய் சிரிக்கிறாள் !
இத்தனை வருடங்களுக்குப் பின்னும்,
அதே பிரேமா.
யாரு ? என்ற
உள்ளறைக் கணவனின் கேள்விக்கு
என்ன பதில் சொல்லியிருப்பாள்
எனும் யோசனையில்
நானும்,
யாரது எனும் கேள்வியோடு
என் அருகில்
என் மனைவியும்.
பின் குறிப்பு : ஓணம் ஸ்பெஷல் கவிதை 😉
அண்ணா சுகமாணோ…கண்டிட்டு கொல்லம் கொறயே
ஆயல்லோ…காணணும் இல்லங்கேல் ஒரு தரம் பறையணும் பேசணும்.எனக்கு பிராந்து(சரியா மலையாளம்?)சுகம்தானே!
அண்ணா.ஓணம் ஸ்பெஷல் சூப்பரோ…சூப்பர்.
எப்பவும் போலக் கவிதை ஆசை ஆசையாய் காதலாய் தொடங்கும்.முடியும் தறுவாயில் என்னடா… இப்படியா என்றாகிவிடுகிறது.
LikeLike
Hi Xavier,
Very nice to read your kavithai after a long time.Hope you still remember me. Please give yr mail id or send message to my id.
LikeLike
சேட்டன், ஓணம் கவிதை சூப்பராயிட்டுண்டு:))
LikeLike
அடிபொளி!
LikeLike
/அண்ணா.ஓணம் ஸ்பெஷல் சூப்பரோ…சூப்பர்.
எப்பவும் போலக் கவிதை ஆசை ஆசையாய் காதலாய் தொடங்கும்.முடியும் தறுவாயில் என்னடா… இப்படியா என்றாகிவிடுகிறது/
தங்கச்சி, மலையாளத்துலயும் பிச்சு உதறுறீங்களே 😀 கலக்கல்…
நன்றி….
LikeLike
//Hi Xavier,
Very nice to read your kavithai after a long time.Hope you still remember me. Please give yr mail id or send message to my id.
//
ஹலோஓஓஓஓஓஓஓஓஓஒ எப்படி இருக்கீங்க கோபால்…. உங்களையும், நம்ம தொடர் கவிதையையும் மறக்க முடியுமா…
xavier.dasaian @ g m a i l. com – க்கு ஒரு மின்னஞ்சல்… இல்லேன்னா, இங்கேயே உங்க மின்னஞ்சல் முகவரி கொடுங்க…
LikeLike
//சேட்டன், ஓணம் கவிதை சூப்பராயிட்டுண்டு:))
/
நன்றிங்க 🙂
LikeLike
//அடிபொளி!//
நந்நி…
LikeLike
romma nanna irukku
LikeLike
I had already sent mail to xavier.dasaian @ g m a i l. com. Reply. We shall talk. My id gopal.srinivasan@tcs.com.
Can’t type in Tamil here. How do I do it.
LikeLike
மலையாளம் படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது…..
கவிதையும்… மொழியும்….. காதலும்…..
நம் நினைவுகளையும் மீட்டிவிட்டன ….
வாழ்த்துக்கள்…….சேவியர்
LikeLike
//romma nanna irukku//
நன்றி பாலா…
LikeLike
//மலையாளம் படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது…..
கவிதையும்… மொழியும்….. காதலும்…..
நம் நினைவுகளையும் மீட்டிவிட்டன ….
//
நன்றி கவிஞரே.. உங்கள் வருகை மகிழ்வூட்டுகிறது.
LikeLike
AayaaL aVanudayae bhariyae kootiKkondu, Avandae paZhayae kaaMughi veetil poiNnu paranzhal, Enna Dhairiyam uLla cherukKan aNu adhu. 🙂
Avande Dhairiyam aBharum thaNae. 😉
Njan orkunnu, aYaal DubhainNu Naeruttu AaH Sthreedae Veetil-Oiyteu aAyeerukum poiythathu
Iethu Xavierdae idea aAno? 😉
Njan Malayalathil comment chaiyanpatiyathu endae friend help chaithondaNu. 🙂
LikeLike
சேட்டன்றே மலையாளம் அடிபொளியாணு. எனிக்கு வளரே இஷ்டப்பட்டு. 🙂 வளரே நந்நி. நிங்ஙள்க்கு சகாயிச்ச ஆ சகாவினு என்றே ஆஷம்ஸகள் பாறஞ்ஞேய்க்கு…
LikeLike
பாறஞ்சேட்டேன் 🙂 (பொறுத்துக் கொள்ளவும்)
LikeLike
பொறுத்துக் கொண்டேன் 🙂
LikeLike
ஓணக் கவிதை : ஒரு மலையாளக் காதல் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது
LikeLike
நன்றி சந்தோஷ்…
LikeLike