விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.
உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.
உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.
உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.
என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.
நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.
அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.
superappu!!!!!!!!!!!!
nice touching touching poem
LikeLike
காதலும் நரைப்பதுண்டா?… கடந்து செல்லும் புன்னகையில் உயிர் அற்றுப் போவதுண்டா?
மாற்றங்கள் இயல்பு எனினும், காதலுக்கு இயல்பு மாற்றம் இல்லாதிருப்பதே!
அழகிய கவிதை, முகாரி பாடி நின்றது!
LikeLike
தரையில் விமானம் இறங்குகிறது போலும்!
மின்னலடித்த காலத்தை விட சலனமில்லாத காலம் நிலையானது! நம்பிக்கைக்குறியது!
அனுபவங்களுடன்
கமலா
LikeLike
அண்ணா உங்கள் கவிதைகளுக்கு என்ன சொல்லி நான் பின்னூட்டம் தர!எப்பவும் பார்த்து மட்டும் போகிறேன்.
LikeLike
kavithai super. keep it up
LikeLike
/kavithai super. keep it up//
நன்றி குமார் 🙂
LikeLike
//அண்ணா உங்கள் கவிதைகளுக்கு என்ன சொல்லி நான் பின்னூட்டம் தர!எப்பவும் பார்த்து மட்டும் போகிறேன்.
//
நன்றி சகோதரி….. உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி எப்போதுமே 🙂
LikeLike
//மின்னலடித்த காலத்தை விட சலனமில்லாத காலம் நிலையானது! நம்பிக்கைக்குறியது!
//
அதிலென்ன சந்தேகம் 🙂
LikeLike
//காதலும் நரைப்பதுண்டா?… கடந்து செல்லும் புன்னகையில் உயிர் அற்றுப் போவதுண்டா?
மாற்றங்கள் இயல்பு எனினும், காதலுக்கு இயல்பு மாற்றம் இல்லாதிருப்பதே!
அழகிய கவிதை, முகாரி பாடி நின்றது!
//
நரையும் அழகு என்பது புரியும் வரை முகாரி ராகம் தவிர்க்க முடியாததே 😀
LikeLike
/superappu!!!!!!!!!!!!
nice touching touching poem
//
நன்றி நண்பரே 🙂
LikeLike
Awesome sir,
this poem applicable for both genders ….
LikeLike
Exprience would become Poem?
LikeLike
//Exprience would become Poem?//
பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது எதிலிருந்தும் எழலாம் ஒரு கவிதை 😀
LikeLike
//Awesome sir,
this poem applicable for both genders ….//
நன்றி முரளி 🙂
LikeLike