காகிதச் சிறகுகள்..

 34

ஓவியம் வரைய
நினைத்தால்
தூரிகை திருடுகிறாய்.

கவிதை எழுத
நினைத்தால்
என்
கற்பனை திருடுகிறாய்.

கண்மூடிக் கிடந்தால்
விழிகளில் வழியும்
கனவுகளை வருடுகிறாய்.

என்ன தான் செய்வது ?

சிற்பமா ?
சிற்பத்துக்காய் உட்கார்ந்தால்
விழிகளால் செதுக்க மாட்டாயா
உளிகளை ?

ஓவியத்தையும்,
கவிதையையும்
சிற்பத்தையும் தவிர்த்து
இந்த
கவிதை உலகம் எனக்கு
எதையுமே
கற்றுத் தரவில்லையடி கண்ணே.

உன் பிம்பம் படிந்த
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை விட,

அன்றைய உன் மூச்சுக் காற்றை
இன்றும்
இழுத்துப் பிடித்திருக்கும்
என் மொட்டை மாடித்
தென்றலை விட,

நினைவுகளின் கனத்தில்
கழுத்தறுபட்டுப் போகும்
அந்த
கடைசித் துளிக் கண்ணீரை விட
அடர்த்தியான,
கவிதைகளை என்னால்
எழுதமுடியாமல் போனதால்
இன்னும்
விதவையாகவே கிடக்கின்றன
என் வீட்டுக் காகிதங்கள்.

உணர்வுகளின்
மலர் தீண்டல்கள்
கீறிச் சென்ற காயங்களை,
என்
வார்த்தை வாட்களால்
மீறிச் செல்ல முடியவில்லை.

நீ
கருணைக் கொலையென்று சொல்லி
கொய்தெறிந்த என்னை,
நான்
திருப்பி எடுக்க மறுத்ததாலா
இன்னும்
தொடர்ந்து திருடுகிறாய் ?

0

Advertisements

12 comments on “காகிதச் சிறகுகள்..

 1. பாருடா… இந்த மனுஷன் ஆந்திரா புள்ளைங்களையே வளைச்சு வளைச்சு படம் போடுறாரு… நல்லதுக்கில்லைன்னே…. அப்புறம் கனவுல வருவேன், என்னக் கண்டுட்டு நீங்க அலருவீங்க… வீட்டில எல்லாரும் பயந்துருவாங்க… வீனா ரிஸ்க் எடுக்காதீங்க…. சொல்லிட்டேன்!

  Like

 2. //பாருடா… இந்த மனுஷன் ஆந்திரா புள்ளைங்களையே வளைச்சு வளைச்சு படம் போடுறாரு… நல்லதுக்கில்லைன்னே…. அப்புறம் கனவுல வருவேன்,//

  இதுல எல்லாம் ஜாதி, மொழி, எல்லை, மதம், பேதம், வேதம், இத்யாதி இத்யாதி எல்லாம் பாக்கக் கூடாது ராசா !

  Like

 3. நினைவுகளின் கனத்தில் கழுத்தறுபட்டுப் போகும் அந்த கடைசித் துளிக் கண்ணீரை விட அடர்த்தியான, கவிதைகளை என்னால்
  எழுதமுடியாமல் போனதால் இன்னும் விதவையாகவே கிடக்கின்றன
  என் வீட்டுக் காகிதங்கள். uyirai pilinthedukam variggal sir… kaayathin aalathai prathibalikindrathu…

  Like

 4. NINAIVAI AKARI, KANVAIP POORIPADA,ULLATH THU NIVUDAN,SEYARPPADIN UNTHAN,KALIVUK KAAKI THAMUM, KAATHAL THANNAIK, KAALADI THANNIL, ALLIK KUVIKKUM, NINAITHIDIN UNTHAN,ULLASUMAKAL UDANEEPARAKKUM KAANPIIR. ” UDANEE PARAKKUM” -K.SIVA-(Fr)

  Like

 5. நீ கருணைக் கொலையென்று சொல்லி கொய்தெறிந்த என்னை,
  நான் திருப்பி எடுக்க மறுத்ததாலா
  இன்னும் தொடர்ந்து திருடுகிறாய் ?

  ஆழமான, அழகான, மென்மையான, உயிர் தொடும் வரிகள்….அடடடா அற்புதம்…. வாழ்த்துகள்…. தொடருங்கள்…. நன்றி Xavier !

  Like

 6. /ஆழமான, அழகான, மென்மையான, உயிர் தொடும் வரிகள்….அடடடா அற்புதம்…. வாழ்த்துகள்…. தொடருங்கள்…. நன்றி Xavier !//

  நன்றி நன்றி 🙂

  Like

 7. NINAIVAI AKARI, KANVAIP POORIPADA,ULLATH THU NIVUDAN,SEYARPPADIN UNTHAN,KALIVUK KAAKI THAMUM, KAATHAL THANNAIK, KAALADI THANNIL, ALLIK KUVIKKUM, NINAITHIDIN UNTHAN,ULLASUMAKAL UDANEEPARAKKUM KAANPIIR. ” UDANEE PARAKKUM” -K.SIVA-(Fr//

  நன்றி சிவா 🙂

  Like

 8. [” அன்றைய மூச்சுக் காற்றை இன்றும் இழுத்துப் பிடித்திருக்கும் மொட்டை மாடித் தென்றல்….
  கவிதைகளை எழுதமுடியாமல் விதவையாகக் கிடக்கும் காகிதங்கள்…..”]….
  அருமையான வரிகள் சேவியர்!….. எப்போதும் போலவே!….. வாழ்த்துகள்!!

  “சிறகு தந்து, சிறகை ஒடிக்கவும்”…. உயிரைத் தந்து, பின் கொன்று போடவும்….
  காதலால் மட்டுமே சாத்தியம் அல்லவா?

  Like

 9. /சிறகு தந்து, சிறகை ஒடிக்கவும்”…. உயிரைத் தந்து, பின் கொன்று போடவும்….
  காதலால் மட்டுமே சாத்தியம் அல்லவா?//

  நன்றி ஷாமா 🙂

  இருக்கும் ஒன்றைத் தானே உடைக்க முடியும் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s