ஆழமாய்… ஈழமாய்…

tamil
உடலுக்குளே உயிர் கைதியா – இந்த
தேசத்துக்கு நான் கைதியா ?
தேசக்கொடிக்கு எத்தனை வண்ணம் – என்
தேசப் பரப்பில் சிவப்பே இன்னும்.

தேசமே…
தேசமே…
தொப்புள் கொடியில் விடுதலையாகி – உன்
தொட்டில் மீது நான் விழுந்தேன்,
கட்டில் கனவுகள் கலைகின்றதே – இங்கு
கல்லறை மட்டும் எழுகின்றதே.

சரணம் 1

என் பிஞ்சுக்கால்கள் நடந்த தடம்
அந்த கரிசல் மடி தான் எந்தன் இடம்,
என் மூச்சுக் காற்றுக்கு ஏற்ற இடம்
அது இல்லை என்றால் சுவாசம் சுடும்.

அலையில் இட்ட ஓர் இலையாய்
ஆகிப்போன வாழ்க்கையிது,
உலையில் இட்ட உதட்டில் போடும்
மூர்க்கப் பாம்பின் முத்தமிது

சரணம் 2

காண்பேனோ நான் இன்னொரு முறை
என் காதல் கிளறிய சின்னக்கிளியை ?
பார்ப்பேனோ நான் பாசச் சூட்டில்
என்னை செதுக்கிய அன்னை மடியை ?

ஓட்டை விழுந்த ஓவியப் பானை
மழைநீர் சுமந்து திரிகிறது,
துளைகள் இல்லா புல்லாங்குழலும்
ராகம் மீட்டத் துடிக்கிறது

சரணம் 3

சின்ன வயதில் என்னைச் சுமந்த
பாட்டிக்கென்ன ஆனதுவோ ?
களித்துக் கிடந்த நண்பர் கூட்டம்
பொட்டிக்குள்ளே போனதுவோ ?

விழுதுக்காய் நான் ரோஜா மூட்டில்
காவலிருக்கும் காலமிது,
அரளிச் செடிகள் ஆம்பல் என்று
அறிமுகம் செய்தே அலைகிறது.

Advertisements

12 comments on “ஆழமாய்… ஈழமாய்…

 1. அண்ணா,நாங்களும் எங்கள் போராளிகள் நினைவில் இப்படியான கவிதைகளை எழுதுகிறோம்.நீங்களும் அதே உணர்வோடு வேறு ஒரு கோணத்தில் எழுதிருக்கிறீர்கள்.

  அண்ணா,என் தளமும் நேரம் கிடைக்கும்போது வாங்களேன்.
  வந்து நாளாச்சு.

  Like

 2. /உடலுக்குளே உயிர் கைதியா – இந்த
  தேசத்துக்கு நான் கைதியா ?
  தேசக்கொடிக்கு எத்தனை வண்ணம் – என்
  தேசப் பரப்பில் சிவப்பே இன்னும்./

  சொல்ல வார்த்தை இல்லை

  Like

 3. nam thamizh nattu arasiyal vadhihalin pachaithrogangalal manam vedhumbi poyirundha ennaku, thangalin indha kavidhai ilamthendralai punpatta manadhai varudichelkiradhu. nandri.

  Like

 4. // NOW ALL TELIVISION AND NEWS PAPER ABOUT SIRILANKA TAMIL PEOPLE

  // THIS KAVITHAI MORE ENERGY , ‘ VERY GOOD XAVI ‘

  Like

 5. நன்றி சகோதரி ஹேமா… இன்று கொஞ்சம் உங்கள் தளத்தில் இளைப்பாறும் பாக்கியம் கிடைத்தது…. 🙂

  Like

 6. அண்ணா நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.எப்பாச்சும் நேரமிருக்கிறப்போ வந்து போங்க

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s