ஓணம் சிறப்புக் கவிதை : கலாச்சாரக் கதகளி

இதொன்றும்
பிள்ளை விளையாட்டில்லை

சொரசொரப்புத் தூரிகைகள்
முகத்தைச் சுவராக்கி
பல மணிநேரம்
ஓவியம் வரையும்.

பிரத்யேக ஒப்பனை ஆடை
பிராணனை
பிழிந்தெடுக்கப் பிரியப்படும்.

செண்ட,
மத்தாளம், சிஞ்சில
என
இசைக்கருவிகளின்
அருவிக்குள் அரங்கேறும்
எங்கள் உதடுவிலகா
ஊமை நாடகம்.

கைகளையும்
கண்களையும் விட அதிகமாய்
தசைகள்
பேச வேண்டும் இங்கே,

இலக்கியம்
இசை, நடனம், நடிப்பு
ஓவியம் என,
அத்தனை நவரசக் கலவைகளையும்
ஒற்றை சீசாவில்
ஒளித்து வைத்த கலைதானே
இந்தக் கதகளி.

கண்களையும்
கைகளையும்
அபினயம் பிடித்துப் பிடித்து
நடித்தாலும்,
நான்கு பேருக்காக
ஓர்
நாட்டிய மேடை இருக்கும்.

எங்கள் வறுமையின்
சுருக்கங்களை
இந்த
அடர் சாயங்கள்
மறைத்துக் கொள்வதே பெரும்
ஆறுதல் எங்களுக்கு.

ஆனாலும்
எங்கள் கண்களை மீறி
குதிக்கும்
கண்ணீர் கவலைகள் எல்லாம்
சாயங்களின் மேல் சில
சாலைகளை
இட்டுச் செல்லும்.

எங்கள் வேர்கள் எல்லாம்
கலாச்சாரக் காடுகளில்
ஆழமாய் கிடந்தாலும்,
கிளைகள் எல்லாம்
வெளியூர்க் காற்றையே
சுவாசித்துக் கிடக்கும் கவலை தான் எங்களுக்கு !

*

14 comments on “ஓணம் சிறப்புக் கவிதை : கலாச்சாரக் கதகளி

 1. Kadhakali mattum alla xavier nam naatil pala pazhaiya kalaigal ellam idhe nilamaiyil dhaan irukiradhu……

  Kaneerukku varthaigal katti
  Kavidhai aakiyamaikku nandrigal pala….

  Karthick

  Like

 2. Envarthaikku ethanai wow ah???????????????

  Ungal pena azhagana thoorigai!!
  Varum varthaigal ellam
  Varaium ooviyathai polave
  Azhagaanavai!!!!!

  Nandri kalantha Vazthukkal Nanbare…..

  Karthick

  Like

 3. வருகைக்கு நன்றி தமிழ்ச்செல்வி 🙂 கார்த்திக் தன்னடக்கத்தின் தம்பியாய் இருக்கிறார் 😀

  Like

 4. அன்புள்ள சேவியருக்கு,

  ஏழெட்டு முறை படித்தேன் கவிதையை.
  கையடக்க கத்திகள் போர்வாளின் கூர்மை கொண்டவையாக இருக்க முடியுமா?. முடியும் என்பதற்கான முழு சாட்சியாய் இருக்கிறது இந்த கவிதையின் சின்ன சின்ன சொற்களில் ஒளிந்து கிடக்கும் பொதி மூட்டை கனம் கொண்ட கருத்தாழம்.

  எங்கள் வறுமையின்
  சுருக்கங்களை
  இந்த
  அடர் சாயங்கள்
  மறைத்துக் கொள்வதே பெரும்
  ஆறுதல் எங்களுக்கு.

  கண்ணுக்கு தெரியும்படி இருந்த சேலையின் கிழிந்த முந்தானையை பரபரவென பின் பக்கம் இழுத்து விட்டு , வீட்டு வறுமையை கைகளால் மறைத்து , இன்முகத்தை எனக்கு பரிசளித்து தேநீர் கொடுக்கும் ஏழை நண்பன் தாயாய் தெரிந்தது இந்த வரிகள் கதகளி கலைஞர்களின் வறுமையை சொன்ன பொழுது.

  எங்கள் வேர்கள் எல்லாம்
  கலாச்சாரக் காடுகளில்
  ஆழமாய் கிடந்தாலும்,
  கிளைகள் எல்லாம்
  வெளியூர்க் காற்றையே
  சுவாசித்துக் கிடக்கும் கவலை தான் எங்களுக்கு !

  வேர் காய்ந்து போனாலும் பூக்கள் மட்டும் சிரித்து குலுங்க வேண்டும் என்ற இயற்கைக்கு புறம்பான அர்த்தமற்ற கட்டாயத்திற்கு செடியை உட்படுத்துவது சாத்தியமா? அது எந்த வழியில் நியாயம் ? . கலையை வாழ வைக்கும் கலைஞன் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் தாழ்ந்து போகலாம். அதை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.ஆனால் அவன் படைப்புகள் மட்டும் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இது எந்த வகையில் நியாயம் ? . இந்த சூழ்நிலை தொடர அனுமதித்தால், இன்று தமிழனுடைய பல கலைகள் அருங்காட்சியகப்
  புகைப்படங்களாகி போனது போல, எதிர்காலத்தில் கதகளி கலைக்கும் ஒரு அபாயம் உண்டாகும் எனில் , அவர்கள் சந்ததியினருக்கு கற்றிட ஆர்வம் எப்படி வரும்?.அந்த நிலை ஏற்படாதிருக்க , இது போன்ற கலையின் சிறப்பை விளக்கும் கவிதைகள் வேண்டும்.

  கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை பேசியதை நினைவு கொள்ள வைத்து விட்டீர்கள்.
  “இங்கே நெருப்பு வேண்டும். ஆனால் சுடுதல் வேண்டாம். இங்கே நீர் வேண்டும். ஆனால் மழை வேண்டாம். இங்கே கவிதை வேண்டும். ஆனால் கவிஞன் வேண்டாம் .

  மிக உயரிய படைப்பு !!!!!

  நட்புடன்
  குகன்

  Like

 5. பொதி மூட்டை என முதல் பத்தியில் குறிப்பிட்டதற்கான காரணம் வரிகள் யாவும் இதயத்தை வலிக்கச் செய்தது.

  Like

 6. /கையடக்க கத்திகள் போர்வாளின் கூர்மை கொண்டவையாக இருக்க முடியுமா?. முடியும் என்பதற்கான முழு சாட்சியாய் இருக்கிறது //

  மிக்க நன்றி குகன் 🙂

  //கண்ணுக்கு தெரியும்படி இருந்த சேலையின் கிழிந்த முந்தானையை பரபரவென பின் பக்கம் இழுத்து விட்டு , வீட்டு வறுமையை கைகளால் மறைத்து , இன்முகத்தை எனக்கு பரிசளித்து தேநீர் கொடுக்கும் ஏழை நண்பன் தாயாய் தெரிந்தது இந்த வரிகள் கதகளி கலைஞர்களின் வறுமையை சொன்ன பொழுது//

  அப்பா…. ஒரு சிறுகதையையே வடித்து விட்டீர்கள் !!!

  //
  வேர் காய்ந்து போனாலும் பூக்கள் மட்டும் சிரித்து குலுங்க வேண்டும் என்ற இயற்கைக்கு புறம்பான அர்த்தமற்ற கட்டாயத்திற்கு செடியை உட்படுத்துவது சாத்தியமா? அது எந்த வழியில் நியாயம் ? . கலையை வாழ வைக்கும் கலைஞன் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் தாழ்ந்து போகலாம். அதை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.ஆனால் அவன் படைப்புகள் மட்டும் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இது எந்த வகையில் நியாயம் ? . இந்த சூழ்நிலை தொடர அனுமதித்தால், இன்று தமிழனுடைய பல கலைகள் அருங்காட்சியகப்
  புகைப்படங்களாகி போனது போல, எதிர்காலத்தில் கதகளி கலைக்கும் ஒரு அபாயம் உண்டாகும் எனில் , அவர்கள் சந்ததியினருக்கு கற்றிட ஆர்வம் எப்படி வரும்?.அந்த நிலை ஏற்படாதிருக்க , இது போன்ற கலையின் சிறப்பை விளக்கும் கவிதைகள் வேண்டும்
  //

  வெகு அருமையாய்,. தெளிவாய் சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் போல் கவிதைகளை அணு அணுவாய் நேசிக்கும் நண்பன் கிடைத்தால் எல்லாம் நிகழும் ! 🙂

  //
  மிக உயரிய படைப்பு !!!!!//

  மீண்டும் மீண்டும் நன்றிகள் நண்பரே !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.