கவிதை : கலாசாரப் பிழைகள்

அடுத்த தலைமுறையின்
சாயங்காலம்
எப்படி இருக்குமோ ?
நினைக்க முடியவில்லை.

மணிக்கட்டுகளில்
சின்னதாய் ஒரு கணிப்பொறி
ஒட்டியிருக்கலாம்.

வாகனங்கள் எல்லாம்
வானத்தில்
அடுக்கடுக்காய்
அலைந்து திரியலாம்.

மூச்சுக் குழாய்க்கு
ஆக்சிஜன் வேண்டுமென்று
மூன்று மாதம் முன்பே
மனுக்கொடுக்க வேண்டிவரலாம்.

தாகத்தின் தேவைக்கு
காற்றைப் பிழிந்து
கலத்திலோ நிலத்திலோ
தண்ணீர் பிடிக்கலாம்.

அறிவியலுக்கு
அப்பால் சென்று,
அறிவியலோடு கதை பேசலாம்.

முன்பெல்லாம்
இணையத்துக்கு
தொலைபேசி இணைப்பு வேண்டுமாம் !
தொலைபேசியை நோக்கி
நாம் தான் போக வேண்டுமாம்,
என்றெல்லாம்
குழந்தைகள் வியக்கலாம்.

ஏதேனும்
தமிழார்வக் குழந்தைகள்,
அதென்னப்பா தண்ணீர்ப் பாசனம்
என்று
தந்தையிடம் வினவலாம்.

ஒரு வரியில்
ஒரு எழுத்தென்று,
கவிதை வடிவங்கள்
நீள்கோடாய் வழியலாம்.

நல்ல வேளை,
அறிவியல் யுகத்தில்
பிறந்திருக்கிறோம் நாமென்று
பதின் வயதுப் பெற்றோர்
பெருமையாய் பேசலாம்.

நல்ல வேளை,
மிச்சம் மீதிக் கலாச்சாரம்
கரைந்து போகும் முன் பிறந்தேனென்று
செத்துபோன
ஏதோ ஒரு தாத்தாவின் டைரி எழுத்தை
எங்கேனும் ஒரு கணினி
ஒளி விரித்துப் படிக்கலாம்.

23 comments on “கவிதை : கலாசாரப் பிழைகள்

 1. இப்படியெல்லாம் எப்படித்தான் யோசிக்கறீங்களோ!

  உங்களின் கற்பனை கால எலலைகளைத் தாண்டி விரிந்துகொண்டே இருக்கிறது.

  நேசமுடன்,
  சங்கர்.

 2. /*மூச்சுக் குழாய்க்கு
  ஆக்சிஜன் வேண்டுமென்று
  மூன்று மாதம் முன்பே
  மனுக்கொடுக்க வேண்டிவரலாம்.*/
  நிஜமா இருக்குமோனு பயமா இருக்குங்க…

  மிகஅழகாக எழுதி இருக்கிறீர்கள்…

 3. யோசிக்கவேண்டிய..கவிதை…அநேகமாக…அந்த டைரி…என்னுடையதாக..இருக்கக்கூடும்..(தாத்தா…அல்ல…பாட்டி..)

 4. நல்ல கற்பனை, ரசித்தேன்.

  ம்….நடந்தாலும் நடக்கலாம் யார் கண்டது.

 5. //*மூச்சுக் குழாய்க்கு
  ஆக்சிஜன் வேண்டுமென்று
  மூன்று மாதம் முன்பே
  மனுக்கொடுக்க வேண்டிவரலாம்.*/
  நிஜமா இருக்குமோனு பயமா இருக்குங்க…

  மிகஅழகாக எழுதி இருக்கிறீர்கள்
  //

  மனமார்ந்த நன்றிகள் அமுதா🙂

 6. //இப்படியெல்லாம் எப்படித்தான் யோசிக்கறீங்களோ!

  உங்களின் கற்பனை கால எலலைகளைத் தாண்டி விரிந்துகொண்டே இருக்கிறது.

  நேசமுடன்,
  சங்கர்.

  //

  நன்றி சங்கரன்🙂 மனித கற்பனை சென்செக்ஸ் மாதிரி வீழ்ச்சி அடையாது இல்லையா😉

 7. //நல்லா இருக்கு… முன்பு இந்தக் கவிதையை பதிப்பித்துள்ளிர்களா?

  //

  இல்லை தம்பி.. படத்தை மட்டும் பதிப்பித்திருக்கிறேன் வேறொரு கவிதையில்😀

 8. “ஒரு வரியில்
  ஒரு எழுத்தென்று,
  கவிதை வடிவங்கள்
  நீள்கோடாய் வழியலாம்”

  இப்பவே இப்படி வந்திடுச்சுங்க

  “நல்ல வேளை,
  மிச்சம் மீதிக் கலாச்சாரம்
  கரைந்து போகும் முன் பிறந்தேனென்று
  செத்துபோன
  ஏதோ ஒரு தாத்தாவின் டைரி எழுத்தை
  எங்கேனும் ஒரு கணினி
  ஒளி விரித்துப் படிக்கலாம்”

  உண்மைதான்….

 9. உலகம் போகிற போக்கில் உங்கள் கற்பனை நிஜமாகும் காலம் வெகு தூரம் இல்லை.

 10. ***
  நல்ல வேளை,
  மிச்சம் மீதிக் கலாச்சாரம்
  கரைந்து போகும் முன் பிறந்தேனென்று
  செத்துபோன
  ஏதோ ஒரு தாத்தாவின் டைரி எழுத்தை
  எங்கேனும் ஒரு கணினி
  ஒளி விரித்துப் படிக்கலாம்.
  ***

  மிகவும் ரசித்தேன்… அற்புதமான வரிகள்…

 11. Our future genaration consider you as Nasto (Who is predict the futue…am i correct… im not sure ) to predict these thing at 2008.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s