கேட்டானே 32 கேள்வி…

IMG_09241. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிரியமாய் பெற்றோர் வைத்த பெயர் இது. தவமாய்த் தவமிருந்து ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்று நாகர்கோவில் சவேரியார் கோயிலில் செபித்த போது ஒரு காட்சி தோன்றி அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறப்பான் என அருள் கிடைத்ததாய் அம்மா சொல்வது பெயர் பிறந்த கதை. சவேரியாரின் நினைவு மறையாமல் இருக்கட்டும் என சேவியர் என வைத்து விட்டார்கள்.

சேவியர்- பெயரை மாற்றினா எழுத்துத் துறையில் உன்னை பெரிய ஆளாக்கிக் காட்டுகிறேன் என பத்திரிகை நண்பர்கள் சிலர் சொன்னார்கள். பெற்றோர் இட்ட பெயரை மாற்றி பெரிய ஆளாவதை விட பெற்றோரின் அன்பில் சின்ன ஆளாகவே இருந்து விடலாம் என அப்படியே இருந்து விட்டேன்.

என்னையும், என் பெயரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

(ஜேஏவியார் – என யாரும் அழைக்காத போது (பெரும்பாலும் தெலுங்கு நண்பர்கள் ஜேவீயார், ஜேவியர், க்ஸாவீயர் என பல விதங்களில் அழைப்பார்கள். . Xerox – ஐ ஜெராக்ஸ் என்று சொல்லும் போ Xavier – ஷுட் பி ஜேஏவியார் னா என்று விளக்கம் வேறு )

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

தோழி ஜானகியின் ஆறுவயது மகன் விபத்தில் பலியான துயரத்தின் போது. பதினாறு நாட்களுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது மீண்டும் அழநேர்ந்தது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

புடிக்கும். முக்கியமா பிடித்தமானவர்களின் பெயர்களைத் தமிழில் எழுதும் போது.

4. பிடித்த மதிய உணவு என்ன?

சுடு சாதம் + மீன் குழம்பு + வெங்காயம் பச்சைமிளகாய் எல்லாம் போட்டு ஒரு டபுல் ஆம்லெட் + கடைசியா தயிரும் மோர் மிளகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் பழகினாலே நண்பனாகி விடும் பழக்கம் எனக்கு உண்டு. அதன் பின் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தோன்றும். வீட்டுக் தெரியாமல் நண்பர்களின் தேவைக்காய் பல ஆயிரங்களை அள்ளிக் கொடுக்கும் திருட்டுக் குணமும் உண்டு

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?xavier4

அருவியில் குளிக்கவும்,

கடலில் குதிக்கவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அது நபரைப் பார்க்கும் இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் பொறுத்து மாறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : கோபப்படுத்திய, எரிச்சலூட்டிய, அவமானப்படுத்திய நிகழ்வுகளையெல்லாம் ஜஸ்ட் லைக் தேட் மறந்து விட முடிவது.

பிடிக்காதது : நண்பர்களின் பெயர்களைக் கூட சமயத்தில் மறந்து விட்டு குழம்புவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது

அலுவலகத்தில் வேலை செய்தாலும் தனது விருப்பமான பரத நாட்டியத்தைத் தொடர்வது, நான் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் சற்றும் பிசகாமல் அட்டவணை போட்டு ஞாபகமூட்டுவது, கோபத்தை ஒரு நாளுக்கு மேல் வளர்க்க விரும்பாதது எல்லாவற்றுக்கும் மேலே சூப்பராக சமைப்பது !

இத்யாதி இத்யாதி….

பிடிக்காதது :

“கிரிக்கெட் பாத்தது போதும் தூங்குங்க….”

“வேலை பாத்தது போதும் தூங்குங்க…”

“வீக் எண்ட்லயும் கம்ப்யூட்டரையே கட்டிகிட்டு அழுங்க…”

இத்யாதி..இத்யாதி…

 

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கூட்டுக் குடும்பத்துல இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய என்னைப் போன்ற ஒரு கிராமத்து மனுஷனை அலைக்கழிக்கும் கேள்வி இது !

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீல நிற  ஜீன்ஸ் + மஞ்சள் நிற – டி ஷர்ட். இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்

 

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

பார்ப்பது, சன்னல் வழியே  சாலையில் நடக்கும் இருளை.

கேட்பது, லவ் பேர்ட்ஸ் இசைக்கும் புரியாக் கவிதை.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

“பேனாக்களாக” எனில் எல்லா வண்ணமும்

14. பிடித்த மணம்?

புதிய புத்தகத்தின் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

மனசாலும், எழுத்தாலும் வசீகரிக்கும் நண்பர் புகாரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நண்பர் விஜய் கோபால் சாமி எழுதும் “என்னமோ போடா மாதவா”. ரொம்பவே சுவாரஸ்யமான தொடர். வியக்கவும், ரசிக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

விளையாட, டேபிள் டென்னிஸ்.

பார்க்க – கிரிக்கெட்

 

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ், ஏதும் தேவைப்படாத பார்வை இருக்கிறது !

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஆங்கிலத்தில், அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் பிடிக்கும்.

ஹாலிவுட் படங்கள் எக்கச் சக்கமாய் பார்ப்பதுண்டு.

தமிழில் இயல்பான படங்கள். மொழி, அபியும் நானும்,

தவமாய் தவமிருந்து, போல

மலையாளத்தில்: நகைச்சுவைப் படங்கள் & பூதக்கண்ணாடி போல நண்பர்கள்

பரிந்துரைக்கும் படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஏண்டா பார்த்தோம், விதி விளையாடிடுச்சே, என நினைக்க வைத்த

எஸ்.ஜே சூர்யாவின் மூன்றாம் விதி !

 

20. பிடித்த பருவ காலம் எது?

கல்லூரி காலத்தில் படித்த “பருவகாலம்” பத்தி கேக்கறீங்களா ?

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க.. ?

ஈழக் கதவுகள், அருவி வெளியீடு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

படமே வைப்பதில்லை

பளிச் என இருந்தால் தான் பிடிக்கிறது

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பொலி

பிடிக்காத சத்தம் : பனை ஓலைகளினால் பாய் முடையும் போது எழும் ஒலி.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இதில் எது அதிக தொலைவோ அது. நிஜமாவே எனக்குத் தெரியாது

 

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சென்னை டிராபிக்கில் கோபப்படாமலேயே காரோட்டுவது !

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

குழந்தைகள் மீதான வன்முறை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல் சைக்கிள் கேப் கிடைச்சா ஒரு தூக்கம் போடணும்ன்னு தோணுது.

 

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குறிஞ்சி அல்லது நெய்தல்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இயல்பா…

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

 

நீண்டகால நண்பர்களுடன் அரட்டை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மன்னிப்பை தயங்காமல் கேட்டும், தயங்காமல் கொடுத்தும் வாழுங்கள் வாழ்க்கை அர்த்தப்படும்

 

பின் குறிப்பு : அழைத்த சகோதரன் விஜய் கோபால் சாமிக்கு நன்றி !

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்..

Advertisements

17 comments on “கேட்டானே 32 கேள்வி…

 1. ada neenga thaan intha list la kadai pola irukku

  ippo aduththa thodar pathivu aarampa maayiduchu annaththa

  Like

 2. The meaning of xavier is “Brightness”. …. what a wonderful name you have!
  so, there is no wonder, that you love your name xavier!
  ( Saint Francis Xavier was a 16th-century Jesuit missionary who took Christianity to the East Indies and Japan )
  “ஒளிமயமான எதிர்காலம் உங்கள் பெயரினில் இருக்கிறது” 😉
  உங்கள் பெயர் போன்றே நீங்களும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!

  //பிடிக்காதது : நண்பர்களின் பெயர்களைக் கூட சமயத்தில் மறந்து விட்டு குழம்புவது.//
  அய்யோ என்ன இது??…. 😮

  //மன்னிப்பை தயங்காமல் கேட்டும், தயங்காமல் கொடுத்தும் வாழுங்கள் வாழ்க்கை அர்த்தப்படும்//
  அதாவது மனப்பலகையைச் சுத்தமாக அழித்து வைத்தால்
  மன்னிக்கும் தூய்மையான குணம் உருவாகிவிடும்!

  உங்கள் அறிமுகத்துக்கு,
  விஜய் கோபால் சாமிக்கும் உங்களுக்கும் நன்றி!

  Like

 3. Dear Xavier Anna,
  After very long time. I get only a little time to check my mails these days. Whenever I get time I use only 3 websites.
  1.Gmail
  2.Facebook
  3.Xavi.wordpress
  Couldnt write to you for a long time. But I remember u always. My brother’s book is pending because he has written the war devastations but war is officially over. So, considering about modifying it.

  Will let u know.
  God bless you. And answers for 32 were very stunning.
  Take care.

  Like

 4. அன்பின் அம்ஜத். நன்றி. உங்கள் சகோதரரின் நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙂

  Like

 5. இந்த ஈயடிச்சான் காப்பிப் பதிவு என்னோடு செத்துப் போய்விடுமோ என்று பெரிதும் பயந்தேன், நல்ல வேளையாக சேவியர் அண்ணன் அதைக் காப்பாற்றி விட்டார், புகாரியும் காப்பாற்றுவாராக…

  //மன்னிப்பை தயங்காமல் கேட்டும், தயங்காமல் கொடுத்தும் வாழுங்கள் வாழ்க்கை அர்த்தப்படும்//

  வாழ்க்கை குறித்த உங்கள் வரையறையுடன் எனதும் பொருந்துகிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கொலை வெறிக் கவிதைகளில் இரண்டு முறை வம்பிழுத்தும், இருமுறையும் பாராட்டிவிட்டுப் போனவர் நம்ம அண்ணன். இவ்வளவு பெரிய மனிதர் என் அழைப்பை மதித்து எழுதியமை குறித்துப் பணிவாகச் சொல்ல வேண்டுமானால், மிகப் பெரிய கௌரவம் இது; கொஞ்சம் திமிராகச் சொல்ல வேண்டுமானால், கர்வமாக இருக்கிறது.

  //பார்ப்பது, சன்னல் வழியே சாலையில் நடக்கும் இருளை.
  கேட்பது, லவ் பேர்ட்ஸ் இசைக்கும் புரியாக் கவிதை.//

  இந்த இரு வரிகளில் நிறைவேறிவிட்டது என் அழைப்பின் நோக்கம்.

  நன்றி அண்ணை!!!

  Like

 6. (முதல் படம்)

  காலுக்கருகில் கிடக்கும் காகிதக் கோப்பை நீங்கள் குடித்ததா? ஆம் எனில் என்ன குடித்தீர்கள்? :))))

  இது மேல உள்ள 32ல வராத புது சிலபஸ்.

  Like

 7. //கொலை வெறிக் கவிதைகளில் இரண்டு முறை வம்பிழுத்தும், இருமுறையும் பாராட்டிவிட்டுப் போனவர் நம்ம அண்ணன். இவ்வளவு பெரிய மனிதர் என் அழைப்பை மதித்து எழுதியமை குறித்துப் பணிவாகச் சொல்ல வேண்டுமானால், மிகப் பெரிய கௌரவம் இது; கொஞ்சம் திமிராகச் சொல்ல வேண்டுமானால், கர்வமாக இருக்கிறது.//

  என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே ??? 😉 😀

  //இந்த இரு வரிகளில் நிறைவேறிவிட்டது என் அழைப்பின் நோக்கம்//

  நன்றி தம்பி 🙂

  Like

 8. /லுக்கருகில் கிடக்கும் காகிதக் கோப்பை நீங்கள் குடித்ததா? ஆம் எனில் என்ன குடித்தீர்கள்? )))

  இது மேல உள்ள 32ல வராத புது சிலபஸ்.
  //

  இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை 🙂 யாரோ குடிச்ச டீ கப்புக்கு பிளாக் வைத்து விளக்கம் எழுத வேண்டியிருக்கிறது 🙂

  Like

 9. அண்ணா, எல்லாப் பதில்களும் நன்றாக இருக்கிறது.
  அமா அண்ணி ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க? 🙂

  Like

 10. சில கேள்விகள் மாற்றம் செய்யப்பட்டு அண்ணனின் கலக்கலான பதில்களோடு கேள்வி பதில் சூப்பர் 🙂

  Like

 11. //சில கேள்விகள் மாற்றம் செய்யப்பட்டு அண்ணனின் கலக்கலான பதில்களோடு கேள்வி பதில் சூப்பர் //

  மாத்துனதும், மாட்டி வுட்டதும் உங்க சித்தப்புதேன்… 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s