கவிதை : இளமைக் காதல்

ஒவ்வொரு முறையும்
தொலைபேசி ஒலிக்கும் போது
மனதின் மதில்ச்சுவர்களில்
ஆக்ரோஷமாய் அடிக்கும்
ஆனந்த அலையை
நீயில்லை எனும்போது எழும்
ஏமாற்றத்தில்
உள்ளிளுத்துக் கொள்கிறது
இதயக் கடல்…

மெதுவாய்
சிவந்த இதழ்களை வருடி
உன் தோட்டத்து
ரோஜாவுக்கு
நீ
முத்தம் தரும் போதெல்லாம்
எது ரோஜா
என்று தெரியாமல்
தடுமாறி நிற்கிறது என் மனசு…

ஒரு சிறுகதை படித்தேன்
என்று
புத்தகத்தை அணைத்துக் கொண்டு
என்னிடம் நீ
கதை சொல்லும் போதெல்லாம்
உன்
இமைகளின் படபடப்பில்,
விரியும் புருவத்தின் பரபரப்பில்,
அசையும் உதடுகளின் அழகிய நாட்டியத்தில்
ஆயிரம் ஹைக்கூக்கள் படித்துவிட்டு,
நல்லாயிருக்கா
என்று நீ கேட்கும் போதெல்லாம்
மிகவும் அருமை என்றிருக்கிறேன்
சிறுகதையின் ஒரு வரிகூட கேட்காமல்….

பாதி நேரம்
உன்னை
மறக்கவேண்டுமென்று
நினைக்கிறேன்.
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்….

சிவந்த
உன் சிறிய உதடுகளில்
நீ
சாயம் பூசும் போது
உதட்டுச் சாயம் கொஞ்சம்
நிறம் திருடிக் கொள்கிறதே
கவனித்தாயா கண்மணி ?

உன்
முகம் பார்க்கும் கண்ணாடியை
நான் திருடிவிட்டேன்
மன்னித்துவிடு…
உன் பிம்பம் விழுந்த
பிரதேசங்கள் மீது எனக்குப்
பயங்கர பொறாமை ..

ஓரமாய் அமர்ந்து
நகம் வெட்டுகிறாய்.
விலகிக் கொஞ்சம்
விரல் வெட்டுவாயோ,
எனும்
என் பதட்டத்தின்
பல்லிடுக்கில்
உதட்டு இரத்தம் ஒட்டுகிறது.

நீ
பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
என்றுதான்
தொடர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப்படத்தை.

விஷயம் தெரியுமா உனக்கு ?
நீ
என் தோட்டப் பூவைத்தான்
தினசரி சூடுகிறாய்,
உன்
பூக்காரிக்கும் எனக்குமான நட்புக்கு
என்
காதலின் வயது.

Advertisements

28 comments on “கவிதை : இளமைக் காதல்

 1. நீ
  பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
  என்றுதான்
  தொடர்ந்து
  பார்த்துக் கொண்டிருக்கிறேன்
  உன் புகைப்படத்தை.

  xavier sir really nice thanks to bala

  Like

 2. %
  ஒரு சிறுகதை படித்தேன்
  என்று
  புத்தகத்தை அணைத்துக் கொண்டு
  என்னிடம் நீ
  கதை சொல்லும் போதெல்லாம்
  உன்
  இமைகளின் படபடப்பில்,
  விரியும் புருவத்தின் பரபரப்பில்,
  அசையும் உதடுகளின் அழகிய நாட்டியத்தில்
  ஆயிரம் ஹைக்கூக்கள் படித்துவிட்டு,
  நல்லாயிருக்கா
  என்று நீ கேட்கும் போதெல்லாம்
  மிகவும் அருமை என்றிருக்கிறேன்
  சிறுகதையின் ஒரு வரிகூட கேட்காமல்….
  %

  Kadhalanin unarvugalai arumaiyai sollgiradhu xavier….

  Like

 3. //உன் தோட்டத்து
  ரோஜாவுக்கு
  நீ
  முத்தம் தரும் போதெல்லாம்
  எது ரோஜா
  என்று தெரியாமல்
  தடுமாறி நிற்கிறது என் மனசு…//

  முத்தம் வாங்கிய ரோஜாவை தேடிய தருணங்கள் உண்டா?

  Like

 4. ////உன் தோட்டத்து
  ரோஜாவுக்கு
  நீ
  முத்தம் தரும் போதெல்லாம்
  எது ரோஜா
  என்று தெரியாமல்
  தடுமாறி நிற்கிறது என் மனசு…//

  முத்தம் வாங்கிய ரோஜாவை தேடிய தருணங்கள் உண்டா
  //

  இல்லை… கொடுத்ததை மட்டுமே 🙂

  Like

 5. //நீ
  பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
  என்றுதான்
  தொடர்ந்து
  பார்த்துக் கொண்டிருக்கிறேன்
  உன் புகைப்படத்தை.

  xavier sir really nice thanks to bala
  //

  நன்றி தமிழ்ச் செல்வி & பாலா 🙂

  Like

 6. //nice Kavidhai boss! But why these pictures? I am unable to read in office!! ha ha ha!//

  😀 படங்கள் நிச்சயமா நீங்க ஆபீஸ் ல மாட்டணுன்னு இல்லை 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s