வரமானது…காதல் சுரமானது !

dsc_0200_001

காதல்…

வேர்களுக்கு
விளம்பரம் செய்யாமல்
வயதுச் செடிகள் பூக்கும்
வாசனைப் பூக்கள்

காதலின் சிறகுகள்
கனவுகளில் வீணை செய்து
கொலுசுச் சத்தத்தில்
இசை பயிலத் துவங்கும்..

மௌனம் உடைபட மறுத்து
உதடுகள் உண்மையை மறைத்து
தெரிந்தே வார்த்தைகள்
தற்கொலை செய்யும்

காதலுக்கும் கவிதைக்கும்
கற்காலப் பழக்கம்
காதல் கவிதையானதால்
காதலிப்பவர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்.

கடற்கரை மணலில்
பிடிமணல் அள்ளி
ஒன்றொன்றாய் எண்ணிப் பார்க்கும்
பொறுமை…

சிதறிய விண்மீன்கள்
விழித்திருக்கும் வரை
வானக் காட்டுக்குள் வேட்டையாடும்
வெறுமை…

எல்லாம் காதலின் பரிமானங்கள்.

கரைகளில் மோதி மோதி
நுரைகளாய் தங்கும் காதல்
நிமிடங்களில் கரைவதுண்டு

அலைகளாயும் பல காதல்
அவதாரம் எடுப்பதுண்டு
கரைகளோடு கொண்ட காதலை
கண நேரமும் மறுக்காமல்….

மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மின்னல் தீண்டும் பார்வையில்
பனிமழை சொரியும் உரசலில்,

மோகத்தின்
முதல் உரை உள்வாங்கி தான்
காதலும் தன்
முகவரி எழுதுகிறது

மோகம் வடிந்து நேசம் தங்கும் காதல்
வானத்தை வசமாக்கும்.
மோகத்தின் மிச்சங்கள் மட்டுமே
காதலின் எச்சங்களாகும் போதோ
கலைகின்ற மேகங்களாய்
காதலும் உருமாறும்.

காதல்
இருக்கும் வரை இறுக்கம்.
இறுக்கம் தளர்ந்தால்
அது
கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கும்.

தனிமைகள் மட்டும் தேடும் நேசமும்
தலையணைகளில் மட்டும்
தஞ்சம் கொள்ளும் நேசமும்,
காதல் போர்வை சுற்றிய
மோகப் பார்வைகளும்,
காலை வானம் சிவந்தால்
கழுவப்பட்டுவிடும்.

எரிகல் விழுந்த தேசமாய்
சில ரணங்கள்
பள்ளங்களை உள்ளங்களில்
விட்டுச் செல்லும்.

விலகிச் சென்று
வேறு கூடு தேடிய பறவைகள்
சிறகுகள் உதிர
உதிரம் சிதறக் கதறும்
ஒற்றைக் கண்ணீர்ப்பறவையை
திரும்பிப் பார்ப்பதில்லை…

இலவசக் காயங்களின்
வினியோகஸ்தலம்
இந்த காதல் கூடங்கள்..

காதல்,
சூதாட்டம்,
இரண்டிலும்
எதுவும் நிகழலாம்
எதிர்பார்ப்புகளின் எதிர்திசையில்.

Advertisements

14 comments on “வரமானது…காதல் சுரமானது !

  1. அண்ணா,காதல் ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறீர்கள்.
    இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

    Like

  2. எதிர்பார்ப்புகளின் எதிர்திசையில்!

    Good one!

    Like

  3. *****
    காதல்,
    சூதாட்டம்,
    இரண்டிலும்
    எதுவும் நிகழலாம்
    எதிர்பார்ப்புகளின் எதிர்திசையில்
    ****

    Nidharsanamaana varthaigal thozhare…..

    Vegnaal kazhithu meendum,
    Karthick

    Like

  4. காதல் என்றுமே இனிமையானதொன்று… அதைச் சுவைப்பவர்களைப் பொறுத்து!…

    அழகிய ஆழமான கவிதை!…..வாழ்த்துகள் சேவியர்!!

    நாள்
    என்றால்,
    இரவும் பகலும்…
    வாழ்க்கை
    என்றால்,
    இன்பமும் துன்பமும்…
    மனம் ஏற்றுக் கொள்கிறது!
    காதலின் பிரிவை மட்டும்
    ஏற்க மறுக்கிறது
    அது தான் காதல்!

    Like

  5. //காதலின் பிரிவை மட்டும்
    ஏற்க மறுக்கிறது
    அது தான் காதல்//

    பளிச் சென்று சொல்லி விட்டீர்கள் !

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s