கவிதை : காதல் செய்.

காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.

தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.

நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.

ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.

பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.

கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.

பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.

இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.

புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.

காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.

42 comments on “கவிதை : காதல் செய்.

 1. //புலன்களுக்குச்
  சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,//

  சொடுக்கெடுக்கும் எனும் வார்த்தை இங்க போட்டிருப்பது நல்லா இருக்கு…

  நீங்கள் சொன்னதினால் ஒரு கவிதை தயார்… நாளை பதிவு… மறக்காமல் பார்க்கனும்…

  Like

 2. //காதலியுங்கள்,
  காதல்
  நாட்டிய மலர்களின் நந்தவனம்.
  தாண்டி வந்த திருப்தி
  தோல்வியிலும் தொடரும்.//

  அருமை..உண்மையும் கூட…
  அன்புடன் அருணா

  Like

 3. Pingback: Literature blog » Blog Archive » கவிதை : காதல் செய்.

 4. சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல,மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!

  Like

 5. //சொடுக்கெடுக்கும் எனும் வார்த்தை இங்க போட்டிருப்பது நல்லா இருக்கு…
  //

  நன்றி விக்கி 🙂

  //

  நீங்கள் சொன்னதினால் ஒரு கவிதை தயார்… நாளை பதிவு… மறக்காமல் பார்க்கனும்…

  //

  படித்தேன், ரசித்தேன்… 🙂

  Like

 6. ////காதலியுங்கள்,
  காதல்
  நாட்டிய மலர்களின் நந்தவனம்.
  தாண்டி வந்த திருப்தி
  தோல்வியிலும் தொடரும்.//

  அருமை..உண்மையும் கூட…
  அன்புடன் அருணா
  /

  நன்றி அருணா 🙂

  Like

 7. //சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல,மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!/

  மயக்கம் ! சரியான வார்த்தை 🙂

  Like

 8. Ya its very fantastic poem.I m also very much interested in writing poems.But this love poem is very impressed me a lot. Definitely that’s a true thing.
  _____________
  pradeepa

  Sreevysh Corp

  Like

 9. Muyarchi pannina mudiyathathu illappa. puriyuthu 10 person’s kitta kavithaya thiruvi onnu seathurukkenga. Summa jokemma very Nice.

  Like

 10. //Poovin Vaasanajil Thenai Undu, Ptanduda Thoor Marakantham, Kaalai Nulaitha Thaail Karuvinaip Perave, Anniyan Kaijil Kaniyaathal Kanden.//

  தமிழ்ல எழுதுங்க சிவா… இன்னும் மெருகு கூடும் !

  Like

 11. கவிதைகளின் முதல் தளம்
  பெரும்பாலும்
  காதலின் அடித்தளம் தான்.

  super line

  Like

 12. /கவிதைகளின் முதல் தளம்
  பெரும்பாலும்
  காதலின் அடித்தளம் தான்.

  super line
  //

  நன்றி பரிதா பானு 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.