அலாவுதீன் விளக்கு…

Shradha_Das

என்னிடமிருக்கிறது
ஒரு விளக்கு.

அலாவுதீன்
தவறவிட்டதாய் இருக்கலாம்
அல்லது
வேண்டுமென்றே
விட்டெறிந்ததாய் இருக்கலாம்.

அது
தானாகவே வந்து
என்
மனசைத் தேய்க்கிறது.

வாசலுக்கு வெளியே
போட்டால் கூட
சிரித்துக் கொண்டே
என்
படுக்கையறைக்குள்
புகுந்து விடுகிறது.

அதுவாகவே வந்து
என்
உதடுகளில் உட்கார்கிறது
அப்போது
உள்ளத்தில்
கனவு மழை பொழிகிறது.

நான்
ஏதேனும் கேட்டால் சிரிக்கிறது
அதற்குத் தேவையானதை
நான் தான்
தரவேண்டுமாம்.
நகைக்கிறது.

இப்போதெல்லாம்
அதன் கட்டளையில்லாமல்
எனக்கு
பொழுதுகள் விடிவதில்லை.
அப்படி விடிந்தாலும்
நானாகவே போய்
அதை
உசுப்பி எழுப்பி பேசவிடுகிறேன்.

இந்த
அதிசய விளக்கைப் பற்றி
நண்பனிடம்
விளக்கப் போனேன்.

அவன்
கல்பனாவைக் காதலிக்கையில்
அவன் வீட்டிலும்
ஒன்று இருந்ததாம்.

கண்டெடுத்ததும்
எறிந்து விட வேண்டுமாம்,
பழகிவிட்டால்
விலகிப் போகாதாம்
சோர்ந்து போயிருந்தவன் சொன்னான்.

0

Advertisements

13 comments on “அலாவுதீன் விளக்கு…

 1. KAARIL VARUM MALLIKAI VAASANI, KAASAIK KOODU THTHUM VAANKIDU VAAYAA?, KAIYAI NIIDDI VAANKIYA THELLAAM, KANAVINIL VANTHU MEIYAITH THODUMAA? PALAKIYA THENPAUTHU PAJITHIYAM POONRATHU, PAARINAI MARANTHU PUTHUMAIP PAJIITHIYAM, SAKATHIJIL KIDAKKUM ERUMAIYAIP POONRATHU, THANAI MARATHU YAARUM ATRUTH, THAVITH THIDUPOOTHU YAARUM YAARTHAAN IVARKU, INAYAAJI IRUPPAAR ENPATHEENTHAN KEELVIJILONRU, SOORNTHU POONAVAN SORPPANAM ILANTHAAN, ITHANAAL THOODARNTHAU THOODARNTHU ANROO?. THOODARAN THATHU THOODARUM ITHUVEENIYATHI. ” ITHUVEE NIYATHI “-K.SIVA-(Fr)

  Like

 2. காரில் வரும் மல்லைகை வாசனை, காசைக் கொடுத்ததும் வாங்கிடுவாயா? கையை நீட்டி வாங்கியதெல்லாம், கனவில் வந்து மெய்யைத் தொடுமா? பழகியதென்பது பைத்தியம் போன்றது, பாரினை மறந்த புதுமைப் பைத்தியம், சகதியில் கிடக்கும் எருமையைப் போன்றது, தன்னை மறந்து யாருமற்றுத், தவித்திடும் போது யாரும் யார்தான் இவருக்கு, இனயாஇ இருப்பார் என்பதேதான் கேள்வியிலொன்று, சோர்ந்து போனவன் சொற்பனம் இழந்தான், இதனால் தொடர்ந்தது தொடர்ந்தது அன்றோ? தொடர்ந்தது தொடரும் இதுவே நியதி, இதுவே நியதி! – K. சிவா (ஃப்ரான்ஸ்)

  சிவா (ஃப்ரான்ஸ்), தமாங்கிலத்திலிருப்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தமிழில் பெயர்த்துள்ளேன். தயவு செய்து இதற்கான பொழிப்புரை, பதவுரை போன்றவற்றையும் நீங்களே வந்து எழுதிவிடுங்கள். ரெசெஷன் காலத்தில் அலுவலகத்தில் யாரையும் ஆன்ஷோர் அனுப்புவதில்லை என்பதால் ஃப்ரான்ஸ் வரை வந்து அர்த்தம் கேட்டுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

  Like

 3. //காரில் வரும் மல்லைகை வாசனை, காசைக் கொடுத்ததும் வாங்கிடுவாயா? கையை நீட்டி வாங்கியதெல்லாம், கனவில் வந்து மெய்யைத் தொடுமா? பழகியதென்பது பைத்தியம் போன்றது, பாரினை மறந்த புதுமைப் பைத்தியம், சகதியில் கிடக்கும் எருமையைப் போன்றது, தன்னை மறந்து யாருமற்றுத், தவித்திடும் போது யாரும் யார்தான் இவருக்கு, இனயாஇ இருப்பார் என்பதேதான் கேள்வியிலொன்று, சோர்ந்து போனவன் சொற்பனம் இழந்தான், இதனால் தொடர்ந்தது தொடர்ந்தது அன்றோ? தொடர்ந்தது தொடரும் இதுவே நியதி, இதுவே நியதி! – K. சிவா (ஃப்ரான்ஸ்)///

  அப்பாடா… இப்போ தான் நண்பர் சிவா அனுப்பிய ஒரு பதிலை முழுமையாய், இனிமையாய், தெளிவாய் படிக்கிறேன் 😀

  //தயவு செய்து இதற்கான பொழிப்புரை, பதவுரை போன்றவற்றையும் நீங்களே வந்து எழுதிவிடுங்கள்//

  தமிழில் எழுதுங்கள் 😀

  சிவா, ஒரு நகைச்சுவைக்குத் தான் சீரியஸா எடுத்துக்காதீங்க 😀

  Like

 4. /nee nesipathai yaruku vendumanalim vittu kodu aanal unnai nesipawarai yarukagavum vitu kodukathe//

  இதைத் தானே தலைவர் வள்ளி படத்துல சொன்னார்.. இல்லையா ?

  Like

 5. “பழகிவிட்டால் விலகிப் போகாதாம்
  சோர்ந்து போயிருந்தவன் சொன்னான்”

  கவிதையின் இறுதி வரி நெஞ்சைக் கனக்க வைத்தது…
  அழகிய நடையில் அற்புத கவி… உங்கள் படைப்புகளுக்கு வாழ்த்துகள்!

  Like

 6. /கவிதையின் இறுதி வரி நெஞ்சைக் கனக்க வைத்தது…
  அழகிய நடையில் அற்புத கவி… உங்கள் படைப்புகளுக்கு வாழ்த்துகள்!//

  நன்றி ஷாமா 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s