கவலைகளின் மீது
கல்லெறியக் கற்றுக் கொண்டேன்.
நேற்றுவரை
என் இதயத்துக்குள் விழுந்த
இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு
சோகத்தை மட்டுமே
ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில்.
புரிந்து விட்டது…
வாழ்க்கை என்பது
கவலை ஆணிகளால் நெய்யப்படும்
சவப்பெட்டி அல்ல.
அதோ
அந்த நீள் கடலின்
சிறு துளி நான்…
இதோ
இந்த மணல் மேட்டின்
ஒரு அணு நான்…
என் கரங்களின் ரேகையைப்
பிடுங்கி விட்டு
பூமத்திய ரேகையைப்
புகுத்த முடியாது.
அழுத்தமாய் இழுத்தாலும்
அட்சக்கோடுகள்
அறுந்து விழப்போவதில்லை !!!
துருவங்களுக்குத்
திருகாணி மாட்டி
உலக உருண்டையை என்
மேஜை மீது மாட்ட முடியாது.
விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்
ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
அதிகாலையில் ஜன்னல் திறந்ததும்
முகத்தை முத்தமிடும்
அந்த பனிக்காற்று முதல்…
அந்தியில்
முச்சந்தியில்
அவிழ்க்கப்படும் அரட்டைகள் வரை…
பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.
இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையின் இரண்டு பக்கமும்
சந்தோஷங்கள் மட்டுமே
சேமித்து வைக்கிறேன்…
கவலைக் கற்களைக் கொண்டு
சுய கல்லறை கட்டிக் கொள்வதை
நிறுத்தியபின்
சாயம் பூசா சம்பா அரிசிபோல
சோக மூட்டைகள்
கழனிகளுக்கே திரும்பிவிடுகின்றன.
அண்ணா இந்தக் கவிதை நீங்கள் எனக்காகவே எழுதியது மாதிரி.நன்றி அண்ணா.சந்தோஷமும் கவலையும் எங்கள் மனதில்தான்.பூக்காட்டுக்கு நடுவில் நின்றுகொண்டே பூக்களைத் தேடுவது போல்தான் வாழ்க்கை.என்னதான் சொன்னாலும் மூளை ஒன்றைச் சொல்ல மனம் ஒன்றைச் சொல்கிறதே!
LikeLike
**
பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.
**
ellarukkum idhu purindhu vittal….nirkkum idamattumall nenaikkum idamellam nandhavanan dhaan thozhare……
LikeLike
//அண்ணா இந்தக் கவிதை நீங்கள் எனக்காகவே எழுதியது மாதிரி.நன்றி அண்ணா.சந்தோஷமும் கவலையும் எங்கள் மனதில்தான்.பூக்காட்டுக்கு நடுவில் நின்றுகொண்டே பூக்களைத் தேடுவது போல்தான் வாழ்க்கை.என்னதான் சொன்னாலும் மூளை ஒன்றைச் சொல்ல மனம் ஒன்றைச் சொல்கிறதே!
//
நன்றி சகோதரி 🙂
மூளை சொல்வது அறிவு சார் விஷயம்… மனம் சொல்வதைப் பின்பற்றுங்கள் 🙂
LikeLike
//ellarukkum idhu purindhu vittal….nirkkum idamattumall nenaikkum idamellam nandhavanan dhaan thozhare……//
கலக்கிட்டீங்க கார்த்திக். நன்றி 🙂
LikeLike
அழகான கவிதை…
LikeLike
நல்ல கவிதை…
LikeLike
நன்றி விக்கி
LikeLike
நன்றி அமுதா 🙂
LikeLike
பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.
“anna intha varthaikal rompavey yasika vachiduchu”
கவலைக் கற்களைக் கொண்டு
சுய கல்லறை கட்டிக் கொள்வதை
நிறுத்தியபின்
சாயம் பூசா சம்பா அரிசிபோல
சோக மூட்டைகள்
கழனிகளுக்கே திரும்பிவிடுகின்றன
(“vera onnum solla mudiyathu ” arumai”)
antha “sayam poosa sampa arisi ” rompavey arumai
iyalpai alaga opiturikeenga
nalla iruku
LikeLike
//“anna intha varthaikal rompavey yasika vachiduchu”//
ரொம்ப நன்றி தம்பி !
//antha “sayam poosa sampa arisi ” rompavey arumai
iyalpai alaga opiturikeenga
nalla iruku
//
ரொம்ப நன்றி தம்பி…
இந்த வார்த்தை என் நண்பன் அசோகன் ஒருவன் சொல்லும் வார்த்தை. “எவனும் மதிக்க மாட்டேங்கறான்… சாயம் போன சம்பா அரிசி மாதிரி …” ன்னு… 🙂
LikeLike
விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்
xlent xavier
LikeLike
நன்றி தமிழ் செல்வி 🙂
LikeLike
Xavier,
I know you through one of my friend, I have read your books.
This line reflects the real life….
விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்
– In recent days I never come across this thought process from any one…
yadharathathai meeradha ungal karpanai…
neengal menmel valara vazhthukkal
Durai
LikeLike