கவிதை : கண்ணாடிகளற்ற அறைகள்

கண்ணாடிகளற்ற அறைகள்
இறுக்கமாய் இருக்கின்றன.

நெரிசல் பேருந்தில்
நெருக்கி நுழையும்
பெரியவரைப் போல
அவஸ்தையாய் இருக்கின்றன அவை.

மழலைகள்
அழகு காட்டி
ஆடிப் பாடும் பரவசமும்,

அழகைப் பார்த்து
கர்வம் கூட்டும்
கன்னியரின் பெருமிதமும்
இன்றி

இடிபாடுகளுக்கிடையே
மூச்சுத் திணறும்
இயலாதவன் போல
இருக்கின்றன அவை.

எட்டிப் பார்க்கையிலெல்லாம்
நான்
உயிருடன் இருப்பதை
உறுதி செய்கின்றன
கண்ணாடிகள்

கடந்த பின்போ
பிம்பங்களை உதிர்த்து
ஏதுமறியாமல் நிற்கின்றன
சிக்னலில்
கையூட்டு வாங்கும் காவலரைப் போல

கண்ணாடிகளற்ற அறைகள்
இறுக்கமாய் இருக்கின்றன.

17 comments on “கவிதை : கண்ணாடிகளற்ற அறைகள்

  1. ======
    கடந்த பின்போ
    பிம்பங்களை உதிர்த்து
    ஏதுமறியாமல் நிற்கின்றன
    சிக்னலில்
    கையூட்டு வாங்கும் காவலரைப் போல
    ======

    இந்த உவமை புதுமை

    அன்புடன் புகாரி

  2. எட்டிப் பார்க்கையிலெல்லாம்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்

    Nice one..

  3. அழகிய எண்ண ஓட்டம் …சரளமான வார்த்தை கோர்வை ….வாழ்த்துக்கள் …தொடர்ந்து எழுதுங்கள் ….நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன்…பாருங்களேன்
    valaikkulmazhai.wordpress.com
    கார்த்தி

  4. எட்டிப் பார்க்கையிலெல்லாம்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்

    ரொம்ப நல்லா இருக்கு…🙂

  5. //எட்டிப் பார்க்கையிலெல்லாம்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்

    ரொம்ப நல்லா இருக்கு
    //

    மிக்க நன்றி மாதரசன்.🙂

  6. //அழகிய எண்ண ஓட்டம் …சரளமான வார்த்தை கோர்வை ….வாழ்த்துக்கள் …தொடர்ந்து எழுதுங்கள் ….நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன்…பாருங்களேன்
    valaikkulmazhai.wordpress.com
    கார்த்தி//

    மிக்க நன்றி.. நிச்சயம் பார்க்கிறேன்

  7. //எட்டிப் பார்க்கையிலெல்லாம்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்

    Nice
    //

    நன்றி ஜமீர்.

  8. //எட்டிப் பார்க்கையிலெல்லாம்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்//

    fentastic

  9. எட்டிப் பார்க்கையில்
    நான்
    உயிருடன் இருப்பதை
    உறுதி செய்கின்றன
    கண்ணாடிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s