கவிதை : உன் பார்வை, காதலின் கருவறை

உன்னுடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.

0

 

a-_49_என் வீட்டு
மீன் குஞ்சுகளுக்குக் கூட
இப்போதெல்லாம்
புன்னகைக்காமல்
தீனி தர இயல்வதில்லை.
நீ என்னை
நெஞ்சில் கொண்ட பின்.

 

0

உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

0

 

2மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.

 

 

 

 

 

 

நாண்களை
நான்
இறுக்கமாய் பின்னியிருக்கிறேன்.
நீ
ஒவ்வோர் முறை
மோதும் போதும்
இசையைத் தான்
என்னுள்
இறக்கி வைக்கிறாய்.

0

துளைகள் இல்லா
eyeபுல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்

 

0

எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்

0

vidisha-_9_மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.

 

 

 

 

 

 

0

அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?

0

madhu-_7_காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை

 

 

 

 

 

 

0

உன்
ஒவ்வோர் பார்வையும்
சாவியில்லா பூட்டொன்றை
எனக்குள்
பூட்டி நகர்கிறது.
எப்போது தான்
பூட்டு தயாரிப்பதை நிறுத்தி
சாவி தயாரிக்க சம்மதிப்பாயோ ?

0

பிடித்திருந்தால்  தமிழிஷில் வாக்களியுங்கள்

54 comments on “கவிதை : உன் பார்வை, காதலின் கருவறை

 1. தயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…

 2. அண்ணா அசத்துறிங்க போங்க…

  படங்கள் ரொம்ப அம்சமா இருக்கு…

 3. துளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது
  பூட்டும் சாவியுமாய் அசத்துகிறது
  புகைப்படங்களும் கவிதைகளும்

 4. படங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.

 5. “என் வீட்டு
  மீன் குஞ்சுகளுக்குக் கூட
  இப்போதெல்லாம்
  புன்னகைக்காமல்
  தீனி தர இயல்வதில்லை.
  நீ என்னை
  நெஞ்சில் கொண்ட பின்”

  A new kind of approach….

  Loving someone is a beautiful feeling…

  Anna….Was ur one a love marriage ???….

 6. //உன்
  ஒவ்வோர் பார்வையும்
  சாவியில்லா பூட்டொன்றை
  எனக்குள்
  பூட்டி நகர்கிறது…..//

  உயிர் தந்து
  உயிர் எடுக்கும்
  காதல் கவிதைகள்!…
  அருமை…!! அற்புதம்…!!!

 7. //காதலுக்கு கண்ணில்லை
  என்பதெல்லாம் பொய்,
  உன்
  கண்ணுக்குள் தான்
  காதலில்லை//

  வாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்!

 8. உங்கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.
  பாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை

 9. //காதலுக்கு கண்ணில்லை
  என்பதெல்லாம் பொய்,
  உன்
  கண்ணுக்குள் தான்
  காதலில்லை//

  வைர வரிகள்!

  http://kgjawarlal.wordpress.com

 10. //உங்கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.
  பாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை//

  நன்றி நண்பரே🙂

 11. ////காதலுக்கு கண்ணில்லை
  என்பதெல்லாம் பொய்,
  உன்
  கண்ணுக்குள் தான்
  காதலில்லை//

  வாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்!

  //

  நன்றி யாழினி🙂

 12. ////உன்
  ஒவ்வோர் பார்வையும்
  சாவியில்லா பூட்டொன்றை
  எனக்குள்
  பூட்டி நகர்கிறது…..//

  உயிர் தந்து
  உயிர் எடுக்கும்
  காதல் கவிதைகள்!…
  அருமை…!! அற்புதம்…!!!
  //

  நன்றி ஷாமா..🙂 உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன ?

 13. //“என் வீட்டு
  மீன் குஞ்சுகளுக்குக் கூட
  இப்போதெல்லாம்
  புன்னகைக்காமல்
  தீனி தர இயல்வதில்லை.
  நீ என்னை
  நெஞ்சில் கொண்ட பின்”

  A new kind of approach….

  Loving someone is a beautiful feeling…

  Anna….Was ur one a love marriage ???….
  //

  நன்றி தம்பி. திருமணம் காதல் திருமணமல்ல..😀

 14. //படங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.//

  நன்றி ஹேமா🙂

 15. //துளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது
  பூட்டும் சாவியுமாய் அசத்துகிறது
  புகைப்படங்களும் கவிதைகளும்//

  நன்றி சிவா🙂

 16. //தயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…

  //

  நல்லது😀

 17. எல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…

 18. /எல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…//
  😀 அனுமதியோட எடுத்தா அதுக்குப் பேரு “சுடுதல்” இல்லையே😀 மகிழ்ச்சி🙂

 19. Knnin Yaadijilit Kaninthu, Velum Moolijinit Péci, Minung Kanavukal Thoonra, Vidivin Paathaiyai Niiddi, Soolum Vaarthaijin Vilimpil, Soorkkang Kandavar Poonru, Suddum Masavinil Thiipam,Sudarvid Detivathu Poonréé, Thoodanthu Ninaivinai Miiddi, Kulirvinaik Koodupathey Kaathal. “” KAATHAL””++K.SIVA++(Fr)

 20. ஐய்யோ… ஃப்ரான்ஸ் சிவா… மறுபடியுமா… சரி இந்த முறையும் உங்க கவிதையை மொழி பெயர்க்கிறேன். இது ரெண்டாவது முறை. ஒரு முறைக்கு ஐந்து ஃப்ராங்க் வீதம் பத்து ஃப்ராங்க் என் அக்கவுண்ட்டுக்கு மாத்திவிடுங்களேன். புண்ணியமாப் போகும்…

  ஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.

  ஸ்சப்பாஆஆஆ… முடியலடா சாமி…

 21. //ஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.

  //
  அட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா ?

 22. //காதலுக்கு கண்ணில்லை
  என்பதெல்லாம் பொய்,
  உன்
  கண்ணுக்குள் தான்
  காதலில்லை

  sweet
  //

  நன்றி யாழ்….

 23. //அட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா //

  என்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C

 24. Enthali Avrkaijil Irukkaijiléé, EppadiYaan Piramuthuku Kaadduvééin, Anpudanéé EnnUravu AAkiyathaail, Nanrukavi Avruku Ninruthuthipaadum, Enpathanaail “” VIJAGOPAL SWAMI “” EnNarumai Uravenraal ééthirth Thuuviduvaa Raa? Yaanoruvan Thaniyaana AnnNan (Anna-Thampi)ThampiYattravn, AAthalinaal Utimaiyaaka Thampiyaakik, Ninrumanam Kulirkinréén, Thampiniir NiiduPallaandu Enrumanam, Ninru Pukal PaaduthThmpi. AAthalinaal Kuraijiruppin Maniththiduviiraka, Anpudané OliPéyappin OOsaiEnrum, NinruPukal Enmanthil IsaiyaakaOlikKum, Anpudanéé ThngkalPééyar EEnruMénManathi Olikkum, Nariyudun ThangkalLANPU Naadinirkkum, ++Iv Vann Nam:-K.SIVA ++ (Fr)

 25. ஏந்திழை அவர்கையில் இருக்கையிலே, எப்படி நான் புறமுதுகு காட்டுவேன்… அன்புடனே என்னுறவு ஆகயத்தில், நன்று கவி அவருக்கு நின்று துதி பாடும் என்பதனால், விஜய்கோபால்சாமி, என்னருமை உறவென்றால் எதிர்த்திடுவாரா? யான் ஒருவன் தனியனா? அண்ணன் தம்பி அற்றவன, ஆதலினால் உரிமையாகத் தம்பியாகி நின்று மனம் குளிர்கின்றேன். தம்பி நீர் நீடு பல்லாண்டு என்றும், நின்று புகழ்பாடு தம்பி. ஆதலினால் குறை இருப்பின் மன்னித்திடுவீராக, அன்புடனே ஒலி பெயர்ப்பின் ஓசையென்றும், நின்று புகழ் என் மனதில் இசையாக ஒலிக்கும், அன்புடனே தங்கள் பெயர் என்றும் என் மனதில் ஒலிக்கும், நன்றியுடன் தங்களன்பு நாட்டினிற்கும். — கே. சிவா (ஃப்ரான்ஸ்)

  அன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன்.🙂 அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி

 26. /அன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன். அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி

  //

  இந்த பெயர்ப்பு டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன். தலை சுத்துது ….
  சிவா…. வாசி வாசி.. ன்னு சொல்ல வைக்கிறாரு… ( நன்றி டூயட்🙂

 27. /என்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C//

  உங்களைப் பற்றி இனிமே நான் சொல்லித் தான் தெரியணுமா என்ன ?🙂

 28. மலரும் போதும்
  உதிரும் போதும்
  சத்தம் போடுவதில்லை
  ரோஜாப் பூக்கள்,
  நம்
  காதலைப் போல.
  all the kavitahi r so nice speciaaly this one very nice keep going

 29. //மலரும் போதும்
  உதிரும் போதும்
  சத்தம் போடுவதில்லை
  ரோஜாப் பூக்கள்,
  நம்
  காதலைப் போல.
  all the kavitahi r so nice speciaaly this one very nice keep going/

  நன்றி அருள் ஜோதி…🙂

 30. AnpuDanéé AlakuThaTum ThamiLil,EnNarumi Thampi Ya(A)thu, Vannak KaniThamilai SuvaikKa, SiRu Néé Ram PooThaaThu(U) Thaa(AA)Thu-AaKai Jinaal,SatRu MaranThu ThuJil KoolVathu Pool, EéNai MaRanthu ThuJil- AaNathuPool,IrunThu Pin IKkaviThai UuDaaka,EénUlLathThil UrainThidDa, AnpuThaRum ThampiyaTaam Vijaya gopal swami AvarKaLUdan PanPudaNéé, EénaithThngaLudan InaiTh Thidda ThamPién Sevayar AvarKadKum InpuDanéé, InRuMuthal ThooDarnThu Kavi, YaaTh ThiduVéén éN NanRi YUdan.++ INRUMUTHAL YAATHTHIDU VééN ++ -K.SIVA (Fr)-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s