இன்னொரு வேண்டுகோள்.

 நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

 

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
2இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

 

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.

 

தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.

 

மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

 

காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

 

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

 

எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

Advertisements

26 comments on “இன்னொரு வேண்டுகோள்.

 1. எப்போதேனும்
  எனைக் கடக்க நேர்ந்தால்
  எதிரியாய் பாவித்துப் போ.
  இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே.

  ithu thaan final touch ooooooooooooooooooooooo

  Like

 2. //photo la irukkura pappa yarung na//

  விஜய் கோபால்சாமி தான் இதற்குப் பதில் சொல்ல சரியான ஆள் 😀

  Like

 3. //photo la irukkura pappa yarung na//

  விஜய் கோபால்சாமி தான் இதற்குப் பதில் சொல்ல சரியான ஆள் 😀

  Like

 4. இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே.

  Like

 5. KAAJINTHU VIDA MALARUKKUm, KAARIUD KAATHA LUKKUM, PAALAI VANATHIL VITHAITH THIDDA NELUKKU, VILAIKAL KEDPATHIL PAYAN UNDOO SOOL. – “PAYANUNDOO”? – K.SIVA (Fr)

  Like

 6. // எப்போதேனும்
  எனைக் கடக்க நேர்ந்தால்
  எதிரியாய் பாவித்துப் போ.
  இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே //

  நச் வரிகள்…

  மனதை விட்டு அகல மறுக்கிறது

  Like

 7. வேதனைகளின் முடிவுரையாய்
  ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

  எப்போதேனும்
  எனைக் கடக்க நேர்ந்தால்
  எதிரியாய் பாவித்துப் போ.
  இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே.

  good line sir i love this words.

  Like

 8. காதலின்
  வெட்டுக்காயங்களை எல்லாம்
  நிகழ்வின் தசைகள் வந்து
  நிவர்த்திவிட்டன.

  arumai xavier anna

  Like

 9. எப்போதேனும்
  எனைக் கடக்க நேர்ந்தால்
  எதிரியாய் பாவித்துப் போ.
  இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே.

  final wordings super

  Like

 10. PUNNAKAI THANNAI THANTHU,POOTHAIJIL THANAI MARAPPIN, KANNIYAR VADIVAM ANREE, KAARINIL PARAKKUM ENRAA?, KARUTHUM MAANIDAR IRUPPIN, KAATHAL ENPATHU MATHUVAA? ” MATHUVAA ” -K.SIVA_(Fr)

  Like

 11. NUUTRUK KANAKKINIL VIRALVIDU, THEDIP PAARKINUM MALRILONRU, KAARIL PARAKKUM PADDAMPOOLA, MEIYAI VARUTHI PUTHUMOOLIYAAKI,KARUTHIL EEDUKUM ANPUTHENAI, PAITRUM EVLAI VATHNAMMAARUM, VARUDUM VIRALKAL THAANAAJII, ANAIKUM RAAKAM KAATHALENRA, PEETHAM ATRA OORUMALRANROO? ,VEETHA VEENDAAM ITHARKU,VIDUTHALAI VEENDAAM ATHARKU, PEETHAM ILLAIP PIRARKU, PERUMAI KOOLVIIR, THURANTHIDU MULLAK KATHAVU,MARANTHU KAANUTHAL KAATHAL, MAKILNTHU INAIVATHEY KAATHAL, MAANIDAM MATRUM MANAITHUM, MARANATHU THUJILVATHUM KAATHAL,KAAATHALAI MARANTHIDIL PEETHAM, KAATHALAIK KADIK KAAPATHUM THANIVEETHAM ” THANIVEETHAM ” -K.SIVA-(Fr)

  Like

 12. //எப்போதேனும்
  எனைக் கடக்க நேர்ந்தால்
  எதிரியாய் பாவித்துப் போ.
  இன்னொரு புன்னகையை மட்டும்
  பறித்துப் போடாதே.

  final wordings super
  //

  நன்றி தமிழ்ச் செல்வி..

  Like

 13. /காதலின்
  வெட்டுக்காயங்களை எல்லாம்
  நிகழ்வின் தசைகள் வந்து
  நிவர்த்திவிட்டன.

  arumai xavier anna
  //

  மிக்க நன்றி தமிழ் செல்வி 🙂

  Like

 14. [“தொடுவானம் தொட ஓடிய நினைவுப் புள்ளிமான்களை”……]

  அடடா அருமை!
  கடிவளம் பூட்டிய குதிரையை விட, “புள்ளிமான்” மென்மையாகவும் அழகாகவும் ஓடும்….
  நின்று, நிதானித்து, அழகாகச் சொல் அமைப்பதில் நீங்கள் “மன்னன்” தான் சேவியர்.
  அழகான கவிதை… வாழ்த்துகள்!!

  Like

 15. //அடடா அருமை!
  கடிவளம் பூட்டிய குதிரையை விட, “புள்ளிமான்” மென்மையாகவும் அழகாகவும் ஓடும்….
  நின்று, நிதானித்து, அழகாகச் சொல் அமைப்பதில் நீங்கள் “மன்னன்” தான் சேவியர்.
  அழகான கவிதை… வாழ்த்துகள்!!//

  மிக்க நன்றி ஷாமா.. உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s