மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….

brain_pool

 

தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன.
1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம் மூளை சோர்வடைகிறது.

2. சிலர் இதற்கு நேர் எதிர். எப்போ உட்கார்ந்தாலும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளினால் தான் திருப்தி ! அவர்களுக்கும் சிக்கல் இருக்கிறது. அதிகம் உண்டால் மூளை தனது உற்சாக திறனை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கும். அதிலும் சிப்ஸ், பீட்சா, கோக் போன்ற குப்பை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்து விடும். உனவில் மீனை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் நினைவாற்றலை வயதான காலத்திலும் கூர்மையாக வைத்திருக்கும் என்பது மீன் பிரியர்களுக்கான துள்ளல் செய்தி !

3. புகை பிடித்தல் ! மூளையின் முக்கியமான எதிரி. மூளையை இது சுருங்க வைக்கும், நினைவிழக்க வைக்கும், பிற்காலத்தில் அல்சீமர் போன்ற நினைவிழத்தல் நோய்களுக்கெல்லாம் காரணமாகிவிடும். கோகைன் போன்ற பொருட்களும் மூளைக்கு எதிரி. அது மூளையின் ஒரு குறிப்பிட்ட அணுக்களை சுனாமி போல வாரி அழித்துச் சென்று விடும்.

4. மொடாக்குடியர்களுக்கு மூளை செல்லாக்காசாகி விடும். கொஞ்சமாய் குடிப்பது மூளைக்குப் பாதிப்பில்லை (வேறு பல பாதிப்புகள் உண்டு என்பது கண்கூடு) என்றாலும் அதிக அளவு மது மூளையின் அணுக்களைக் கொலை செய்து விடுகிறது. எதுக்கு வம்பு, போதையை விட்டு விலகியே இருக்கலாமே !

5. சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீரைக் குடிப்பதை விலக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி குடிப்பதே மிகச் சிறந்தது, தேவையானது !

6. அடிக்கடி தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்.

7. அதிக இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

8. உடலில் பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு பகுதி மூளை. இதனால் தான் மூச்சுப் பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. சுகாதாரமற்ற காற்று உள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த காற்றின் மாசு, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

9. நிம்மதியான தூக்கம் மூளையின் நெருங்கிய நண்பன். மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே.

10. மன அழுத்தம் மூளையைப் பாதிக்கும் முக்கியமான ஒரு வில்லன். கொஞ்சம் அழுத்தம் நம்மை இலட்சியத்தை நோக்கி ஓடச்செய்யும், ஆனால் அதிகப்படியான அழுத்தம் மூளையின் அணுக்களைக் கொன்று விடும்.

11. தலையை மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும். காரணம் மிக எளிது ! மூளைக்கு அதிக ஆக்சிஜன் தேவை. தலையை மூடிக் கொண்டே தூங்கினால், கரியமில வாயுவைத் தான் அதிகம் சுவாசிக்க வேண்டி வரும். அதனால் தான் காரணம். நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, பச்சைப் பசேலென்ற உற்சாகச் சூழல்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

12. உடல் நிலை சரியில்லாதபோதோ, சோர்வாய் இருக்கும் போதோ மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும் மூளையை வலுவிழக்கச் செய்யும். எனவே மூளைக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வு கொடுப்பதே மிகவும் தேவையானதாகும்.

13. நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது. நேர் சிந்தனைகள், உற்சாகமான சிந்தனைகள் போன்றவை மூளையை உற்சாகமூட்டும். அதே நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளை அசை போட்டுக் கொண்டிருந்தீர்களெனில் உங்கள் மூளையின் அணுக்கள் செத்துக் கொண்டிருக்கும்.
மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும், மூளையையும்.

40 comments on “மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….

  1. IT IS A VERY GOOD INFORMATION EN ANDAVAR ENNAKENA PADAITHA EN URUPUGALIL ATHUVUM ONDRU ATHAI NAN KANDIPPAGA PATHARAMAGA PARTHU KOLVEN

    Like

  2. Hi Xavier,

    The article is very nice. The accent of tamil is super.

    I acknowledge by this massage that i have brain.

    Like

  3. அன்பின் ஷாம, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தந்திருக்கும் பயனுள்ள பல கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !

    Like

  4. “மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்” என்றீர்கள்…. தவறுதலாய்ப் படித்துவிட்டேன்…
    i’m soooo soooooooory… Xavier!

    [[உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்.]]
    ஹா…ஹா…ஹா…அருமை!

    [[நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது.
    மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல.]]

    அருமையான நல்ல நல்ல Articles தந்து அசத்துறீங்க…..
    தொடரட்டும் உங்கள் பணி….

    பிற்குறிப்பு:-
    மூளைக்குச் சரியான உணவு கிடைத்தால்தான் ஞாபக சக்தி, ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றல்
    முதலியன நமக்குக் கிடைக்கும்.

    மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு.
    பளபளப்பாக ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் பெரும்பாலும் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவுகளாகும். ஏனென்றால் இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள், பைட்டோ கெமிக்கல்கள் முதலியன உள்ளன.

    இவை மூளையின் செயல் திறமை பாதிக்கப்படாதபடி பராமரித்து வருகின்றன.
    திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரிப் பழங்கள் முதலியன இந்த வகையில் மூளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நல்ல உணவுகளாகும்.

    Like

  5. சாய்கணேஷ் 🙂 நீங்க எப்படி வேணும்ன்னாலும் மிக்ஸ் பண்ணலாம், மிஸ் பண்ணாம இருந்தா சரி !

    Like

  6. ஆகா.. எங்களுக்கும் மூளை இருக்குதுங்க அண்ணாச்சி. யாராவது இப்படி கேப்பாய்ங்க தெரிஞ்சிதான் ரெம்ம்ம்ப பத்திரமா வச்சிருக்கோம்.

    Like

  7. //தலையை வேகமாய் ஆட்டுவது கூட//

    இல்லாவிட்டால் எங்க அலுவலகத்திலே குப்ப கொட்டமுடியாது பாஸ். ரொம்ப பேருக்கு வீட்லகூடதான்….

    நித்தில்

    Like

  8. //சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது.//

    இந்த தண்ணிய அந்த தண்ணியோட சரியான அளவு மிக்ஸ் செய்தால்?

    Like

  9. //காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? //
    //தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம்.
    இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. //
    //புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.//
    தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். //
    மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும்
    மூளையா ? இதெல்லாம் செய்து கொண்டு பலவருடங்கள் வாழ்ந்து விட்ட என் போன்றவர்களுக்கு மூளை இருக்குமிடம் காலியாகத்தானிருக்கும் இப்பவே!இந்த உலகத்திலதான இருக்கோம்?
    அன்புடன்
    கமலா

    Like

  10. //உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்//

    அப்ப கல்யாணம் பண்ணக்கூடாது 🙂

    //மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே.//

    இந்த மூளை கெட்ட செ(ய)ல்களை செய்யாமல் இருக்க என்ன செய்யனும்..

    //மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு // என்ன விலைக்கு வாங்குவாங்க.

    சரி படிச்சாச்சு இப்ப சொல்லுங்க மூளை இருக்கா இல்லையா?

    ஐயோ மூளை இருக்குன்னு நம்புனவுங்க 3 பேர் தானா?

    Like

  11. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.