வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.
படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,
பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.
மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.
வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.
ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும்.
கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி to சரவணன் பிச்சாண்டி, லிங்க் அனுப்பியமைக்கு.
அனைவரும் கட்டாயம் பார்க்க மற்றும் உணர வேண்டிய குறும்படம்
LikeLike
:-((
sets me thinking whenever I leave any hotels.
LikeLike
have to watch.. nice post keep posting good articles….
LikeLike
have to watch.. nice post keep posting good articles….
LikeLike
மனச்சாட்சி என்னை கூண்டில் நிறுத்தி வைத்து குற்றம் சுமத்துகிறது.
எனது நண்பர்கள் அனைவருக்கும் இதை அஞ்சல் செய்துள்ளேன்.
ஒவ்வொருவரும் ஒருத்தருக்கேனும் ஒரு வேளையாவது உணவு கொடுத்துதவினாலே போதும் போலிருக்கிறது.
நான் எனது மதத்தை உயர்த்திக்காட்ட வேண்டுமென்பதற்காக இதை சொல்ல வரவில்லை. இஸ்லாத்தின் ஸக்காத் (ஏழை வரி) முறைமை சற்று தெளிவானது.
முடிந்தவர்கள் அதை ஆய்ந்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.
இந்த கருத்துப் பரிமாறல் நெருடலாக இருந்தால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.
நண்பர்கள் சரவணன் மற்றும் சேவியர் ஆகியோருக்கு நன்றிகள்.
LikeLike
எண் இரண்டு கண்ணத்திலும் மாறி மாறி அறைவது போல் இருந்தது.
LikeLike
என் இரண்டு கண்ணத்திலும் மாறி மாறி அறைவது போல் இருந்தது.
LikeLike
//என் இரண்டு கண்ணத்திலும் மாறி மாறி அறைவது போல் இருந்தது.//
நன்றி ஜீவன். வருகைக்கும், கருத்துக்கும்.
LikeLike
/
மனச்சாட்சி என்னை கூண்டில் நிறுத்தி வைத்து குற்றம் சுமத்துகிறது.
எனது நண்பர்கள் அனைவருக்கும் இதை அஞ்சல் செய்துள்ளேன்.
ஒவ்வொருவரும் ஒருத்தருக்கேனும் ஒரு வேளையாவது உணவு கொடுத்துதவினாலே போதும் போலிருக்கிறது.
நான் எனது மதத்தை உயர்த்திக்காட்ட வேண்டுமென்பதற்காக இதை சொல்ல வரவில்லை. இஸ்லாத்தின் ஸக்காத் (ஏழை வரி) முறைமை சற்று தெளிவானது.
முடிந்தவர்கள் அதை ஆய்ந்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.
இந்த கருத்துப் பரிமாறல் நெருடலாக இருந்தால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.
நண்பர்கள் சரவணன் மற்றும் சேவியர் ஆகியோருக்கு நன்றிகள்.
//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் நண்பரே… கருத்துப் பரிமாற்றம் ஏதும் பிழையில்லை… தொடருங்கள், அன்புடன்.
LikeLike
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! நெஞ்சம் விம்முகிறது!
LikeLike
முதலில் உணவைக் குப்பையில் போடும் பழக்கத்தைக் கைவிட்டால் நல்லது…
உணவை வீண் விரயம் செய்யாது, நம்மால் முடிந்த அளவுக்கு மட்டுமே சாப்பிட்டு… முடிந்தவரை இல்லாதவர்களுக்கு ஒருவேளை உணவு கொடுக்கப் பழகினால் உத்தமமாக இருக்கும்….
அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும் போது
“நான் பசியாய் இருந்தேன் நீ எனக்கு உணவு தரவில்லை” என்ற இயேசுவின் மலைப்பொழிவே ஞாபகத்துக்கு வருகிறது.
“ஏழைக்கே நல்ல உள்ளம் உண்டு” என்பது போல்
ஏழையே ஏழைகளுக்கு உணவு கொடுப்பதைப் பார்க்கும் போது
நாம் செய்யும் பிழைகள் “சுருக்” எனத் தைக்கின்றன.
ஒரு நாளில் 25,000 பேர் பட்டினியால் வாடுகிறர்கள்… அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்…
Thanks for publishing this useful post about the hunger and poverty brought about by Globalization.
சமூக விழிப்புணர்வைத் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் சேவியர்!
நல்ல மனம் வாழ்க!
LikeLike
//ஏழையே ஏழைகளுக்கு உணவு கொடுப்பதைப் பார்க்கும் போது
நாம் செய்யும் பிழைகள் “சுருக்” எனத் தைக்கின்றன//
மிக மிக உண்மை.
LikeLike
வருகைக்கு நன்றி சிவாஜி.,
LikeLike
பசி வந்தால் பத்தும் பறக்குமா அதற்காக இப்படியா ?
“நெஞ்சு பொறுக்குதிலையே ”
இதை பார்த்தவுடன் – வெட்கி தலை குனிகிறேன். ஏதும் செய்ய இயலா!
இதை (இதையாவது) கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றியா!
அட மானிடா!!!
கடவுளே – நீ இருக்கிறாயா என்பதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு. பயன்படுத்திகொள்.
LikeLike
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபால்.
LikeLike
நான் ஒன்றும் மேட்டுக்குடியைச் சார்ந்தவன் அல்ல !! இருந்த போதிலும் நான் உணவு அருந்தும்போது ஒரு காகமோ அல்லது நாயோ உற்று நோக்கினாலே , மனம் பதைத்து, என் தட்டிலிருந்து ஒரு கை உணவு வைத்தால்தான் நிம்மதி வருகிறது …
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்,
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம்
கொடுப்பதில்லை !!!!!!!!!!!!!
பாலாதிருவாரூர்
LikeLike
மனதை உண்மையில் உலுக்கிவிட்டது.உலகமயமாதலில் மனிதநேயம் அழிந்துவருகிறது.என்பதற்கு சிறந்த குறும்படம் ஒரு நாளில் 25000 நபர் பசியால் இறக்கிறார்கள் என்பது நாம் மனதை தைய்க்கிறது பணத்தோடு கூடிய வாழ்வில் ஒரு அன்பும் பசி வாழ்வில் ஒரு அன்பும் கண்ணீரை வார்க்கிறது. நம் அன்பில் கரைபடிந்துக்கொண்டேயிறுக்கிறது. நாம் இனி எப்படி ஒரு புதியசமூத்தை உருவாக்கப்போகிறோம் என்பதுதான் கவலைத் தருகிறது. சிறந்த குறும்படம்
LikeLike