கவிதை : இது மட்டும்

எழுதி முடித்த மறுவினாடி
பழசாகின்றன
புள்ளி விவரங்கள்.

வாசித்து மடித்த
மறு வினாடி
பழசாகின்றன கடிதங்கள்.

கைகுலுக்கிக் கடந்து போன
அடுத்த கணம்
விரல்களிலிருந்து
உதிர்கிறது நட்பு.

விடைபெற்று
வேறோர் விரல் பிடித்து
நடை பெற்றவுடன்
கசப்பாய் வழிந்தது காதல்.

கடந்த வினாடியின்
நீட்சியில்
புது வினாடிகளே
முளைக்கின்றன.

புதிதென்று சொந்தம் கொள்ள
கடந்த வினாடியின்
வரலாற்றுப் பரப்பில்
ஏதுமேயில்லை.

வாசல் காத்திருந்து
தோள் தாவும்
மழலையின் குதூகலம் தவிர்த்து.

13 comments on “கவிதை : இது மட்டும்

  1. அருமை….சேவியர்…மாற்றங்கள்…மட்டுமே…மாறாமல்..மறிப்போகும்….அனுபவிபோம்.

    Like

  2. //ஆண்டவா பாருப்பா எப்படியெல்லாம் ‘ஏ’வாக பேசுகிறார்கள் இந்த மனிதர்கள். //

    என்னப்பா… நாத்திகன் மாதிரி ஒரு இடத்துல பேசறே… அப்படியே இங்கே வந்து பல்டி அடிச்சு ஆண்டவனை கூப்பிடறே. உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலையே 😀

    Like

  3. //நிச்சயமா…. ஆனா அதுக்காக அவசரப்படாதே. முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிக்கோ//

    ஆண்டவா பாருப்பா எப்படியெல்லாம் ‘ஏ’வாக பேசுகிறார்கள் இந்த மனிதர்கள். அவர்களை மன்னிக்க வேண்டும்…

    Like

  4. //நல்லா இருக்கு, குழந்தைகள் என்றாலே இன்பம் இல்லையா//

    நிச்சயமா…. ஆனா அதுக்காக அவசரப்படாதே. முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிக்கோ 😀

    Like

  5. //கைகுலுக்கிக் கடந்து போன
    அடுத்த கணம்
    விரல்களிலிருந்து
    உதிர்கிறது நட்பு.//

    நல்லா இருக்கு, குழந்தைகள் என்றாலே இன்பம் இல்லையா? 🙂

    Like

  6. //கூர்ந்த பார்வை..
    நல்ல கவிதை. அருமையாக முடித்திருக்கிறீர்கள்.//

    நன்றி முத்துவேல் 🙂

    Like

  7. //எவ்வளவு உண்மை?????இது தெரியாமல் இது என்னுடையது என்று எத்தனை விஷயங்களில் இறுமாப்பு இருக்கிறது நம்மிடம்????
    உண்மை அறைகிறது கன்னத்தில் பளாரென்று….
    //

    மனமார்ந்த நன்றிகள் அருணா 🙂

    Like

  8. /அண்ணா உங்கள் கவிதைகள் மட்டும் எப்போதுமே புதிது.வாசித்துப் போனாலும் மனதிற்குள் அதிர்வு அல்லது அலசல் ஒன்றை தந்துவிட்டுத்தான் செல்லும்.அண்ணா உங்கள் இடுகைகள் முழுதாய் வாசிக்க முடியவில்லை.நான் அப்பா அம்மாவுடன் சிங்கப்பூரில் நிற்கிறேன்.சீக்கிரம் வந்துவிடுவேன்.

    //

    அம்மா அப்பாவுடன் செலவிடும் பொழுதுகள் பலகோடி கவிதைகளுக்குச் சமம். எனவே நேரத்தை இணையத்தில் செலவழித்து விடாதே சகோதரி 🙂

    Like

  9. கூர்ந்த பார்வை..
    நல்ல கவிதை. அருமையாக முடித்திருக்கிறீர்கள்.

    Like

  10. //புதிதென்று சொந்தம் கொள்ள
    கடந்த வினாடியின்
    வரலாற்றுப் பரப்பில்
    ஏதுமேயில்லை//

    எவ்வளவு உண்மை?????இது தெரியாமல் இது என்னுடையது என்று எத்தனை விஷயங்களில் இறுமாப்பு இருக்கிறது நம்மிடம்????
    உண்மை அறைகிறது கன்னத்தில் பளாரென்று….
    அன்புடன் அருணா

    Like

  11. அண்ணா உங்கள் கவிதைகள் மட்டும் எப்போதுமே புதிது.வாசித்துப் போனாலும் மனதிற்குள் அதிர்வு அல்லது அலசல் ஒன்றை தந்துவிட்டுத்தான் செல்லும்.அண்ணா உங்கள் இடுகைகள் முழுதாய் வாசிக்க முடியவில்லை.நான் அப்பா அம்மாவுடன் சிங்கப்பூரில் நிற்கிறேன்.சீக்கிரம் வந்துவிடுவேன்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.