கவிதை : காதலா நீ வருவாயா ?

வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே..

வெப்பம் விற்கும் பாலை வெளியில்
கண்ணீர் இறக்குமதிக்காய்
என் கண்களைக்
களவுசெய்தவனே .

இதோ சுடும் மணல் வெளியில்
துளிகள்
விழுவதற்குள்
உப்பாய் உறைந்து போகின்றன.

விரல்களின் நெருக்கம் விலகியபின்
உன் நினைவுகளின்
நெருக்கம் நொறுக்குகிறது.

இளையவளின்
இதயக் கூட்டுக்குள்
கள்ளிகள் முளைப்பதால்
பிராணன் பிரிகிறது.

விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
காய்க்குள்அடைக்கும்
காலம் வருமோ
காலன் வரும் முன் ?

நத்தையோட்டுக் கவசம் போட்டு
நடக்கப் பழகியது
பிஞ்சு வயது.
இன்று என் கடிகாரம் போடுகிறது
நத்தையோட்டுக் கவசம்.

என் நகக் கண்ணில்
அழுக்கு மிஞ்சியிருப்பதையே
அனுமதிக்காத நீ
இன்று என் முகக் கண்ணில்
கண்ணீர் மட்டுமே எஞ்சியிருப்பதை
கண்டிக்க மறுப்பதேனோ ?

என் கன்னக் குழிகளுக்குள்
காதல் இருப்பதாய் சொன்ன நீ
என் உள்ளக் குழியில்
உலை கொதிப்பதை
உணர மறுப்பதேனோ ?

உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே .

மறக்க நினைக்கும் நிமிடங்கள்
உன்னை மறக்க மறுத்து
நிலைத்து நினைப்பதால்.

ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.

30 comments on “கவிதை : காதலா நீ வருவாயா ?

 1. வலிய என் பாதை நெடுகிலும்
  வலிய வந்து
  வலி விதைத்தவனே..

  aarampamey asathal !

  வெப்பம் விற்கும் பாலை வெளியில்
  கண்ணீர் இறக்குமதிக்காய்
  என் கண்களைக்
  களவுசெய்தவனே .

  ithu nalla irukku

  விரல்களின் நெருக்கம் விலகியபின்
  உன் நினைவுகளின்
  நெருக்கம் நொறுக்குகிறது.

  unmaiyavey norukkuthu anna.

 2. பெண்ணின் மன ஏக்கத்தைப் படம் பிடித்தது போல
  அழகான காதல் கவிதை.

 3. Indha kavidhaiyai pengal “ன்” pottum aangal “ள்” pottum padithaal iruvarukkum porundhum……aanaivarukkum porunthum “O+” blood pola….

  Karthick

 4. நத்தையோட்டுக் கவசம் போட்டு
  நடக்கப் பழகியது
  பிஞ்சு வயது.
  இன்று என் கடிகாரம் போடுகிறது
  நத்தையோட்டுக் கவசம்.

  arumaiyana varigal arumai sir

 5. Very nice kavithy.
  ஒளிவிழும் திசையெங்கும்
  விழி விரிக்கிறேன்
  உயிரே.
  என் உயிர் வரும் திசைபார்த்து
  என் ஆயுளை எரிக்கிறேன்.

 6. விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
  காய்க்குள்அடைக்கும்
  காலம் வருமோ
  காலன் வரும் முன் ?

  arumaiyana varikal

 7. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. அலுவல் நிமித்தமாய் அமெரிக்கா வந்திருப்பதால் மிகத் தாமதமாய் வருகிறது இந்தப் பின்னூட்டம்.

 8. ஒளிவிழும் திசையெங்கும்
  விழி விரிக்கிறேன்
  உயிரே.
  என் உயிர் வரும் திசைபார்த்து
  என் ஆயுளை எரிக்கிறேன்.

  ippadithan nan kathirukkiren en sethukkaka

 9. வலிய என் பாதை நெடுகிலும்
  வலிய வந்து
  வலி விதைத்தவனே….
  உன் காதல் வலைக்குள்
  என் சிறகுகள் சிக்கியபின்
  கால்களையும் வெட்டிவிட்டு
  கடந்து போகிறாயே ……..?. nice words.

 10. ஒளிவிழும் திசையெங்கும்
  விழி விரிக்கிறேன்
  உயிரே.
  என் உயிர் வரும் திசைபார்த்து
  என் ஆயுளை எரிக்கிறேன்.
  really nice

 11. உன் காதல் வலைக்குள்
  என் சிறகுகள் சிக்கியபின்
  கால்களையும் வெட்டிவிட்டு
  கடந்து போகிறாயே .
  reyali great!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s