அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

malli

உனது
பார்வை உரசுகையில்
வேதியல் மாற்றம்
விளங்கிக் கொண்டேன்

விரல்களின்
ஸ்பரிசங்களில்
எல்லா தொடுதலுக்கும்
சமமான
எதிர் வெட்கம் உண்டென்று
இயற்பியல் அறிந்தேன்

உனது
புன்னகையின்
கூட்டுத் தொகையில் தான்
என்
ஆனந்தத்தின் அகலம்
என கணிதம் கற்றேன்.

உன்
நுனிநாக்கில்
தவறி விழுந்த வாக்கியங்களில்
வெட்கப்பட்ட
சேக்ஸ்பியரைக் கண்டேன்.

உன்
தோழியரின் துணையில்
சங்ககால
தூதுகளை கண்டுகொண்டேன்.

எனினும்
எதுவும் கற்கவில்லையென
பேராசிரியர்கள்
பொறுமித் திரிகிறார்கள்

Advertisements

17 comments on “அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

 1. //உன்
  நுனிநாக்கில்
  தவறி விழுந்த வாக்கியங்களில்
  வெட்கப்பட்ட
  சேக்ஸ்பியரைக் கண்டேன்.//

  அட அவரையே வெக்கபட வச்சிட்டாங்களா….

  Like

 2. //எனினும்
  எதுவும் கற்கவில்லையென
  பேராசிரியர்கள்
  பொறுமித் திரிகிறார்கள்//

  இந்த பெரிசுகளே இப்படி தான் எசமான்….

  Like

 3. உண்மையில் அவர்கள் புத்தகங்களை அறிந்த அளவிற்கு இளைய மனங்களை அறியாமல்தான் இருக்கிறார்கள்.அதற்கு அவர்களுக்கு நாங்கள்தான் பாடம் எடுக்க வேணும் அண்ணா!

  Like

 4. ஏதோ இறை தத்துவம் குறித்த பதிவு என்று நினைத்து வந்தால், இதுவும், ”சேவி லீலாவா”

  Like

 5. உனது
  புன்னகையின்
  கூட்டுத் தொகையில் தான்
  என்
  ஆனந்தத்தின் அகலம்
  என கணிதம் கற்றேன்

  intha mathiri maths kathukutha ellarume 100% edukalame

  Like

 6. //ippadithaan ella teachers um solraanga

  unmaiyileyea avangaluku onnum theriyal anna
  //

  அதான் அடிக்கடி பசங்க டீச்சர்ஸ்க்கு பாடம் நடத்தறாங்க போல 😉

  Like

 7. //ஏதோ இறை தத்துவம் குறித்த பதிவு என்று நினைத்து வந்தால், இதுவும், ”சேவி லீலாவா”

  //
  இது மறை தத்துவம் பாஸ்…

  Like

 8. //இந்த பெரிசுகளே இப்படி தான் எசமான்….//

  எல்லா பேராசிரியர்களும் பெருசுகள் இல்லேன்னு சில விடலைப் பசங்க சொல்றாங்க சாமி..

  Like

 9. பேராசிரியர்கள் பெருமுவதோடு விட்டார்கள்.
  இப்படி படிப்பது தெரிந்தால் வீட்டில் zoology இல்ல சொல்லிக் கொடுத்திருப்பாங்க .

  Like

 10. அப்பாடா ஒரு வழியா நம்ம பயலுக படிக்கிறாய்ங்க….

  ஆமா இந்த பாடத்தை எல்லாம் அந்த பொண்ணுங்க யாருகிட்ட கத்துகிறாங்க ??

  Like

 11. சேக்ஸ்பியருக்கே Romance-ஆ…
  ஆ..ஆ..ஆ…. திருப்பதிக்கே லட்டுனு இதைத்தான் சொல்றாங்களா?
  அடேங்கப்பா…
  நம்ம பசங்க நல்லா தான் வேதியல், இயற்பியல், கணிதம் கத்துக்கிறாங்க.
  பேராசியர்கள்தான் புரியாமல் பொருமுறாங்க போல! 😮

  பாடறியேன்
  படிப்பறியேன்
  இது பற்றியும்
  ஒன்றும்
  யான் அறியேன்! 😉

  Like

 12. /அடேங்கப்பா… நம்ம பசங்க நல்லா தான் வேதியல், இயற்பியல், கணிதம் கத்துக்கிறாங்க. பேராசியர்கள்தான் புரியாமல் பொருமுறாங்க போல//

  ஹா..ஹா.. உண்மை தான் போல… நீங்க எப்படி 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s