கவிதை : மோகம் மிச்சமில்லை

 

5

மோகத்தின்
பானம் ஊற்றிய கோப்பைகளில்
காதல் உவமைகள்
தெறிக்கின்றன.

வாத்சாயன விழிகளோடும்
கம்பன் விரல்களோடும்
காகிதக் குடுவைகளில்
தயாராகின்றன
காதல் கவிதைகள்.

தூரமாய் போன
நிலவை
எட்டித் தொட
கவிதை வாலில்
தீ கட்டி நீட்டுகின்றனர்
சிலர்,

தீ நாக்குகளின்
வெப்பத்தில்
மூச்சு முட்டும்
மோகத் திணிப்புகளில்
கவிதையை
வழிய விடுகின்றனர் சிலர்,

அசைந்து நடக்கும்
அழகையும்,
பார்வைக்குத் தெரியும்
பாதங்களையும்
கவிதைச் சமையலறை
மிகச் சுவையாய் சமைக்கிறது.

காமத்திற்கு
ஆயிரம் கோடி விரல்கள்
அதனால் தான்
கவிதைகள் பல
அங்க வருணிப்புகளோடு
அடங்கி விடுகின்றன.

மோகம் வடிந்த
பிற்காலப் பொழுதுகளில்
பெய்யக் கூடும்
சில
ரம்மியக் காதல் மழைகள்.

 

தமிழிஷில் வாக்களிக்க விரும்பினால்….

15 comments on “கவிதை : மோகம் மிச்சமில்லை

  1. ஹேமா.. நலமா … 🙂 மன்னியுங்கள் நான் வராமைக்குக் காரணம் நேரமின்மையன்றி வேறொன்றுமமில்லை. இதோ வருகிறேன் 🙂

    Like

  2. Mookam Enpathoo Udalillalla,Mukathin Moolijilum, Uthaddin Sulippilum Viljin,Nookkudaip Paarvai Nérinil Kaana, Thudith Thidum Mevanoo,Avanee Kaathalin Valaiyai, Kavilppavan Evanoo Avanee,Poothaiyai Murththu Perum,Peethaiyai Kurithu Than,Kanvinai Patridum Perum,Vaalvinai Patridum Vasantham,Kandidum Veelai Kaanpathéé,Mookam Tirnthaal Michchamillai.”MOOKAM MICCHAM MILLAI” -K.SIVA-(Fr)

    Like

  3. //சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!//

    // ஆப்பு, நீங்க தனி ஆளா இல்லா குரூப்பாஆஆ //

    அது ஆப்பு இல்ல, ஆத்தா வேப்பல அடிச்சாதான் சரிப்பட்டு வரும்…

    மத்தபடி, சூப்பர் சேவியர்.

    ஹி ஹி …கவிதையும்தான்

    Like

  4. “நிலவுமகள் முகம் துடைத்துச் சென்றாள்
    அந்த மேகமங்கை”
    எம் சிந்தனையை வருடிச் சென்றது
    உங்கள் கவிதைநயம்!

    Like

  5. வணக்கம் அண்ணா.கன நாளுக்குப் பிறகு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.சுகம்தானே !கிட்டத்தட்ட 1 1/2 மாதங்களாக பதிவுகள் – கணணியுலகத்தைத் தவிர்த்திருந்தேன்.நீங்களும் தேடவேயில்லையே.சரி…சரி.

    எப்பவும்போல கவிதை அருமை அண்ணா.இடையிடையாவது என் பக்கம் வந்து ஊக்கம் தந்து போகலாமே !!! ஆவலாயிருக்கிறேன்.

    Like

  6. .

    காமத்திற்கு
    ஆயிரம் கோடி விரல்கள்
    அதனால் தான்
    கவிதைகள் பல
    அங்க வருணிப்புகளோடு
    அடங்கி விடுகின்றன.

    ammanla
    amamam
    amamthaan
    amam

    amamsami

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.