சத்தம் வாழ்ந்த வீடு

house21

எப்போதும்
மௌனமாய் இருந்ததில்லை
வீடு.

சேர்த்த சொத்து
ஏழு பிள்ளைகள் என
அம்மாவும் அப்பாவும்
சொல்லாத நாள் நினைவில்லை.

மேற்குப் பக்க
புளிய மரத்தடியில்
மாலை நேரம் வந்தமர்ந்தால்
திருவிழா போல் கலகலக்கும்.

கவலைகளின் திவலையின்றி
சிறகடித்துப் பறந்த
அறைகளில்
சிறகுகளின்
சத்தங்கள் சரிந்ததேயில்லை.

மாங்காயோ, பேரக்காயோ,
மரவள்ளிக் கிழங்கோ….
தின்னவும், பேசவும்
திண்ணையும் ஓய்ந்ததில்லை.

கோழிகளின் குரலொலியும்
ஆடுகளின் வாசமும்
முற்றங்களை விட்டு
மறைந்ததில்லை.

காலங்களின் சவாரியில்
ஓர்
கண்ணீர் ஓலமாய்
நிமிர்ந்தெழுகின்றன நினைவுகள்.

திருமணங்கள்
கூட்டுக் குருவிகளை
கூடு கடத்தியபின்

மேய்க்க ஆளில்லாமல்
ஆடுகளும்
கவனிக்க ஆளில்லாமல்
கோழிகளும்
ஓர் துயர இருட்டாய் தொலைந்து விட்டன.
வலியோடே வாழ்ந்து
ஏக்கத்தோடே
அப்பாவும் மறைந்தபின்,

எப்போதேனும் வந்தமரும்
ஒற்றைக் குருவியாய்
ஆகிப் போனது
சொந்தங்களின் சந்திப்பும்.

உற்சாக அப்பாவை
நினைவிடத்தில்
மௌனமாய் தரிசித்தல்
துயரங்களின் கூட்டுத் தொகையெனில்.

ஏதும் அறியா
மழலையாய்
வலிகளின் விளை நிலமாய்
அம்மாவைப் பார்ப்பது
கவிதையால் நிரம்பாத வார்த்தை.
 
என்றேனும்
கிராமத்துக்குச் செல்கையில்,

குடும்ப வீட்டின்
வாசல் கடக்கையில்,

வெறுமை அமர்ந்திருக்கும்
படிகளை மிதிக்கையில்,

குரல்கள் உறைந்த
அறைகளில் நுழைகையில்,

பீறிட்டுக் கிளம்புகிறது
கண்ணீர்
உறைந்திருக்கும் மௌனத்தின்
சில்லுகளை உடைக்க.

19 comments on “சத்தம் வாழ்ந்த வீடு

  1. மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே….

    உடனே களமிறங்குகிறேன்…..

    Like

  2. //நன்றி நண்பரே….

    நான் இலங்கையை சேர்ந்த்தவன்….

    உங்களோடு உரையாடும் வாய்ப்பு கிட்டுமா ????….
    //

    அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி 🙂

    xavier . dasaian @ g mail.com தொடர்பு கொள்ளுங்களேன்….

    Like

  3. நன்றி நண்பரே….

    நான் இலங்கையை சேர்ந்த்தவன்….

    உங்களோடு உரையாடும் வாய்ப்பு கிட்டுமா ????….

    Like

  4. /இது ஒரு நிஜமான கவிதை….

    ஈரம் சொட்டச்சொட்ட ஒரு குயவன் வனைந்த கவிதை…..

    வானவில்லை வாடகை எடுத்து ஒரு ஓவியன் வரைந்த கவிதை…

    பாத்திரங்களின் குணமறிந்து ஒரு கம்பன் புனைந்த கவிதை…..

    உண்மையில் இது வாழ்வியலை எடுத்தியம்பும் கண்ணீர்க்கவிதை…….
    //

    தொட்டுட்டீங்க அம்ஜத்.. நன்றிகள் பல 😀

    Like

  5. ஒவ்வொரு வரியும் வாசித்த கணங்களில் வலித்தது நண்பரே……..

    இறுதியாய் இதை வாசித்த போது கண்களில் நிஜமாகவே நீர் பீறிட்டது ஐயா……

    “பீறிட்டுக் கிளம்புகிறது
    கண்ணீர்
    உறைந்திருக்கும் மௌனத்தின்
    சில்லுகளை உடைக்க…..”

    இது ஒரு நிஜமான கவிதை….

    ஈரம் சொட்டச்சொட்ட ஒரு குயவன் வனைந்த கவிதை…..

    வானவில்லை வாடகை எடுத்து ஒரு ஓவியன் வரைந்த கவிதை…

    பாத்திரங்களின் குணமறிந்து ஒரு கம்பன் புனைந்த கவிதை…..

    உண்மையில் இது வாழ்வியலை எடுத்தியம்பும் கண்ணீர்க்கவிதை…….

    Like

  6. Ovvoru manangalilum vutkarnthirukkum voomaikkaayathai, vunara mattume mudintha thuyarathai, vuravugalin vunnathathai vunarthum vungalin kavithai migavum nanru.
    ஏதும் அறியா
    மழலையாய்
    வலிகளின் விளை நிலமாய்
    அம்மாவைப் பார்ப்பது
    கவிதையால் நிரம்பாத வார்த்தை.
    enra varigalil, kavithaiyal nirambatha vaarthai enbathil enakku vudanpadillai. entha mozhiyilum athai vivarikka thaguntha alavil vaarthai illai. Mozhigali thandiya vaarthai enbathu sariyaga irukkum enbathu enathu thazhmaiyana karuthu. Thavaraga irunthaal mannikkavum.

    Like

  7. That poem touched my heart Xavier! “thirumaNangaL koottu kuruvigaLai koodu kadaththiya pin”, “serththa soththu aezu piLLaigaL” – well written!

    Regards,
    Uma.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.