கவிதை : அருகிருக்கும் மௌனம்

எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.

ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.

அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.

தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.

சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.

20 comments on “கவிதை : அருகிருக்கும் மௌனம்

 1. //தொலைபேசியில்
  ஒலிக்கும்
  உன் குரலை விட
  உன்னோடு அமர்ந்திருக்கும்
  மெளனம் தான்
  அழகெனக்கு//

  என்ன அருமையான உணர்வுகள்……அழகுதான்…
  அன்புடன் அருணா

  Like

 2. சீக்கிரம் வந்து விடு
  தூர தேசத்தில்
  கரன்சி சேமித்தது போதும்.
  வந்தென் கரம் உரசி
  சேமித்த காதலைச் செலவிடு.
  unmail en manaivi ennidam sonnavai

  Like

 3. anna arumaiyana pathivu .
  final touch thaan intha pathivoda highlight

  naan tharpotulla illan padaipalikalil ” thabu sanker. sezhian,yugabharathi,na.muthukumar apuram thaangal” udaya rasigan

  nandri
  bala

  Like

 4. /////தொலைபேசியில்
  ஒலிக்கும்
  உன் குரலை விட
  உன்னோடு அமர்ந்திருக்கும்
  மெளனம் தான்
  அழகெனக்கு.//
  மென்மையான நல்ல கவிதை//

  மிக்க நன்றி நண்பரே 🙂

  Like

 5. ////தொலைபேசியில்
  ஒலிக்கும்
  உன் குரலை விட
  உன்னோடு அமர்ந்திருக்கும்
  மெளனம் தான்
  அழகெனக்கு//

  என்ன அருமையான உணர்வுகள்……அழகுதான்…
  அன்புடன் அருணா

  //

  மிக்க நன்றி அருணா

  Like

 6. //
  சீக்கிரம் வந்து விடு
  தூர தேசத்தில்
  கரன்சி சேமித்தது போதும்.
  வந்தென் கரம் உரசி
  சேமித்த காதலைச் செலவிடு.
  unmail en manaivi ennidam sonnavai
  //

  🙂 நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு.

  Like

 7. //anna arumaiyana pathivu .
  final touch thaan intha pathivoda highlight

  naan tharpotulla illan padaipalikalil ” thabu sanker. sezhian,yugabharathi,na.muthukumar apuram thaangal” udaya rasigan

  nandri
  bala

  //

  மிக்க நன்றி பாலா. இந்த வரிசையை தலைகீழாக வாசித்தால் என் ரசனைக்குரியவர்களின் வரிசை வரும் 😀

  உங்கள் பின்னூட்டம் மனதுக்கு நிறைவளிக்கிறது ! நன்றிகள் மீண்டும்.

  Like

 8. ” தூர தேசத்தில்
  கரன்சி சேமித்தது போதும்.
  வந்தென் கரம் உரசி
  சேமித்த காதலைச் செலவிடு ”

  வந்தபின் செலவாகப்போவது காதல்மட்டுமல்ல, கரன்சியும்தான்…

  நித்தில்

  Like

 9. ஆஹா சூப்பரு… இதை ஆண் பெண்ணிடம் சொன்னால் கூட சரியாக அமையும்… இதை பிரிண்ட் எடுத்து பொண்ணுங்ககிட்ட் ஐப்படி பேசுங்கடானு நாலு பசங்ககிட்ட கொடுத்தா என்னனு தோணுது? 😛

  Like

 10. // தூர தேசத்தில்
  கரன்சி சேமித்தது போதும்.
  வந்தென் கரம் உரசி
  சேமித்த காதலைச் செலவிடு ”

  வந்தபின் செலவாகப்போவது காதல்மட்டுமல்ல, கரன்சியும்தான்…

  நித்தில்
  //

  எனினும் வாழ்வின் முதன்மை உறவுகளில் இருக்க வேண்டும். கரன்சிகள் வெறும் கருவிகள் மட்டுமே !

  Like

 11. //ஆஹா சூப்பரு… இதை ஆண் பெண்ணிடம் சொன்னால் கூட சரியாக அமையும்… இதை பிரிண்ட் எடுத்து பொண்ணுங்ககிட்ட் ஐப்படி பேசுங்கடானு நாலு பசங்ககிட்ட கொடுத்தா என்னனு தோணுது//

  ஐடியா கொடுத்தவன் எவண்டா ன்னு கேட்டா என் பெயரைச் சொல்லாம இருந்தீங்கன்னா ஓக்கே ! 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.