கவிதை : காதல் வழிப்போக்கன்

freida-pinto4

ஒவ்வொரு கவிதை
முடிவிலும்,
உன்னை இன்னும் அதிகமாய்
நேசிப்பதாய் உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல் எழுதத் துடிக்கிறேன்.

freida-pinto4

உன் உதடுகளை
என் உதடுகளால்
பிரதி எடுக்க
பிரியப்படுகிறேன்.
நீயோ
அதற்கு இன்னோர்
பிறவி எடுக்கச் சொல்கிறாய்
freida-pinto4

மறந்து போயிருந்த
ஒரு
இதயம் கொத்திய
பழைய பாடலை
இரவின் நிசப்தத்தில்
மெல்லிய சப்தத்தில் கேட்டேன்.
உன்
ஞாபகம் கொத்திக் கிளறுகிறது.

freida-pinto4

ஒவ்வொரு முறை
நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை
வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும்
ஓவியமாய் நான்.

freida-pinto4

பட்டென்று கட்டிக் கொள்ளும்
ஓர்
குழந்தையின்
குரங்கு பொம்மையாய்
நீ.
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கும்
கடைவீதியின்
கடைக்குட்டி குழந்தையாய்
நான்.

freida-pinto4
உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.

freida-pinto4

என் வீட்டுக் கண்ணாடி
உனக்கான
என்னைக் காட்டுகிறது.
உன் காதல் மட்டுமே
நான் என்ற
என்னைக் காட்டுகிறது.

freida-pinto4
முள்ளை முள்ளால் தான்
எடுக்க வேண்டும்.
என் காதலை
உன் காதலாலும்.

freida-pinto4

செலவழித்தால்
சேரும்,
சேர்த்து வைத்தால்
தொலைந்துபோகும்…
ஓர்
வியப்பின் விதை
காதல்.

freida-pinto4

நாம் இருவரும்
எதைப்பற்றித் தான் பேசவில்லை
மனதுக்குள்
பற்றிக் கொண்டிருந்த
காதலைத் தவிர..

freida-pinto4

கருவாட்டுக் கூடையில்
தலைவைத்துத்
தூங்கும் மீன்காரி போல,
உன்
நினைவுக் கூடைக்குள்
தலை வைத்துப் படுக்கவே
பிடித்திருக்கிறது
எனக்கு.

freida-pinto4

நீ
பேச மறுத்த
காலங்களில் தான்
என்
கவிதைகள் அதிகமாய்
பேசின.

freida-pinto4

ஆணி கிழித்த
காயத்தைத்
தேன் பூசி மறைப்பதாய்
இருக்கிறது

நீ
காதலை நிராகரித்து
நட்பை நீட்டும் போது.

freida-pinto4

ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.

ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.

0

40 comments on “கவிதை : காதல் வழிப்போக்கன்

  1. ஒரு
    பூவோடு வந்து
    பூ பிடித்திருக்கிறதா
    கேட்டாய்.

    ஆம் என்றேன்.
    பூ தானே
    பூவைப் பிடித்திருக்கிறது.

    ungal pulamayai sothikka intha vaarthaikaley pothum!! superb!!

    Like

  2. அண்ணா இவன் காதல் வழிப்போக்கன் இல்லை.காதல் கள்ளன்.காதலே அழகுதான்.அதற்கு ஒரு அசத்தல் கவிதை./

    நன்றி ஹேமா…

    Like

  3. /கவிதை எல்லம் வழைமைபோல் அழகு இந்த கவிதையில் எழுத்து பிழை இருக்கிறது குருட்டுப் பிச்சைக்காரனின் என்று வர வேண்டும்/

    நன்றி யாழ்… திருத்தியமைக்கும், கருத்துக்கும்.

    Like

  4. //உங்கள் அழகான கவிதைகளை தவறாது வாசித்து வரும் வாசகன் நான்.
    பலகோடி பாரட்டுக்கள்.

    உங்கள் கவிதிகளை உங்கள் பெயரைக்குறிப்பிட்டு எனது இணையத்தில் வெளியிட விரும்புகிறேன்.
    அனுமதி தறுவீர்களா?
    //

    நிச்சயமாக நண்பரே…. நன்றிகள் !

    Like

  5. உங்கள் அழகான கவிதைகளை தவறாது வாசித்து வரும் வாசகன் நான்.
    பலகோடி பாரட்டுக்கள்.

    உங்கள் கவிதிகளை உங்கள் பெயரைக்குறிப்பிட்டு எனது இணையத்தில் வெளியிட விரும்புகிறேன்.
    அனுமதி தறுவீர்களா?
    http://www.tamil.com.nu
    nvn.an@hotmail.com

    Like

  6. உதயம் காணக் காத்திருக்கும்
    ஓர்
    குடுட்டுப் பிச்சைக்காரனின்
    இடுப்புப் பையில்
    இடறிய காசு
    காதலின் கனவுகள்.

    கவிதை எல்லம் வழைமைபோல் அழகு இந்த கவிதையில் எழுத்து பிழை இருக்கிறது குருட்டுப் பிச்சைக்காரனின் என்று வர வேண்டும்

    Like

  7. அண்ணா இவன் காதல் வழிப்போக்கன் இல்லை.காதல் கள்ளன்.காதலே அழகுதான்.அதற்கு ஒரு அசத்தல் கவிதை.

    Like

  8. //அன்றொருநாள்…..(?) இதே கவிதையை மிஸ்டர் சேவியர், மிஸஸ் சேவியர்க்கிட்டேதான் சொல்லியிருப்பார் போலும்… விட்டடுங்க… பாவம் சேவியர்//

    அது வேற கவிதை ஷாமா 😀

    //
    சேவியர், உங்கள் கவிதைகள் என்றும் போல் அருமை…. இதைத் தான் எப்போதும் சொல்ல வைக்கிறீங்க…
    ம்..ம்..ம்.. வேறு என்ன சொல்ல!……. வாழ்த்துகள்//

    நன்றி ஷாமா… மனமார்ந்த நன்றிகள். 🙂

    Like

  9. //ஒவ்வொரு முறை நீ
    பார்வைத் தூரிகை தொட்டு
    என்னை வரையும் போதும்
    அழிந்து கொண்டிருக்கும் ஓவியமாய் நான்.//

    //முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
    என் காதலை உன் காதலாலும்.//

    //ஒரு பூவோடு வந்து
    பூ பிடித்திருக்கிறதா கேட்டாய்.
    ஆம் என்றேன்.
    பூ தானே பூவைப் பிடித்திருக்கிறது.//

    அடடடா…. அருமை அருமை…. கவியரசே!…. (ஐய்யையோ… கோவிச்சுக்கப் போறாரு கண்ணதாசன்.)

    அன்றொருநாள்…..(?) இதே கவிதையை மிஸ்டர் சேவியர், மிஸஸ் சேவியர்க்கிட்டேதான் சொல்லியிருப்பார் போலும்… விட்டடுங்க… பாவம் சேவியர்!

    சேவியர், உங்கள் கவிதைகள் என்றும் போல் அருமை…. இதைத் தான் எப்போதும் சொல்ல வைக்கிறீங்க…
    ம்..ம்..ம்.. வேறு என்ன சொல்ல!……. வாழ்த்துகள்!!

    Like

  10. //Enakkum Ithu Poal Oru anupavam Unndu Ungal kavithaigal ovvondrum En manathi Mounangalai Azhakai Varudi Sendrathu/

    நன்றி செந்தில். அதுதானே கவிதையின் வெற்றி 🙂

    Like

  11. //சேவியர் ஜு.வி ல எழுதின இந்த வார கட்டுரை படித்தீர்களா ?.. பார்த்தால், நெட்”டை மேய தோணும் …!!!//

    🙂 அடடா.. இதுல “உள்குத்து” ஒண்ணும் இல்லையே 😀

    Like

  12. விநாயகம் சார்.., இதெல்லாம் “நடந்து முடிந்த” கதை… மன்னிக்கணும் “கவிதை” ..! ஆனாலும் உங்களுக்கு ஏன் சேவியர் சார் மேல “பொறாமை”..?!

    “விதியது வலியது”நு “மேடம் சேவியர்” அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறப்பே.. உங்களுக்கென்ன வந்தது..?!

    சேவியர் ஜு.வி ல எழுதின இந்த வார கட்டுரை படித்தீர்களா ?.. பார்த்தால், நெட்”டை மேய தோணும் …!!!

    Like

  13. இப்படியெல்லாம் மத்த பொண்ணுங்களை நினைத்துக்கொண்டிருந்தால், நான் எங்க அம்மா வீட்டுக்குப் போய்விடுவே.

    நீங்க அந்த பாம்பேகாரியை (சே…அந்த மூஞ்சியைக் கண்டாலே பத்துகிட்டு வருது…கருவாட்டுக்க்கூடைசுமக்கிற கயுதைக்கு புருவம்வேற மழிப்பா..கண்றாவி) க்ட்டிக்கிட்டு மாரடிங்க…’

    இப்படி கடிதம் எழுதிவைத்துவிட்டு திருமதி ஜேவியர் தன் பிறந்தகம் போய்விட்டார்.

    Like

  14. //– ஒரு
    பூவோடு வந்து
    பூ பிடித்திருக்கிறதா
    கேட்டாய்.

    ஆம் என்றேன்.
    பூ தானே
    பூவைப் பிடித்திருக்கிறது. –//

    முதல்ல புரியல்ல லேட்டா தான் புரிஞ்சிச்சி..

    சூபர்…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.