முதல் சந்திப்புக்கு முன்…

7

முதல் சந்திப்புக்கு முன்பும்
நாம்
பல முறை
சந்தித்திருக்கிறோம்.

கடைசி சந்திப்புக்குப்
பின்பும்
நமது சந்திப்பு
தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

மெளனங்களின்
குறுக்கீடல்களுக்கு
நாம்
சந்திப்பு என்று
பெயர் வைத்துக் கொள்கிறோம்.

அல்லது
ஒரு சில
வார்த்தைகளின் உரசலை
சந்திப்பென
உருவகப் படுத்திக் கொள்கிறோம்.

முதல் சந்திப்புக்காய்
நீயும்
கடைசிச் சந்திப்புக்காய்
நானும்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும்,

எதைப்பற்றியும் கவலையற்ற
மரம் உதிர்க்கும்
சருகுகளைப் போன்ற
சலனமற்ற சந்திப்புகள்
நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

8 comments on “முதல் சந்திப்புக்கு முன்…

  1. UUDALIN MATHTHUJIL KOODAL, KOODALIN MATHIJIL URAVU, URAVINAI INATHIDA PAALAM, VAALKAI ENROOR POORULAAMEE, ITHANAI UNARN THAVAR MELAAJI, INPPUDAN VAALAVAAR KAANPIIR. “INPUDANVAALVAAR” -K.SIVA-(Fr)

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.