கவிதை : கண்ணாடிகள்

o

நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்.

o

சிக்னல்கள் வணக்கத்துக்குரியவை
உதட்டையும்
புருவத்தையும் சரிசெய்யும்
பருவப் பெண்களுக்கு

o

கண்ணாடிகள்
முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
சிரிக்கின்றன
முகத்தைத் திருப்பி
சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்.

o

நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.

o

உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி

22 comments on “கவிதை : கண்ணாடிகள்

  1. ”முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
    சிரிக்கின்றன
    முகத்தைத் திருப்பி
    சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்” super linesnga,thanks

    Like

  2. “உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    மனிதர்களைப் போலன்றி”

    superb. thanks.

    Like

  3. //நகைக்கடைகளிலும்
    துணிக்கடைகளிலும்
    சலூன் கடையிலும்
    எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
    என்னையும்
    அழகாய் காட்டும் கண்ணாடிகள்//
    சூப்பர்.
    (நீங்களும் நம்மளப் போலதானா?)

    Like

  4. உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    கண்ணாடிகள்
    மனிதர்களைப் போலன்றி
    super sir

    Like

  5. ////–உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    கண்ணாடிகள்
    மனிதர்களைப் போலன்றி–//

    சூப்பர்
    //

    நன்றி மாதரசன்.

    Like

  6. /அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
    இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
    ம்…..//

    நன்றி சகோதரி.

    Like

  7. //“”உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    கண்ணாடிகள்
    மனிதர்களைப் போலன்றி””

    யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.

    – சாந்தி
    //

    நன்றி சாந்தி !

    Like

  8. “”உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    கண்ணாடிகள்
    மனிதர்களைப் போலன்றி””

    யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.

    – சாந்தி –

    Like

  9. அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
    இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
    ம்…..

    Like

  10. //–உடைந்தாலும்
    உண்மையையே காட்டுகின்றன
    கண்ணாடிகள்
    மனிதர்களைப் போலன்றி–//

    சூப்பர்…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.