கவிதை : சென்னை

100ft-bye-pass

அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் மகனிடம்

8 comments on “கவிதை : சென்னை

 1. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்

  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  Like

 2. //கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
  நாலு வாங்கிப் போட்டிருக்கலாம் என
  பிற்காலத்தில் பேசக் கூடும்
  நான் என் மகனிடம்//.

  பொருளாதாரம் அப்படிதான்!….
  விலைவாசி இறங்குவதைப் பார்த்ததுண்டா யாரும்?..
  அதைப்போன்று, விட்டவற்றைப் பிடித்தலும் முடியாததொன்றேயாகும்…
  என்பதை உங்கள் “கவிநடை”யில் எப்போதும் போலவே அழகுடன், இனிமையுடன் மிளிர வைத்திருக்கிறீர்கள்.
  உங்கள் கவியழகை ரசிக்கிறேன்… வாழ்த்துகிறேன்!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.