நண்பன் நவனீ நினைவாக…

n1அன்புள்ள நவனீ,

 

காலங்கள் காயங்களை ஆற்றிவிடும் என கருதியிருந்ததெல்லாம் பொய் என்பதை தினம் தோறும் புரியவைத்துக் கொண்டிருக்கின்றன உனது நினைவுகள்.

உனது “நினைவு நாள்” ஒவ்வோர் வருடமும் வந்து போகிறது, அது தரும் வலியும் ஒவ்வோர் வருடமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஏதோ ஒரு வெறி பிடித்த வாகனத்தினால் நீசத்தனமாய் வீசப்பட்டு, நீங்காமல் நீங்கிவிட்டு.

சட்டென கடந்து விட்டது போல சில கணங்கள் தோன்றும், நூறாண்டு ஆனது போல் சில கணங்கள் சொல்லும். ஏதும் புரியாத அவஸ்தையை இதைவிடக் கொடூரமாய் எனக்குள் யாரும் உணர்த்தியதில்லை.

இன்னும் எனது நினைவுத் தாழ்வாரங்களில் உனது சிரிப்பொலியைச் சேமிக்கின்றன செவிகள்.

இன்னும் எனது சிந்தனைகளெங்கும் உனது வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் எனது மனதின் மௌனப் படிகளெங்கும் திட்டுத் திட்டாய் அமர்ந்திருக்கிறது உன் நேசம்.

தினம் தோறும் நாளிதழைப் புரட்டும் போது கண்களுக்குள் கடந்து செல்கின்றன விபத்துக் கணக்குகள். ஒவ்வோர் விபத்துக்குப் பின்னாலும் எத்தனையோ தவிப்புகளும், கண்ணீரும், அழிக்க முடியாத சுவடுகளும் இருக்கின்றன என்பதை ஓர் விபத்தின் மூலம் தான் நீ எனக்குப் புரிய வைக்க வேண்டுமா ?

சந்திக்கவே முடியாதென்ற பின்பு தான் சந்திப்புகள் தேவை எனும் தவிப்புகளும் அதிகரிக்கின்றன.

இன்னும் நமது நண்பர்களுடனான உரையாடலில் நீ இடம் பெறாமல் போவதேயில்லை. எப்போதேனும் சந்தித்துக் கொள்ளும் உரையாடல்கள் கூட உனக்கான கண்ணீரை எழவைக்காமல் போனதில்லை.

இன்னும் நான் உன் பெற்றோருடன் பேசவில்லை. மன்னித்து விடு. நீ ஒரு முறை உண்ணவில்லை என்றாலே பதறிப் போகும் அவர்களுடைய வலியில் ஆழம் அறிவேன். இப்போதைய அவர்களின் பார்வைகளைத் தாங்கிக் கொள்ளும் வலிமை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குள் முளைக்கவே இல்லை.

n2

நாம் எதைப்பற்றித் தான் பேசவில்லை என சில நேரம் நினைக்கிறேன், நாம் எதைப்பற்றியுமே பேசவில்லையா என சில நேரம் தவிக்கிறேன். தவிப்புக்கும் தவிர்ப்புக்குமிடையே ஓடுகிறது உனது நினைவுகளின் மீதான எனது வாழ்க்கைப் பயணம்.

உனது ஒவ்வோர் புகைப்படங்களுக்குப் பின்னாலும் விரியும் நினைவுகள் எதிலும் உன்னைப் பற்றிய கோபங்களோ, வெறுப்புகளோ இல்லாமல் போனதற்காய் ஆனந்தமும், கவலையும் ஒருசேர அடைகிறேன்.

 

வாழ்ந்தால் எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் நீ.

மடிந்தால் எப்படி மடியக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகவும் ஆகிப் போனாயே நீ.

 

 

மடியாத, மடிய விழையாத நினைவுகளுடன்…

நண்பர்கள்.

13 comments on “நண்பன் நவனீ நினைவாக…

  1. [[வாழ்ந்தால்,
    எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் நீ.
    மடிந்தால்,
    எப்படி மடியக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகவும் ஆகிப் போனாயே நீ.]]
    Very touching words that touched my heart, soul and mind…. Nothing can take away your deep sorrow…
    நட்பிருக்கும்வரை அவரது இழப்பும், அவரைப் பற்றிய நினைவுகளும் உங்களுக்குள் வாழ்ந்துகொன்டேயிருக்கும்.
    உங்கள் ஆழமான அன்பும், நட்பும்,… “நண்பர்னா இப்படித்தான் வாழணும்”னு சொல்கிறது…..
    நட்புக்கு எடுத்துக்காட்டு நீங்கள்.
    so, carry on and continue to love your Navanii….

    I express my deepest sympathy and condolences to his family,
    and to you xavier.
    ” May God Rest The Soul Of Navanii.”

    Like

  2. [[வாழ்ந்தால்,
    எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் நீ.
    மடிந்தால்,
    எப்படி மடியக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகவும் ஆகிப் போனாயே நீ.]]
    Very touching words that touched my heart, soul and mind…. Nothing can take away your deep sorrow…
    நட்பிருக்கும்வரை அவரது இழப்பும், அவரைப் பற்றிய நினைவுகளும் உங்களுக்குள் வாழ்ந்துகொன்டேயிருக்கும்.
    உங்கள் ஆழமான அன்பும், நட்பும்,… “நண்பர்னா இப்படித்தான் வாழணும்”னு சொல்கிறது…..
    நட்புக்கு எடுத்துக்காட்டு நீங்கள்.
    so, carry on and continue to love your Navanii….

    I express my deepest sympathy and condolences to his family,
    and to you xavier.
    ” May God Rest The Soul Of Navanii.”

    Like

  3. இவ்வளவு அன்பை சம்பாதித்த உங்கள் நண்பர் சாந்தி அடைந்திருப்பார்…..

    Like

  4. எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் உங்கள் நண்பன் இப்போது நல்ல இடத்தில் இருப்பார்.

    Like

  5. வாழ்ந்தால் எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் நீ.

    மடிந்தால் எப்படி மடியக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகவும் ஆகிப் போனாயே நீ.

    alntha anuthapangal xavier

    Like

  6. இவருக்காக வருடா வருடம் நீங்கள் பதிவு எழுதுவதில் மட்டுமல்ல வார்தையின் வரிகளிலும் உங்கள் நட்பின் ஆழம் புகிறது….

    Like

  7. // Sad news bad luck your friend *
    // I think second year memory *
    // we will pray for him family *

    Like

  8. சில நினைவுகள் எத்தனை வருடங்களானாலும் அப்படியே இருக்கும். உங்கள் நண்பரைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியிருக்கிறீர்கள்.
    இழப்பு எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை நானும் அனுபவித்திருப்பதால் உங்கள் வேதனை புரிகிறது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.