கவிதை : எது எனக்கழகு ?

tamanna-1__7_

எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

Advertisements

18 comments on “கவிதை : எது எனக்கழகு ?

 1. //தொட்டாச்சிணுங்கியின்
  தோழி நீ,
  அனிச்ச மலரின்
  பெண் அவதாரம் நீ,
  விடையில்லையேல் வாடிவிடுவாய்.

  WOW… சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு..
  கவிதையில் கிறங்கி இலயித்துப் போனேன்…
  மெல்லவரும் காற்றே அவளை வாட்டிவிடும் போலிருக்கின்றதே…

  வாழ்த்துக்கள்…

  Like

 2. SOOLLUM SIRIP PALAKUM, SUVAIJIN MATHIP PALAKAAJII, KAIJIIT THVALU THALPOOL, ULLUM PURAMU MMAYAAKI, UTHIRA THUDA NOODUM, KALLAM KAPADA MARAK, KANIVINAI THARUVATHEY KAATHAL. ” KAATHAL ” -K.SIVA-(Fr)

  Like

 3. நன்றி சிவா… நிறைய பதிவுகளைப் படித்து பின்னூட்டங்கள் இட்டமைக்கு மனமார்ந்த நன்றிகல் 🙂 தமிழில் எழுதுங்களேன்…

  Like

 4. /WOW… சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு..
  கவிதையில் கிறங்கி இலயித்துப் போனேன்…
  மெல்லவரும் காற்றே அவளை வாட்டிவிடும் போலிருக்கின்றதே…//

  நன்றி சுபானு 😀

  Like

 5. NALATH THUDAN NALAMAAKA, NIIDU NIIR VAALKAVENRU, IRUNTHIDAL VENDI NIRKA, ENRUMEE NIIDUNIIR VAALKA VAALKA VEE. INPUDAN EETRU NIIVIIR VAALKAVEE. ” VAALKAVEE ” -K.SIVA-(Fr)

  Like

 6. ” நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய் காதல்.”
  அதனால் தான் அந்த நீர்க்குமிழி உடைகின்றதா?????
  Just joking…
  வைரமுத்து கவிதை வாசித்தது போன்ற உணர்வு…. கவிதைகள் தொடரட்டும்… வாழ்த்துகள்!

  Like

 7. /” நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய் காதல்.”
  அதனால் தான் அந்த நீர்க்குமிழி உடைகின்றதா?????//

  பின்னிட்டீங்க போங்க 🙂

  //வைரமுத்து கவிதை வாசித்தது போன்ற உணர்வு//

  இத்தனை பெரிய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 😀

  Like

 8. காதல் வழிய வழிய நிரம்புகின்றன கவிதைக்குள் சில பூக்கள்..
  அழகு..!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s