இப்படியாகக் காதல்…

2

1

 

 கடவுள்
இல்லையென்பவர்கள்
காதலிக்காதவர்கள்,

தேவதை
இல்லையென்பவர்கள்
உன்னைக் காதலிக்காதவர்கள்.

 

 

 

 

2

உனக்காகத் தவமிருந்தேன்
காத்திருந்தேன்
காவியம் வரைந்தேன்
என்கிறாயே…

ஒருமுறையேனும்
காதலிக்கிறேன் என்றாயா ?

0

83

காதல் மிகவும்
ரகசியமானது.
அதனால் தான்
பலரும்
சொல்வதில்லை
காதலியிடம் கூட

 

 

 

 

 

 

4

இரண்டிலிருந்து
ஒன்றைக் கழித்தால்
பூச்சியமாகும்
வியப்புக் கணிதமே
காதல்.

5

9

 

 

கண்ணைப் பார்த்து
சிரிப்பதில் தான்
காதலென்று நினைத்தேன்.

மண்ணைப் பார்த்துச்
சிரித்தால் தான் காதலென்று
கற்றுக் கொடுக்கிறாய்
நீ

 

 

 

 

6

உன்
முதல் முத்தத்துக்கு
நன்றி சொல்ல விழைகையில்
உடைந்து சிதறிய
மெளனக் குமிழிகளுக்குள்
என்
நாணம் படுத்துக் கிடந்தது.

 

7

10

 

 

 

பிறருடன்
செல்பேசுகையில்
வார்த்தைகள் தீர்ந்து விடுகின்றன
உன்னுடன்
பேசுகையில்
பாட்டரி தீர்ந்து விடுகிறது.

 

 

 

 

8

உன்னைக்
காதலிக்கத் துவங்கியபின்
எல்லாவற்றையும்
நிறுத்தி விட்டேன்.

எல்லாவற்றையும்
நிறுத்திய என்னால்
உன்னைக் காதலிப்பதை மட்டும்
நிறுத்த முடியவில்லை !

9

 

3

 

 

காதல் இல்லா
வாழ்க்கை
சிலவற்றை இழக்கும்.

காதலைச் சொல்லா
வாழ்க்கை
காதலையே இழக்கும்.

 

 

 

 

10

உயிரை உயிருடன் வைத்திருக்க
காதலால் கூடும்
காதலைக்
காதலுடன் வைத்திருக்க
உயிரால் கூடுவதில்லை.

11

 

1

 

 

உன் முத்தத்தில் வழுக்கி
வானம் நோக்கி
விழுந்தேன்,
எழுந்து பார்த்த போது
சுவர்க்கம்
எனக்குக் கீழே இருந்தது

 

 

 

 

 

12

ஈரப்படுத்தாத மழைக்காகத்
தவமிருப்பது போன்றதே
காயம் தராத
காதலுக்காய் காத்திருப்பதும்.

0

40 comments on “இப்படியாகக் காதல்…

  1. //உண்மையை,
    “நச்சென்று” அழகாகவும் சுருக்கமாகவும் தந்திருக்கிறீர்கள்!
    பார்த்து….. திருவள்ளுவர் கோவித்துக்கொள்ளப் போகிறார்.//

    நன்றி ஷாமா 🙂 வள்ளுவரை இழுக்காதீங்க, பக்தர்கள் கோச்சுக்கப் போறாங்க 😀

    Like

  2. //இரண்டு வரிக் கவிஞர் “திருவள்ளுவர்” உண்மையாகவே கோவிச்சுக்கத்தான் போறாரு.

    all your “kavithaigal” superb…. have no words…
    have a nice day xavier.
    //

    உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைப்பதை கவிதைகளால் ஆயபயன் எனக் கொள்கிறேன் 🙂 நன்றிகள் பல.

    Like

  3. [[காதல் இல்லா வாழ்க்கை
    சிலவற்றை இழக்கும்.
    காதலைச் சொல்லா வாழ்க்கை
    காதலையே இழக்கும்.]]

    ரொம்ப உண்மை!

    [[உன் முத்தத்தில் வழுக்கி
    வானம் நோக்கி விழுந்தேன்,
    எழுந்து பார்த்த போது
    சுவர்க்கம் எனக்குக் கீழே இருந்தது.]]

    ரொம்ப ரொம்ப உண்மை!!

    இரண்டு வரிக் கவிஞர் “திருவள்ளுவர்” உண்மையாகவே கோவிச்சுக்கத்தான் போறாரு.

    all your “kavithaigal” superb…. have no words…
    have a nice day xavier.

    Like

  4. [[ கடவுள் இல்லையென்பவர்கள்
    காதலிக்காதவர்கள்,
    தேவதை இல்லையென்பவர்கள்
    உன்னைக் காதலிக்காதவர்கள்.]]

    உண்மையை,
    “நச்சென்று” அழகாகவும் சுருக்கமாகவும் தந்திருக்கிறீர்கள்!
    பார்த்து….. திருவள்ளுவர் கோவித்துக்கொள்ளப் போகிறார்.

    Like

  5. PEETHAM ATROOR VEETHAM, PAARIL UYARIYA VEEKAM, THAANAAJI VANTHIDU VEELAI, ANAIVARUM ONRU KOODUM, ATHUVUM MAANIDAK KAATHALANROO?, ITHUPOOL NAAMUM MINAITHAAL, INPUDAN IRUPPOO MANROO? ITHUVEE KAATHAL VEETHAMAAKUM. ” KAATHAL VEETHAM ” -K.SIVA-(Fr)

    Like

  6. KAATHAL ENOOR MOOLIYAI, KARUTHIL EDUTTHUP PAARIKIN, VETHAAN THAM THAANAAJII AKALA, PUVIJEE THANNAI MARANTHU, SUITRUM VEEKAM THAANAAJI, THANNAI MARANTHU NIRKKUM, ENPATHAAJII UNARUM POOTHEY , KAATHAL KAANTHAM THODARUM, ITHUVEE KAATHAL ENROOR VEETHAM. ” ENROOR VEETHAM” -K.SIVA-(Fr)

    Like

  7. /வநான் இவ்வளவு காலமா மாறி அல்லவா நினைச்சுக் கொண்டு இருந்து விட்டேன்…. ஏமாந்திட்னோ… ?//

    மாறி…
    ஏமாறி….

    அப்படியெல்லாம் இல்லை… அது ஆளுக்கு ஆள் வேறுபடும் போல 😀

    Like

  8. நான் இவ்வளவு காலமா மாறி அல்லவா நினைச்சுக் கொண்டு இருந்து விட்டேன்…. ஏமாந்திட்னோ… ?

    Like

  9. //கண்ணைப் பார்த்து
    சிரிப்பதில் தான்
    காதலென்று நினைத்தேன்.

    மண்ணைப் பார்த்துச்
    சிரித்தால் தான் காதலென்று
    கற்றுக் கொடுக்கிறாய்
    நீ

    உண்மையாகவா… சூப்பர்.. 🙂

    Like

  10. /ரெம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு கவிதை… நல்லாயிருக்கு.
    //காதல் மிகவும்
    ரகசியமானது…….

    இந்த சங்கத்தில் பலர் பலதடவை உறுப்பினர் ஆகியிருக்கலாம்.
    //

    நன்றி சகோதரி 🙂

    Like

  11. ரெம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு கவிதை… நல்லாயிருக்கு.
    //காதல் மிகவும்
    ரகசியமானது…….

    இந்த சங்கத்தில் பலர் பலதடவை உறுப்பினர் ஆகியிருக்கலாம்.

    Like

  12. //பிறருடன்
    செல்பேசுகையில்
    வார்த்தைகள் தீர்ந்து விடுகின்றன
    உன்னுடன்
    பேசுகையில்
    பாட்டரி தீர்ந்து விடுகிறது.//

    தீர்ந்தது பாட்டரி மட்டுமல்ல மணிபர்ஸ்ஸும்தான்

    Like

  13. //தலைவா……….பின்னிட்டீங்க…..போங்க………

    வரிகள் ஒவ்வொன்றும் அருமை……………..
    //

    நன்றி கண்ணா 🙂

    Like

  14. //Note that in the first poem the word என்பவர்கள் is repeated twice (1st and 2nd line) wrongly..//

    நன்றி சரவணன். திருத்தி விட்டேன்.

    Like

  15. //உங்கள் கவிதைகளை படிச்சி ரொம்பநாளாகுது…

    எப்பவும் போல சூப்பர்…
    //

    நன்றி மாதரசன் 🙂

    Like

  16. //பிறருடன்
    செல்பேசுகையில்
    வார்த்தைகள் தீர்ந்து விடுகின்றன
    உன்னுடன்
    பேசுகையில்
    பாட்டரி தீர்ந்து விடுகிறது.//

    🙂

    Like

  17. \\ உன் முத்தத்தில் வழுக்கி
    வானம் நோக்கி
    விழுந்தேன்,
    எழுந்து பார்த்த போது
    சுவர்க்கம்
    எனக்குக் கீழே இருந்தது \\

    தலைவா……….பின்னிட்டீங்க…..போங்க………

    வரிகள் ஒவ்வொன்றும் அருமை……………..

    Like

  18. ellam Superb! I liked the most….

    பிறருடன்
    செல்பேசுகையில்
    வார்த்தைகள் தீர்ந்து விடுகின்றன
    உன்னுடன்
    பேசுகையில்
    பாட்டரி தீர்ந்து விடுகிறது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.