கவிதை : உனது கைக்குட்டை !

ஓர்
புன்னகைப்
போர்களத்தின் அணிவகுப்பாய்
நீள்கிறது
உனைக் குறித்த நினைவு.

அழகின் புதைகுழியில்
மிதக்கும்
ஒற்றைமலராய் விரிகிறது
உன் புன்னகை.

அந்தப் புதைகுழிகளையே
புதைக்கும் குழிகள்
உன்
கர்வக் கன்னங்களில்
கூடுகட்டிக் குடியிருக்கின்றன.

உன்
வார்த்தைகளின் வசீகரத்தில்
வலையில் சிக்கிய மீன்களாய்
இளைய மனங்கள்
துடித்து அடங்குகின்றன.

உன்
விழியோரம் வழியும்
கனவுகளில்
வெட்கமும் விரவிக் கிடப்பதாய்
கண்பொத்தும்
இரவுகள் ரகசியம் சொல்கின்றன.

உன்
முத்தங்களின் அழுத்தத்திலும்
நெஞ்சத்தின் நெருக்கத்திலும்
தலையணை
நிலைகுலைந்ததாய்
போர்வைகள் கிசு கிசுக்கின்றன.

உன்
இரவுக் கனவுகளின் வெப்பத்தை
ஜாமங்களில் நீ அருந்தும்
தண்ணீர் தான் தணிப்பதாய்
இரவு விளக்கு விளக்கம் சொல்கிறது.

உன்
மோக நினைவுகளின் மிச்சங்களை
டைரிகளின் அறைகளில்
வெட்கத்துடன் நிறைத்து வைப்பதாய்
உன்
விரல் தொட்ட பேனா
குரல் தொட்டு சொல்கிறது.

எனினும்,
எதுவும் நடவாததுபோல்
நீ
நடந்து செல்கையில்
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது
உன் கைக்குட்டை.

14 comments on “கவிதை : உனது கைக்குட்டை !

 1. அந்தப் புதைகுழிகளையே
  புதைக்கும் குழிகள்
  உன்
  கர்வக் கன்னங்களில்
  கூடுகட்டிக் குடியிருக்கின்றன.

  alagana uvamai

  elimayana varigal xlent xavier

  Like

 2. கவிதைக்காக படமா?அல்லது இப்படி ஒரு படம் போடுவதற்காக கவிதை எழுதினீர்களா?இருந்தாலும் நல்ல கவிதை.

  Like

 3. //கவிதைக்காக படமா?அல்லது இப்படி ஒரு படம் போடுவதற்காக கவிதை எழுதினீர்களா?இருந்தாலும் நல்ல கவிதை//

  நன்றி செல்வம். கவிதைக்காக படம் 🙂

  Like

 4. %
  உன்
  முத்தங்களின் அழுத்தத்திலும்
  நெஞ்சத்தின் நெருக்கத்திலும்
  தலையணை
  நிலைகுலைந்ததாய்
  போர்வைகள் கிசு கிசுக்கின்றன.

  உன்
  இரவுக் கனவுகளின் வெப்பத்தை
  ஜாமங்களில் நீ அருந்தும்
  தண்ணீர் தான் தணிப்பதாய்
  இரவு விளக்கு விளக்கம் சொல்கிறது.
  %

  porvaiyin mogathaiyum,velakkin thaabathaiyum mozhi peyartha ungal varthaikalukku vazthukkal xavier……….

  karthick

  Like

 5. kai kuttai thalaippukkum, udai kuttai padathukkumaana sambandham ennanu sonna nalla irukkum thozhalre………

  Karthick

  Like

 6. //kai kuttai thalaippukkum, udai kuttai padathukkumaana sambandham ennanu sonna nalla irukkum thozhalre………//

  ஹா…ஹா… நல்ல வார்த்தை நயம் உங்கள் பின்னூட்டத்தில் 😉 வேண்டுமெனில் கைக்குட்டையே உடையாகி விட்டது என வைத்துக் கொள்ளலாம் 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.