கவிதை : இனிமேலுமா ?

ஒரு சுவாசத்துக்கும்
மறு சுவாசத்துக்கும்
இடைப்பட்ட
பொழுதிலும்
உனைச் சுவாசிக்க நினைக்கிறது
மனசு.

புதையல் தேடி
அலைவோர் மத்தியில்
புதையலோடு அலைவதாய்ப்
படுகிறது
நீ அருகில் இருக்கையில்.

உணர்வுகள்
மெலியும் போது
வலி
உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

இதயம் துடிக்கும்
ஓசை
இடிவிழும் ஓசையாய்
செவிகளை உடைக்கிறது.
என்
மன இருக்கையை நீ
மடித்து வைக்கும் போது.

நீ
பற்றவைக்கும் பார்வைகளை
என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும்
போதெல்லாம்
எரிந்து போகிறேன்.

இத்தனையும் சொன்னபின்னும்
நண்பனே
என்றழைக்காதே என்னை.
நான்
நட்புக்குத் துரோகம் செய்துவிட்டேன்.

20 comments on “கவிதை : இனிமேலுமா ?

 1. //நீ
  பற்றவைக்கும் பார்வைகளை
  என் மீது உரசிப் போடாமல்
  புறக்கணிக்கும்
  போதெல்லாம்
  எரிந்து போகிறேன்.//

  என்னா ஒரு கொடுமை பாருங்களேன்…

  கவிதை சூப்பர்ணே…

  Like

 2. அண்ணா இன்னும் மனம் ஒரு நிலைக்குள் வர மறுக்கிறது.பொறுத்து வருவேன்.

  Like

 3. உணர்வுகள்
  மெலியும் போது
  வலி
  உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

  Unnarvugalin valiyai arumaiyaai sollkindra sorkkgal

  Like

 4. //அண்ணா இன்னும் மனம் ஒரு நிலைக்குள் வர மறுக்கிறது.பொறுத்து வருவேன்.//

  என்னாச்சு தங்கச்சி ?

  Like

 5. //உணர்வுகள்
  மெலியும் போது
  வலி
  உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

  Unnarvugalin valiyai arumaiyaai sollkindra sorkkgal
  /

  நன்றி கார்த்திக் 🙂

  Like

 6. hi this is mind blowing, because i was fall in love with my vinod, before that he was my good friend so i think this one you have return for my sake,
  thank you zavier,

  Like

 7. அன்பின் சுகன்யா, உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எனது தோழி ஒருத்தியின் கதையை இந்தக் கவிதையாய் எழுதினேன். உங்கள் வாழ்வுக்கும் பொருந்திச் செல்வதறிந்து மகிழ்ச்சி 🙂

  Like

 8. மனதை தொடும் பதிவு வாழ்த்துக்கள்… ஒரு சந்தேகம் உணர்வுகள் மெலியும் போது இந்தவரிகள் புரியவில்லை விளக்கலாமா நண்பரே

  Like

 9. அன்புள்ள சேவியருக்கு,

  இத்தனையும் சொன்னபின்னும்
  நண்பனே
  என்றழைக்காதே என்னை.
  நான்
  நட்புக்குத் துரோகம் செய்துவிட்டேன்

  நட்பு காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் காதலாக மாறி விடுகிறது பல சமயங்களில். அந்தக் காதலின் பாதச் சுவடுகளை மனசில் நுழைய விட்டு பதிய வைத்த பின்னும், “எங்கள் நட்பின் திரைச்சீலை கிழிபடவில்லை , சமூகக் கண்களின் விழித்திரையில் தான் புரை ஏற்பட்டிருக்கிறது” எனச் சொல்லி தப்பிக்கும் எங்கள் ஜீன்ஸ் பான்ட் இளைஞர் கூட்ட பட்டாளத்தில் இருந்து விடுபட்டு , தன் காதலியிடம் (முன்னாள் தோழி) உண்மை ஒப்புவிக்கும் கவிதை நாயகனின் செயல்பாடு பிடித்திருக்கிறது.

  புதையல் தேடி
  அலைவோர் மத்தியில்
  புதையலோடு அலைவதாய்ப்
  படுகிறது
  நீ அருகில் இருக்கையில்

  தன் மனித வாழ்வின் அத்தனை தேடல்களுக்குமான ஒரே முற்றுப்புள்ளி கண்டுபிடித்து விட்டதான விஞ்ஞான திளைப்பு, தனக்கான பெண்ணொருத்தி கண்டதும் ,வாலிப வயதில் முளைக்கும் காதல் பல் கொடுக்கும்.குடலின் மூன்று நேர அறைகூவலுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்காய் பாய்ந்து ஓடும் மனிதப் பொம்மைகளை எண்ணிப் பரிகாசித்து, இயல்பாக நகையாடும் போக்கு அது காதல்வாசிகளுக்கு கொடுக்கும். ஏன் எனில் , அது காதல் உலகம்.

  உணர்வுகள்
  மெலியும் போது
  வலி
  உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

  கவித்துவ வண்ணம் இல்லாமலே காதல்துவம் நிறைவாய் பேச முடியும் என்பதற்கான எடுத்துகாட்டாய் விளங்கி நிற்கும் வரிகள்.

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்,
  குகன்

  Like

 10. நன்றி குகன். நீண்ட நாட்களுக்குப் பின் இணையம் பக்கம் வருகிறேன். உங்கள் விரிவான பின்னூட்டம் உற்சாகமூட்டுகிறது 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s