காதல் புன்னகை

kajal-agarwal-8_001ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.

 

தமிழிஷில் வாக்களிக்கலாமே

Advertisements

11 comments on “காதல் புன்னகை

 1. “உன் புன்னகை அழகென்று
  உன்னிடம் சொல்ல
  மட்டும்
  ஆயுள் கால தயக்கம் எனக்கு.

  நீ
  புன்னகைப்பதை
  நிறுத்தி விடுவாயோ என்று”

  சுப்பர் நண்பரே..

  Like

 2. //எனினும்
  உன் புன்னகை அழகென்று
  உன்னிடம் சொல்ல
  மட்டும்
  ஆயுள் கால தயக்கம் எனக்கு.

  நீ
  புன்னகைப்பதை
  நிறுத்தி விடுவாயோ என்று.//

  அடடா…
  தனக்கே மட்டும் சொந்தமாகப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
  மென்மையான உணர்வு!…. அழகாகக் கூறப்பட்டிருக்கிறது!…. பிரமாதம்!…
  கவி தொடர வாழ்த்துகள்!….

  ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி!…. நன்றி சேவியர்!

  Like

 3. //தனக்கே மட்டும் சொந்தமாகப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
  மென்மையான உணர்வு!…. அழகாகக் கூறப்பட்டிருக்கிறது!…. பிரமாதம்!…
  கவி தொடர வாழ்த்துகள்!….

  ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி!…. நன்றி சேவியர்!

  //

  நன்றி ஷாமா… உங்கள் அன்புக்கு…

  Like

 4. “உன் புன்னகை அழகென்று
  உன்னிடம் சொல்ல
  மட்டும்
  ஆயுள் கால தயக்கம் எனக்கு.

  நீ
  புன்னகைப்பதை
  நிறுத்தி விடுவாயோ என்று”

  சுப்பர் நண்பரே
  //

  நன்றி குருபரன்.

  Like

 5. Punakiyaith Thooddumanam Panthaada, Puthuvulaka AAthaamum Eévaalum,Punakaiyaaji Thooddunitham Panthaada,Enciyathoo Puuvulakaaji Maarivara, Pansumuga Thaanathiléé Koonsumoolii, Nithamnithamaaji Kanavukalaaji Ninraadaa, Vinsudumoo? Vééruvali Enraaka, Vééthanaiyaaji Virinthapéru Thaanulakil, Konsumooli Kuudippal Ninrumoolipésa, Anruavl Punakaijil Puukkooduththaal, Ninrunitham Kaathalénum Valaijil , Cikkividdaal Cénramanm Thirupaathukannaa, Aathalinaal Kaddiyanaithuvidu Kathalénumthiiyai, Anrudanéé Cenruvidum VéjilpaddaPaniyaaji. “”CENRU VIDUM “” ++K.SIVA++(Fr)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s