கவிதை : முத்தக்கூடு

முல்லைப்பூஞ் சிரிப்பினிலே
முள்தைத்துப் போனவளே
பிச்சிப்பூஞ் சிரிப்பாலே
பிடுங்கிடவே மாட்டாயோ ?

0

பாலைப்போல் புன்னகைத்து
வேலொன்றைத் தைத்தவளே
சேலைதன் தலைப்பாலே
சரியாக்க மாட்டாயோ ?

0

காலைப்பனி கதிரவனால்
களவாடும் நிலைபோலே
காதல்கனி ஒன்றாலே
பசியாற்ற மாட்டாயோ ?

0

நதிமேலே சுதிபோடும்
அலைபோலே அலைபவளே
கதிநீயே என்றேனே
கண்பார்க்க மாட்டாயோ ?

0

கண்ணுக்குள் மயிலிரண்டைக்
கட்சிதமாய் வளர்ப்பவளே
வானவெளி விண்மீனாய்க்
கண்சிமிட்டிப் பாராயோ ?

0

உன்னழகை வரைகையிலே
என்விழியைத் திறப்பதில்லை
விழியிரண்டைத் திறந்தாலும்
வெளியேறாய் புரிவாயோ ?

0

நித்திரையில் சித்திரத்தை
பத்திரமாய் முத்தமிட்டு
பொத்திவைத்த சத்தியத்தைப்
பத்தியமாய் பார்த்தேனே.

0

சோலைக்கிளி நீயெந்தன்
கூட்டுக்குள் குடிவந்தால்
கவலைதரும் கனவுகளும்
அனுமதியேன் அறிவாயோ ?

0

முத்தத்தால் கூடுகட்டி
மொத்தமுமே உயிலெழுதி
செத்துநான் வீழும்வரை
சேர்ந்திருப்பேன் அறியாயோ ?

15 comments on “கவிதை : முத்தக்கூடு

  1. முத்தத்தால் கூடுகட்டி
    மொத்தமுமே உயிலெழுதி
    செத்துநான் வீழும்வரை
    சேர்ந்திருப்பேன் அறியாயோ ?

    Great lines…

  2. நினைவுகளை சுமந்தபடி….!

    ஜில் என்ற குளிர் காற்று..
    அடை மழை!
    மனதில் சுகமான
    உன் நினைவுகளை சுமந்தபடி
    நான் மட்டும் தனியே
    ஜன்னல் ஓரத்தில்!
    அடை மழை,
    ஒவ்வொரு மழை துளியும்
    உன் நினைவையூட்டுகிறது!

    நான் உன்னை
    நினைத்து ஆசைபட்டது
    நானும் நீயும் மட்டும் இதில்..!

    பரந்த புல் வெளியில்
    யாருமில்லா தனிமையில்
    நானும்
    என்மேல் விழும்
    மழை துளியாக நீயும்!

    உன்னுடன் நானும்
    என்னுடன் நீயும்
    முழுதாய் கலந்து
    நனைந்து கொண்டோம்!

    என்மேல் விழுந்த
    ஒவ்வொரு துளியும்
    உன் முத்தங்களாக….!
    தடுத்தும் முடியவில்லை
    பார்த்தாயா உனது லீலையை!

    என் மேல்
    விழாத துளிகளுக்கு
    பொறாமை உன் மேல்!

    அட,
    பொறுக்கவில்லையா உனக்கு ..?
    அதற்குள் என் சந்தோஷத்தை
    பறித்துக்கொண்டு போகின்றாயே..?!

    அதே ஜன்னல் ஓரத்தில்
    உனக்காக அந்த நொடியில்
    என் மனதில்
    “துளியாய் விழுந்த” கவிதை இதுதான்….

    “உன்னை ´எதிரில்´
    பார்க்காத நாட்களைவிட
    ´எதிர்´ பார்த்த நாட்களே
    அதிகம்! மீண்டும் வருவாயா?

    ” அடை மழை வரும்
    அதில் நனைவோமே….
    குளிர் காய்சலோடு சினேகம்
    ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்…!”
    இதுகூட வெறும் கற்ப்பனை தானே!
    நிஜமானால்?!
    உன் நினைவுடன் நான்!

  3. supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s