காளான் கவிதை !

mushrooms

மழைத் துளி விதைகளில்
விழித்தெழும் காளான்கள்
மர அடிவாரங்களில்
மழை விட்டபின் குடைவிரிக்கும்

எந்த காளான் நல்லதென்று
தொட்டுப் பார்த்தும்,
கிள்ளிப் பார்த்தும்
வடிவம் பார்த்தும்
அடிப்பாகத்தின் நிறத்தைப் பார்த்தும்
பட்டென சொல்வார்
ஞானம்மா பாட்டி.

எந்த மரத்தடியில்
நல்ல காளான் முளைக்குமெனும்
காளான் வரலாறு
பாட்டிக்கு அத்துப்படி.

தாவர ஈசலாய்
தலைநிமிரும் காளான்கள்
பசிக்கும் கிராமத்துக்கு
இலவச உணவாகும்.

ரப்பர் பால் கசியும்
கிராமத்து மண் வெளிகளில்
இப்போதெல்லாம்
காளான்கள் முளைப்பதில்லை.

நகரத்திலோ,
பூவா, இலையா, செடியா
இதுவென
யோசித்துக் குழம்பும்
தற்காலத் தலைமுறைக்கு
காளான் என்பதே
காதால் கேளாத பெயர்ச்சொல்.
 
அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம்
ஃபுட் வேல்ட்களின்
பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
பாவப்பட்ட
“மஷ்ரூம்”கள் மட்டுமே.

21 comments on “காளான் கவிதை !

 1. நல்லா இரக்கு சேவியர்.. தாவர ஈசலாய், மழைத் துளி விதை, மழை விட்டபின் குடைவிரிக்கும் என காளான் பற்றிய எல்லா வர்ணனையுமே யோசிக்க வைக்கும் ரகம்.. 🙂

  Like

 2. //பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
  பாவப்பட்ட
  “மஷ்ரூம்”கள் மட்டுமே//

  அழகு சேவியர்.
  அன்புடன் அருணா

  Like

 3. அண்ணா வந்தாச்சா.சுகம்தானே?நானும் நல்ல சுகம்.நிறைய விஷயங்கள் கொண்டு வந்திருப்பீங்க.எதிர்பார்த்திருக்கிறேன்.உங்கள் கவிதைகள் இல்லாமல் கவிதைச்சாலை வெறிச்சோடிக் கிடக்கு.

  எங்கள் குழந்தைகளுக்கு காளான் மட்டுமா தெரியவில்லை.
  இன்னும் இன்னும் எங்கள் எத்தனையோ மூத்தோரின் எச்சங்கள் எல்லாமேதானே!

  Like

 4. //மழைத் துளி விதைகளில்
  விழித்தெழும் காளான்கள்
  மர அடிவாரங்களில்
  மழை விட்டபின் குடைவிரிக்கும்//

  வாவ், கலக்கல் வரிகள்.

  Like

 5. ///பட்டென சொல்வார்
  ஞானம்மா பாட்டி……..
  காளான் வரலாறு
  பாட்டிக்கு அத்துப்படி//

  .. நகரத்து வாழ்வில் நாம் தொலைத்தவை அதிகம்..
  அருமையான வரிகள்……..

  அன்புடன் ஜீவன்…

  Like

 6. ஹேமா தங்கையே….எப்படி இருக்கீங்க…. அலுவல் அழுத்தம் கொஞ்சம் இன்னல் கொடுக்கிறது 🙂 உங்கள் அன்புக்கு நன்றி 🙂

  Like

 7. /எப்போது திரும்பி வந்தீர்கள் சேவியர்? அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா
  //

  மிக்க நன்றி அனுஜன்யா… வார இறுதியில் தான் வந்தேன் 🙂

  Like

 8. Vanakkam Thozhale…..

  America payanam ellam nalla padiya mudinjirucha?????

  Kaalaanai varnitha vidham arumai…..adhuvum
  ரப்பர் பால் கசியும்
  கிராமத்து மண் வெளிகளில்
  இப்போதெல்லாம்
  காளான்கள் முளைப்பதில்லை.

  Naama kaalaanai mattum alla-indiyavin
  Nalla gramangalaiyum tholaikundirukurom nu arumaiya unarthugiradhu…

  Vazthukkal Thozhale….

  Karthick

  Like

 9. Vanakkam Thozhale….

  America payanam nalla padiya mudinchirucha?

  Kaalaanai pattriya varnanai megavum arumai….adhilum
  ரப்பர் பால் கசியும்
  கிராமத்து மண் வெளிகளில்
  இப்போதெல்லாம்
  காளான்கள் முளைப்பதில்லை.

  indha varigal,

  Naam kaalaanai mattum alla-indiyavil
  Nalla gramangalaiyum illapathi unarthigiradhu…..

  Vazthukkal thozhare….

  Karthick

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.