கவிதை : அறிவுரைகள்


 

திரும்பும் திசையெல்லாம்
அறிவுரைகளின்
ஆரவாரங்கள்.

அந்த அறிவுரைகளோ
பெரும்பாலும்
பொது உரைகளில் கேட்டவற்றின்
பிரதிபலிப்புகள்.

அதிக அறிவுரைகள்
அரைகுறைகளிடமிருந்தே
அவதாரமெடுக்கின்றன.

அல்லது
சாய்வு நாற்காலிகளிலிருந்து
அவை
ஜீவன் பெற்று நடக்கின்றன.

அந்த அறிவுரைகளும்
காதுகளில் விழுந்து
வாய் வழியாக
வேறு காதுகளுக்கு
ஏற்றுமதியாகிக் கொண்டே இருக்கின்றன

இதயங்களுக்குள்
இறக்குமதியாவதில்லை.

முதியவர்களின் சுருக்குப் பையில்
மிச்சமிருக்கும்
ஒரே பொருள்
அறிவுரை தான்.
அதனால்
இளைய தலைமுறைக்கு அது
இலவசமாய்க் கிடைக்கிறது.

இளைய தலைமுறையோ
அதை
ஜீன்ஸ் பாக்கெட்டில்
திணித்து வைக்கிறது
அடுத்த தலைமுறைக்காக.

திணித்து வைத்ததும்
திரும்பிப் பார்த்து,
தயவு செய்து இனிமேல்
அறிவுரை சொல்லாதீர்கள் என்று
அறிவுரையும் செய்கிறது.

Advertisements

13 comments on “கவிதை : அறிவுரைகள்

 1. அந்த அறிவுரைகளோ
  பெரும்பாலும்
  பொது உரைகளில் கேட்டவற்றின்
  பிரதிபலிப்புகள்.

  marukka mudiyatha unmai ithuthaan.

  முதியவர்களின் சுருக்குப் பையில்
  மிச்சமிருக்கும்
  ஒரே பொருள்
  அறிவுரை தான்.
  அதனால்
  இளைய தலைமுறைக்கு அது
  இலவசமாய்க் கிடைக்கிறது.

  nalla irukku anna.

  Like

 2. %%
  அதிக அறிவுரைகள்
  அரைகுறைகளிடமிருந்தே
  அவதாரமெடுக்கின்றன
  %%

  nalla varigal….karpani siridhum illamal unmaiyai peradhi palikkum varigal….

  Vazthukkaludan,
  Karthick

  Like

 3. //முதியவர்களின் சுருக்குப் பையில்
  மிச்சமிருக்கும்
  ஒரே பொருள்
  அறிவுரை தான்.
  அதனால்
  இளைய தலைமுறைக்கு அது
  இலவசமாய்க் கிடைக்கிறது.//

  யதார்த்தமான வரிகள். இலகுவூன உரை அறிவுரை என்பதை சொல்லியிருக்கிறீர்கள்.

  – சாந்தி –

  Like

 4. அழகாக சொல்லியுள்ளீர்கள்… அறிவுரைகள் ஏதோ ஒரு விதத்தில் தத்துவக்கள்… அதை கேட்கும் அளவுக்கு யரிடமும் நோரமோ, அமைதியோ இப்பொது இல்லை… 😦

  Like

 5. /தாலி கட்டிக் கொண்ட
  திருமண விழாவின் சுகம்//
  ஒருத்தருக்கு ஒரு வாய்ப்புதான்.ஐ. ஆசை,தோசை…
  /மண்டபத்தில்
  எட்டுமணிக்குப் போய்
  எட்டரைக்கு முடியும்
  தற்காலத்
  திருமணங்களில் இல்லை./
  உண்மைதான் அண்ணா.மிகவும் சம்பிரதாயமான முறையில் திருமணங்களுக்குச் சென்று வரும்போது ஏதோவொரு வெறுமை மிஞ்சுகிறது.ஒரு நிமிடப் புகைப்படந்தான் பலரின் கடமையாக ஆகிவிட்டது. நல்ல பதிவு.

  Like

 6. /அல்லது
  சாய்வு நாற்காலிகளிலிருந்து
  அவை
  ஜீவன் பெற்று நடக்கின்றன./
  இதுதான்.இதுதான். உங்கக்கிட்ட எனக்குப் புடிச்சது.அங்கதான் நிக்கறீங்க நீங்க.(உதா.கைவிரல்களுக்கும் நடந்து நடந்து கால் வலிக்கிறது)

  Like

 7. /*முதியவர்களின் சுருக்குப் பையில்
  மிச்சமிருக்கும்
  ஒரே பொருள்
  அறிவுரை தான்.
  அதனால்
  இளைய தலைமுறைக்கு அது
  இலவசமாய்க் கிடைக்கிறது.*/

  வரிகள் நன்றாக உள்ளது.
  வாழ்த்துக்கள் சகோதரரே…….

  Like

 8. // அந்த அறிவுரைகளும்
  காதுகளில் விழுந்து
  வாய் வழியாக
  வேறு காதுகளுக்கு
  ஏற்றுமதியாகிக் கொண்டே இருக்கின்றன//

  அறிவுரை சொல்வது இலகு…. அதன்படி நடப்பது கடினம்…
  அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s