கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.

amritarao

 

 

 

 

 

பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி ?

 

 

0

 ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்.

0

8_001

 

 

 

 

உன்
இயல்போடே காதலிக்கப்
பிடித்திருக்கிறது எனக்கு,
என்
இயல்பே
பிடிப்பதில்லை உனக்கு.

 

 

 

 
0

உன்னால்
தினம் தினம்
நிராகரிக்கப்பட்டும்
கடல் நீர் அள்ளிக் கண்ணீர் துடைக்கும்
பேதையாய்
உப்புக் கன்னங்களோடே
உலவுகின்றேன்.
0

aaaDSC_01428-_28_

 

 

 

 

 கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்

 

 

0

 

எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?

0

DSC_0324

 

 

 

 

உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.

 

 
0

 

நீ
பேசியதை விட
பேசுவாய் என்று
நினைத்தது தான் அதிகம்,
மிக மிக அதிகம்.
தொடாமலேயே
சிணுங்கும்
ஓர் தொட்டாச்சிணுங்கித்
தோட்டம் தானே நீ.
0

DSC_0028

 

 

 

 

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?

0

 உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.

 

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

42 comments on “கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.

 1. //– கிழித்தெறிவாய்
  என்று தெரிந்தும்
  தொடர்கின்றன என்
  மனுத் தாக்கல்கள்,
  உன்
  விரல் தொடும் ஆசையில் –//

  Lovely…

 2. //எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு //
  ஆஹா!சூப்பர் வரிகள்!
  கமலா

 3. உன்
  வரைபடம் பார்த்துப் பார்த்தே
  வயதாகிறது எனக்கு,
  இன்னும்
  நீ
  பயணிக்கும் பாதை
  புரியவே இல்லை.

  super lines

 4. உன்
  வரைபடம் பார்த்துப் பார்த்தே
  வயதாகிறது எனக்கு,
  இன்னும்
  நீ
  பயணிக்கும் பாதை
  புரியவே இல்லை.

  super lines

 5. பிரியமே,
  நீ
  சங்கீதம் கற்கிறாயாமே !
  குயிலுக்கு எதுக்கடி
  புல்லாங்குழல் பயிற்சி

  ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ்

  இருட்டுக்குள்
  ஒளிர்கிறீர்கள்
  நீயும்,
  உன் கை மெழுகுவர்த்தியும்.
  ஒரே ஒரு சந்தேகம்
  யாருக்கு
  யார் ஒளி தந்தது ?

  0

  ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்

 6. கிழித்தெறிவாய்
  என்று தெரிந்தும்
  தொடர்கின்றன என்
  மனுத் தாக்கல்கள்,
  உன்
  விரல் தொடும் ஆசையில்

  அருமை. ரசித்த வரிகள்

 7. //எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு ?//

  இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
  ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!

 8. கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…

  சமீபத்திய கொலைவெறி

 9. //எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு //
  ஆஹா!சூப்பர் வரிகள்!
  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

 10. ////எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு //
  ஆஹா!சூப்பர் வரிகள்!
  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//

  நன்றி சாய் கணேஷ்🙂

 11. //கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…

  //

  இப்படிச் சொல்லிச் சொல்லி சூப்பர் கவிதைகளை எழுதும் உங்களை மனமார பாராட்டுகிறேன்🙂
  இதுக்காகவே நாம அடிக்கடி எழுதணும்போலிருக்கேப்பா…

 12. ////எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு ?//

  இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
  ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
  //

  மிக்க நன்றி ஷாமா🙂

 13. //கிழித்தெறிவாய்
  என்று தெரிந்தும்
  தொடர்கின்றன என்
  மனுத் தாக்கல்கள்,
  உன்
  விரல் தொடும் ஆசையில்

  அருமை. ரசித்த வரிகள்
  //

  நன்றி சையத்🙂

 14. //உன்
  வரைபடம் பார்த்துப் பார்த்தே
  வயதாகிறது எனக்கு,
  இன்னும்
  நீ
  பயணிக்கும் பாதை
  புரியவே இல்லை.

  super lines
  //

  மிக்க நன்றி வன்னியா🙂

 15. ////எதையாவது
  இழுத்துக் கொள்ளும்
  வரை தானே வெற்றிடம் ?,
  உன்னை
  இழுத்துக் கொண்டபின்
  இதயம் எப்படி
  வெற்றிடமானது எனக்கு //
  ஆஹா!சூப்பர் வரிகள்!
  கமலா//

  மிக்க நன்றிங்க🙂

 16. ////– கிழித்தெறிவாய்
  என்று தெரிந்தும்
  தொடர்கின்றன என்
  மனுத் தாக்கல்கள்,
  உன்
  விரல் தொடும் ஆசையில் –//

  Lovely…
  //

  நன்றி மாதரசன்🙂

 17. “ஒரு
  நாட்டிய மேடையின்
  அத்தனை கொலுசுகளும்
  சட்டென்று
  மௌனமாயின,
  என் மனசுக்குள்
  நீ
  சிரிக்கத் துவங்கிய வினாடியில்”

  is something that I enjoyed a lot…

  Its absolutely heavenly…

  Thanks Anna….

 18. //உன்னை
  எழுதுவதால் மட்டுமே
  பிழையான என்
  கவிதைகளும்
  பிழைக்கின்றன.

  ///

  அழகு
  //

  நன்றி பிரபு🙂

 19. //“ஒரு
  நாட்டிய மேடையின்
  அத்தனை கொலுசுகளும்
  சட்டென்று
  மௌனமாயின,
  என் மனசுக்குள்
  நீ
  சிரிக்கத் துவங்கிய வினாடியில்”

  is something that I enjoyed a lot…

  Its absolutely heavenly…

  Thanks Anna….
  //

  மிக்க நன்றி தம்பி🙂

 20. இருட்டுக்குள்
  ஒளிர்கிறீர்கள்
  நீயும்,
  உன் கை மெழுகுவர்த்தியும்.
  ஒரே ஒரு சந்தேகம்
  யாருக்கு
  யார் ஒளி தந்தது ?

  அழகு

 21. //கிழித்தெறிவாய்
  என்று தெரிந்தும்
  தொடர்கின்றன என்
  மனுத் தாக்கல்கள்,
  உன்
  விரல் தொடும் ஆசையில்//

  கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…

 22. //இருட்டுக்குள்
  ஒளிர்கிறீர்கள்
  நீயும்,
  உன் கை மெழுகுவர்த்தியும்.
  ஒரே ஒரு சந்தேகம்
  யாருக்கு
  யார் ஒளி தந்தது ?

  அழகு
  //

  மீண்டும் நன்றிகள் யாழ்🙂

 23. உன்னை
  எழுதுவதால் மட்டுமே
  பிழையான என்
  கவிதைகளும்
  பிழைக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s