நான் தான், உன் காதலி பேசுகிறேன்…

அவசியப் படாதபோதும்
தேனீர் குடித்து
சிரித்திருந்த போதோ,

காரணம் தேடிyamini-030709-15
காரணம் தேடி
காரணமில்லாமலேயே
தொலை பேசியபோதோ,

தேவைப்படாத புத்தகத்தை
கடைகடையாய்
ஏறித்
தேடியபோதோ,

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடைப்பட்ட
உணவகங்களில்
மஞ்சூரியன் தின்றபோதோ,

எப்போதேனும்
ஒரு கணத்தில்
நான் சொல்லியிருக்க வேண்டும்.

நீ
காதலிப்பதைப்
புரிந்து கொண்டேன் என்று.

பரவாயில்லை.
தோழி என்றேனும் அறிமுகப் படுத்து
உன் மனைவியிடம்.
தங்கை எனும் போது
தொண்டையில் சிக்கிக் கொள்கிறது
தூண்டில்.

0

Advertisements

10 comments on “நான் தான், உன் காதலி பேசுகிறேன்…

 1. தினந்தோறும் வந்து போகும் அவள் நினைவுகளை நான் மட்டுமே சுவாசித்துக்கொண்டிருந்த போது பெரும் ஆறுதலாய் மனதில் வந்தமர்ந்தது இந்தக்கவிதை.

  இதில் ஒரு பெண் பாத்திரம் கூறப்பட்டிருந்தாலும் எல்லோருக்கும் பொதுவானதாகவே இதன் கரு விதைக்கப்பட்டிருக்கிறது.

  “அவசியப் படாதபோதும்
  தேனீர் குடித்து
  சிரித்திருந்த போதோ,

  காரணம் தேடி
  காரணம் தேடி
  காரணமில்லாமலேயே
  தொலை பேசியபோதோ,

  தேவைப்படாத புத்தகத்தை
  கடைகடையாய்
  ஏறித்
  தேடியபோதோ,

  இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
  இடைப்பட்ட
  உணவகங்களில்
  மஞ்சூரியன் தின்றபோதோ”

  இந்த‌ வ‌ரிக‌ளில் நான் நிஜ‌மாக‌வே தொலைந்து போகிறேன். ஒரு பாட‌லில் வந்த‌ “அடை ம‌ழை நேர‌த்தில் ப‌ருகும் தேநீர்” என்ற‌ வ‌ரிக‌ளை கேட்ட‌ போதும் இவ்வாறே ஏங்கிப்போனேன்.

  “எப்போதேனும்
  ஒரு கணத்தில்
  நான் சொல்லியிருக்க வேண்டும்.

  நீ
  காதலிப்பதைப்
  புரிந்து கொண்டேன் என்று.

  பரவாயில்லை.
  தோழி என்றேனும் அறிமுகப் படுத்து
  உன் மனைவியிடம்.
  தங்கை எனும் போது
  தொண்டையில் சிக்கிக் கொள்கிறது
  தூண்டில்.”

  இதில் இருவ‌ரின் இடைவெளிக‌ளிலும் நிர‌ம்பி வ‌ழிந்த‌ ஒரு த‌ய‌க்க‌மும் அதையும் தாண்டி விளைந்திருந்த‌ ஆழ‌மான காத‌லும் புனித‌மாய் உரைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தற்காக‌வே ந‌ண்ப‌ர் சேவிய‌ருக்கு க‌ற்க‌ண்டு ம‌ழை பொழிவிக்க‌லாம். ச‌பாஷ் ந‌ண்ப‌ரே.

  இறுதி வ‌ரியில் “தூண்டில்” எனும் சொல் பாவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தில் ஏராள‌மான‌ உண‌ர்வுக‌ள் ம‌றைந்து கிட‌க்கின்ற‌ன‌. என‌க்கு நிக‌ழ‌க்காத்திருப்ப‌தும் அதுதான். எப்போது என்றுதான் புரிய‌வில்லை.

  “இந்த‌க்காத‌ல் என்ன‌ பெரும் பார‌மா
  இது பேறு கால‌ம் இல்லா கர்ப்ப‌மா”

  என்ற‌ தொனியில் சிக்க‌ வைத்து அருமையான‌ க‌விதைத்தூண்டில் போட்டு எம்மை ஈர்த்த‌மைக்கு ந‌ண்ப‌ருக்கு ந‌ன்றிக‌ள்.

  Like

 2. அன்பு நண்பர் அம்ஜத், உங்கள் விரிவான விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும், அன்புக்கும் மனமார்ந்த நன்ற்கள் 🙂

  Like

 3. AUMPIYA KAATHALAI NADPAA YAAKKIN, YAAR IVAR VEERAVAR, ENRAVAR NINRAVR, PETHAM ATRA NADPINAI VIDAVAA ?, THOOLIK KAATHAL PERITHU? ENPATHAI UNARTHIDA ETHUTHAAN VENDUM? … -ETHUTHAAN VENDUM ?-K.SIVA(Fr)

  Like

 4. என் மனசில் வார்த்தையாக இருந்ததை நீங்க கவிதையா கோர்ததை பார்க்க சந்தோசமா இருக்கு ஆனா ஒரு சின்ன மாறுதல்

  தோழி என்றேனும் அறிமுகப் படுத்து
  உனக்கு மனைவியாக வருபவளிடம் .
  தங்கை எனும் போது
  தொண்டையில் சிக்கிக் கொள்கிறது
  தூண்டில்.”

  Like

 5. THOOLI ENRU KOORIK ,THEVAI ENNUM PINAIIPAI, VIITHIKKUK KONDU VARUM, VEETHAAN THAM THANNAI, PAATHI VALIIP PAYANATHIL, CIKKIK KOOLAA NADPE MAANATHIIT, PERITHEN RUNARVAAR PERIYOOR, ITHUVE NADPIN THOODATORAVU. ” THOODATORAVU”-K.SIVA-(Fr)

  Like

 6. /என் மனசில் வார்த்தையாக இருந்ததை நீங்க கவிதையா கோர்ததை பார்க்க சந்தோசமா இருக்கு ஆனா ஒரு சின்ன மாறுதல் //

  😦

  Like

 7. தனக்குள் இருக்கும் காதலைச் சொல்லத் தாமதமாகியவளின்,
  “அனலிலிட்ட மெழுகான” அவள் துடிப்பையும்… ஏக்கத்தையும்…
  “தங்கை” எனச் சொல்லி விடக் கூடாதே என்னும் அந்தத் தவிப்பையும்….
  அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்……
  அழகான “காதல்”….. 🙂
  வாழ்த்துகள் சேவியர்!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s