கவிதை : திருமணங்கள் நடந்தன !

வீட்டுக்கு முன்னே
தோரணம் கட்ட
செவ்வாழை தேடியலைந்து,

அலங்காரச் சள ஓலைக்காய்
காடெல்லாம்
ஓடியலைந்து,

பந்தலில் வந்திறங்கும்
சந்தை மூட்டை பிரித்து,
விடிய விடிய
கதைகளைக் கூர்தீட்டி
காய்கறி நறுக்கி,

காக்கோட்டையில்
தண்ணீர் எடுத்து
கொல்லப்புறக்
குட்டுவங்கள் நிரப்பி,

மணமக்கள் உட்கார
சேலைகளால்
மணப் பந்தல் அமைத்து,

தூங்கியும் தூங்காமலும்
அதி காலையில்
தாலி கட்டிக் கொண்ட
திருமண விழாவின் சுகம்,

மண்டபத்தில்
எட்டுமணிக்குப் போய்
எட்டரைக்கு முடியும்
தற்காலத்
திருமணங்களில் இல்லை.

23 comments on “கவிதை : திருமணங்கள் நடந்தன !

  1. உங்கள் வரிகள் அற்புதம் நண்பரே

    அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து ஐயரின் புகை மண்டலத்தில் அவசர அவதியோடு காட்டிடும் இடத்தில் கட்டிவிட்டு நிமிர்கையில்… மன அதிர்வு வருமே அந்த நேரம்.. கண்களிரண்டும் இருண்டு போய்விடும்… அந்த தருணங்கள்… அப்பப்பா.. வாழ்த்துக்கள் நண்பரே
    அன்புடன் இளங்கோவன்

    Like

  2. மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..

    வசீகரா பாட்டுதாங்க ஞாபகத்துக்கு வருது.

    Like

  3. யோசிக்க வேண்டிய ஒரு கவிதை சேவியர்.. அழகான கருப்பொருள் தேர்வு ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் ஒரு கருத்து.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. முடிக்கும் அந்த கடைசி வரியை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று பட்டது..

    Like

  4. /தாலி கட்டிக் கொண்ட
    திருமண விழாவின் சுகம்,/

    ஒருத்தருக்கு ஒரு வாய்ப்புதான்.ஐ. ஆசை,தோசை…

    /மண்டபத்தில்
    எட்டுமணிக்குப் போய்
    எட்டரைக்கு முடியும்
    தற்காலத்
    திருமணங்களில் இல்லை./
    உண்மைதான் அண்ணா.மிகவும் சம்பிரதாயமான முறையில் திருமணங்களுக்குச் சென்று வரும்போது ஏதோவொரு வெறுமை மிஞ்சுகிறது.ஒரு நிமிடப் புகைப்படந்தான் பலரின் கடமையாக ஆகிவிட்டது. நல்ல பதிவு.

    Like

  5. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க …
    இன்றைய அவசர வாழ்கையில் நிறைய சுகங்களை இழக்கிறோம்…

    Like

  6. //காக்கோட்டையில்
    தண்ணீர் எடுத்து
    கொல்லப்புறக்
    குட்டுவங்கள் நிரப்பி,

    //

    மறந்து போன வார்த்தைகள்……நியாபகபடுத்திட்டீங்க.

    Like

  7. anna unmai thaan

    thirumanam mattumallavey;

    aneygamaga anaithu vizhakkalum thanathu palaiya nirathathi elanthu kondirukkinrana enpathum unmai thaan

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.