கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.

jericho_walls_wide_view

மோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.

யோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.

இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.

யோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்டும். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.

‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் ? எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் ? நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன ? மக்கள் எப்படிப்பட்டவர்கள் ? என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

மதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.

‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’

‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.

‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.

‘அப்படியா ? அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.

உளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.

வந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.

‘நீங்கள் யார் ? உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.

‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.

இதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.

‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ?’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.

‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா ? அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.

‘அவர்கள் இப்போது எங்கே ?’

‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.

‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.

‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’

‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் ?’

‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’

‘இஸ்ரயேலரின் உளவாளிகளா ? எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ?’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’

‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா ?’ ராகாப் கேட்டாள்.

‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.

‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவியிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’

‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.

‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.

‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.

‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.

‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’

‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.

அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.

‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.

‘கவலைப்படாதே.. எங்களைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.

தப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.

‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ?’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.

‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.

‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே ? இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.

‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.

‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.

கடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.

என்ன ஆச்சரியம் ! யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.

மக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந்திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.

அவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன ? என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.

எரிகோவை எப்படிப் பிடிப்பது ? என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.

யோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.

‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ?’ யோசுவா பணிவுடன் கேட்டார்.

‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.

‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.

யுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.

ஏழாவது நாள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.

‘ஆர்ப்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.

இதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ! ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.

எரிகோ, இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாயிற்று.

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்.

19 comments on “கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.

  1. ராகாப் இஸ்ரவேலில் ஒரு பிரபுவை திருமணம் செய்து கொண்டாரா

    Like

  2. அருமை மிகவும் அருமை ,உங்களுடைய விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது .நன்றி

    Like

  3. கடவுள் ஒரு இனத்திற்கு மட்டும் ஆதரவாக இருந்து மற்றவர்களை அழித்தார் என்பது கடவுளின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குறியாக்கவில்லையா?

    Like

  4. ‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

    jerico vai pattri nandraga therinthu kotten. thank you.

    //

    நன்றி அருள் செல்வி

    Like

  5. ‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

    jerico vai pattri nandraga therinthu kotten. thank you.

    Like

  6. //‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

    மிக்க நன்றி
    //

    நன்றி கோபால் !

    Like

  7. ‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

    மிக்க நன்றி

    Like

  8. //எரிகோ (city of the moon) = நிலவுநகரின்,
    வெற்றிக்குக் காரணமாயிருந்த,
    ராகாப் (விசாலம்) ,…
    வெற்றியீட்டிய,
    யோசுவா (மீட்பின் இறைவன்),…
    இவர்களின் வரலாற்று நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி சேவியர்!
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    *** Jericho is the oldest city in the world. The ruins of the oldest civilization discovered in Jericho are 10,000 years old. ***
    //

    அருமை. மிக்க நன்றி ஷாமா 🙂

    Like

  9. //இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.//

    கடவுளே ஒரு ரேஸிஸ்டா, அடகொன்னியா!!!

    Like

  10. எரிகோ வீழ்ந்த வரலாறு… இனப்படுகொலை, இனவழிப்பு யுத்தம், காட்டிக் கொடுக்கும் துரோகத்தனம் எல்லாம் பைபிள் காலத்திலும் இருந்திருக்கின்றன. எரிகோ வீழ்ந்த வரலாறு… ஆண்டவரின் பெயரால் ஒரு இனவழிப்பு யுத்தம்

    Like

  11. எரிகோ (city of the moon) = நிலவுநகரின்,
    வெற்றிக்குக் காரணமாயிருந்த,
    ராகாப் (விசாலம்) ,…
    வெற்றியீட்டிய,
    யோசுவா (மீட்பின் இறைவன்),…
    இவர்களின் வரலாற்று நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி சேவியர்!
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    *** Jericho is the oldest city in the world. The ruins of the oldest civilization discovered in Jericho are 10,000 years old. ***

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.