கவிதை : உன்னை மட்டுமே பிடிக்கும் !

Meera_Jasmine__52_

 

 

 

மழையில் நனைந்தால்
ஜலதோஷம் பிடிக்குமாம்
எனக்கென்னவோ
மழையில் நனைந்தாலும்
உன்னை
மட்டுமே பிடிக்கிறது
.

o

பெண்ணே…
எத்தனை முறை துவைத்தாலும்
இன்னும்
அழுக்காகி அலைகிறது
மழை மேகக் கூட்டம்,
என்
மனசை அழுக்காக்கி நகரும்
உன் அழகைப் போல.

0

எனக்கு
உன்னைப் பிடிக்கும்,
உனக்குப் பிடிக்குமா
கவிதை ?

0

DSC_0323

 

உன்னைப் பற்றி
எத்தனை கவிதை எழுதினாலும்
அவை
அழகாய் தோன்றுவதில்லை எனக்கு.
என் நண்பர்களோ
அக் கவிதைகளை
பலமாய்
பாராட்டுகிறார்கள்.
!,
அவர்கள் என்னை
நேசிக்கிறார்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன்.

0

காற்றுடன் நடத்தும்
கத்திச் சண்டையாய்,
நிழலுடன் நடத்தும்
குத்துச் சண்டையாய்
கடல் நீரில்
தோண்டும் சுரங்கமாய்
தொடர்கிறது,
உன்னை நோக்கிய என் காதல்
விண்ணப்பங்கள்.

0

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

Advertisements

27 comments on “கவிதை : உன்னை மட்டுமே பிடிக்கும் !

 1. //மழையில் நனைந்தால்
  ஜலதோஷம் பிடிக்குமாம்
  எனக்கென்னவோ
  மழையில் நனைந்தாலும்
  உன்னை
  மட்டுமே பிடிக்கிறது.//
  அது தானே (?)…. மழையில் நனைந்தாலும் ஏன் உன்னை மட்டும் பிடிக்கிறது????
  மழையால் உடல் சிலிர்க்கும்… உங்கள் கவிதையால் மனம் சிலிர்க்கிறது…

  //எனக்கு
  உன்னைப் பிடிக்கும்,
  உனக்குப் பிடிக்குமா
  கவிதை ?//
  இந்தக் கவிதையை படிக்கும் போது எனக்கு ,

  பிடிக்கும் உனை பிடிக்கும்
  அழகா உனைப் பிடிக்கும்
  “ஆகாய வெண்ணிலா”வைப் பிடிக்கும்
  என்ற பாடல், நினைவில் முட்டி மோதிச் சென்றது!
  மனதைத் தொட்டுவிடும் அழகிய உங்கள் கவிதைகள் அற்புதம் சேவியர்!

  Like

 2. //மழையில் நனைந்தால்
  ஜலதோஷம் பிடிக்குமாம்
  எனக்கென்னவோ
  மழையில் நனைந்தாலும்
  உன்னை
  மட்டுமே பிடிக்கிறது.//

  அண்ணா படங்கள் அழகு அதைவிட உங்கள் கவிதைக்குள் புகுத்தும் உவமைகள் அழகு.அதனால் எனக்கும் பிடிச்சிருக்கு
  உங்க கவிதைகள்.

  Like

 3. Vaarthaigalai vallaigal pinni, padipavarai kavargirirgal anna…

  ‘காற்றுடன் நடத்தும் கத்திச் சண்டை, நிழலுடன் நடத்தும்
  குத்துச் சண்டை, கடல் நீரில் தோண்டும் சுரங்கம்.

  Arumaiyana karpanai. Kaathalipavargalukku anaithume saathiyam.

  Like

 4. எத்தனை காலத்துக்குத்தான் காதல் கத்தரிக்காய் என்று பேசிக்கொண்ட இருக்கப்போகிறீர்கள்? இன்றைய சமூகப்பிரச்சனை இதுதானா? சரி காதல் காதல் என்று அலைந்து பக்கம் பக்கமாய் எழுதி கல்யாணம் கட்டியபின் அடியும் உதையுமாக வாழ்க்கை நடத்தும் காதல் குடும்பங்களை என்ன சொல்ல? காதல் காதல் என்று படம் படமாய் எடுத்து காதலும் வாழ்ததில்லை இந்தியத் தமிழனும் சிந்ததில்லை. இனறைய இந்தியப்படங்கள் சமூகம் பற்றிய பார்வைகளுடம் எத்தனை படம் எடுக்கப்பட்டன? காதலையும் கத்தரிக்காயையும் கவட்டுக்குள்ளை வையுங்கோ

  Like

 5. //எத்தனை காலத்துக்குத்தான் காதல் கத்தரிக்காய் என்று பேசிக்கொண்ட இருக்கப்போகிறீர்கள்? இன்றைய சமூகப்பிரச்சனை இதுதானா? சரி காதல் காதல் என்று அலைந்து பக்கம் பக்கமாய் எழுதி கல்யாணம் கட்டியபின் அடியும் உதையுமாக வாழ்க்கை நடத்தும் காதல் குடும்பங்களை என்ன சொல்ல? காதல் காதல் என்று படம் படமாய் எடுத்து காதலும் வாழ்ததில்லை இந்தியத் தமிழனும் சிந்ததில்லை. இனறைய இந்தியப்படங்கள் சமூகம் பற்றிய பார்வைகளுடம் எத்தனை படம் எடுக்கப்பட்டன? காதலையும் கத்தரிக்காயையும் கவட்டுக்குள்ளை வையுங்கோ//

  வாழ்க்கைல ரொம்ப அடிபட்டிருக்கீங்க போல இருக்கே 😦

  Like

 6. /Vaarthaigalai vallaigal pinni, padipavarai kavargirirgal anna…

  ‘காற்றுடன் நடத்தும் கத்திச் சண்டை, நிழலுடன் நடத்தும்
  குத்துச் சண்டை, கடல் நீரில் தோண்டும் சுரங்கம்.

  Arumaiyana karpanai. Kaathalipavargalukku anaithume saathiyam.
  //

  நன்றி மகேஷ் 🙂

  Like

 7. //அண்ணா படங்கள் அழகு அதைவிட உங்கள் கவிதைக்குள் புகுத்தும் உவமைகள் அழகு.அதனால் எனக்கும் பிடிச்சிருக்கு
  உங்க கவிதைகள்.//

  நன்றி சகோதரி ஹேமா 🙂

  Like

 8. //பிடிக்கும் உனை பிடிக்கும்
  அழகா உனைப் பிடிக்கும்
  “ஆகாய வெண்ணிலா”வைப் பிடிக்கும்
  என்ற பாடல், நினைவில் முட்டி மோதிச் சென்றது!
  மனதைத் தொட்டுவிடும் அழகிய உங்கள் கவிதைகள் அற்புதம் சேவியர்!//

  நன்றி ஷாமா 😀

  Like

 9. Kavithai Puriyaap Pennum, Kaathal T(R)acikkaakaak Kannum, Irulil Vaalu Mirukam, Alakin Rasnai Ariyaar, Avanijit kurudar Poonroor, Pidikkung Kaathal Ellaam, Anréé Suvaikkum Meenraal, Iyarkkai Onraith Thavira, Ulakil Verron Rillai, Kathali Enpathu Iyitkailonru, Athanaal Maddu Iyaitkaimaaraa, Iyarkkaiyaik Kaadik Kaathalaiadivar, Kaathalayk Kaaddi Iyatkiracikkumaa?, Iyrkkaiyai Kaaddi Kaathalankaathali, Racippathu Kaathalan Kaathalar, Kaathal Ennpathu Iyarkkaijisaayal, ” IYARKKAIJIN SAAYAL” ++K.SIVA++(Fr)

  Like

 10. //எனக்கு
  உன்னைப் பிடிக்கும்,
  உனக்குப் பிடிக்குமா
  கவிதை ?//
  அழகு கவிதைகள்
  //

  நன்றி யாழ்:)

  Like

 11. nice kavithai..
  nee yannidam pesa vittalum
  nan unnudan pesikonduthan erukiren
  varthaigalin valia alla
  kavithain valia
  by
  naveen gayathri

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s