கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…

illiyana-042909-21வுனம்
எனக்குப் பிடிக்கும்.

நகரத்து நெரிசல்களில்
நசுங்கி
மொட்டை மாடியில்
இளைப்பாறும் மாலை நேரத்தில்
இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும்.

வண்ணத்துப் பூச்சி
பூவின் வாசல்திறக்கும்
அழகை
விழிகள் விரியப் பார்க்கும் போதும

மாவிலையின்
முதுகெலும்பில்
நழுவிவரும் மழைத்துளி
மண்ணின் மார்பை முத்தமிடப்போகும்
சில்லென்ற நிமிடங்களிலும

சொட்டுச் சொட்டாய்
வடிந்து கொண்டிருக்கும்
மாலை மஞ்சளின் மரண நிமிடங்களை
மலையுச்சியின் மரத்தடியில்
மனம் கலைய இரசிக்கும் போதும

இனங்காண இயலாத பறவையொன்று
சிறகடித்துப்
பாடிச் சென்றது எந்த ராகம் என்று
சிந்தனையைக் கொஞ்சம்
சிறகடிக்க விடும்போதும

இதயம் முழுவதும்
இன்ப அதிர்வுகளை விட்டுச் செல்லும்
இந்த மௌனம்
எனக்குப் பிடிக்கும

சத்தம்
எனக்குப் பிடிக்கும

விழுவதனால் வேகம் சேர்க்கும்
மலையருவி
அடிப்பதனால் அழகு விற்கும்
கடல் அலைகள்
இயற்கை மேல் ஈரம் துவட்டும்
மழைக் கரங்கள

மௌனத்துக்குத் தூண்டில் போடும்
சத்தங்களும
மௌனங்களுக்குள் மறைந்து கிடக்கும்
சத்தங்களும
கொலுசு மாட்டிய நதிபோல
சங்கீதமாய் எப்போதுமே மனசைக் கொத்தும

இத்தனை இருந்தும

மொத்த ரசனைகளையும்
யுத்தமில்லாமல் சிதைத்துச் செல்லும்,
கண்மூடி
கவிதை யோசிக்கும் கணங்களில்
கன்னத்தில் நீ இடும்
சத்தமில்லாத ஒரு முத்தம்…

 

கவிதை பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

14 comments on “கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…

 1. நான் நலமாய் இருக்கேன் சேவியர்… நீங்கள் நலம் தானே?
  என்றும் போல் அழகுநயம் உங்கள் கவிதையில்!…. (y) 🙂

  “கதிரவன்”,
  “கடல்கன்னி”யின் மடிதனில்
  துயில்கொள்வதைப் பொறுக்கமுடியாத “வான்”கடல்,
  சினம் கொண்டு தவிக்க,…
  “மேக” அலை சீற்றமாய் மோதிச் செல்ல,
  அந்தி வானத்தின் மரண ஓலத்தில்,
  தனியாய்ப் பறந்ததிந்தச் சிட்டு,
  தன் இல்லம் நோக்கி விரைவாய்! :d

  Like

 2. சத்தமும்,மௌனமும்,நீயும் என்று அவளை இடையில் செருகியிருக்கிறீர்கள்.

  ஐ மீன், சத்தத்துக்கும்,மௌனத்துக்கும் இடைப்பட்டவள் என்று சொல்கிறீர்கள்.

  அப்படியானால் அவள் மெல்லிய இசை-அப்படித்தானே?

  http://kgjawarlal.wordpress.com

  Like

 3. அருமை..
  //கவிதை யோசிக்கும் கனங்களில்
  கன்னத்தில் நீ இடும்
  சத்தமில்லாத ஒரு முத்தம்…

  சத்தமில்லாம முத்தம் புதியகற்பனை.. நால்லாயிருக்கு..

  Like

 4. Dear Xavier Anna,

  Sooooooper machi……

  Nice poem…. I felt like getting wet in a slow rain…..

  In the last segment “கவிதை யோசிக்கும் கனங்களில்” …

  Is it கனங்களில் or கணங்களில்….

  I am not finding fault…just to clarify Anna…

  Take care…

  Like

 5. super anna en kavita sirakadikum pattam puchiku karunai kattinal
  annal nan aval mitu vaiturukum kadaluku karunai kattala

  Like

 6. /In the last segment “கவிதை யோசிக்கும் கனங்களில்” …

  Is it கனங்களில் or கணங்களில்….
  //

  மிக்க நன்றி தம்பி. பிழை தான்.. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.