பிரியமூட்டி வளர்க்கிறேன்….

உனக்குத் தருவதற்கென்றே
வளர்த்து வருகிறேன்.

எங்கே சென்றாலும்
காலைச்
சுற்றிச் சுற்றி வந்து
முதுகு தேய்க்கும்
வெல்வெட்
நாய்க்குட்டியாகவோ,

புரண்டு படுக்கும் போதும்
கூடவே புரண்டு படுத்து
என்
போர்வைக்குள்ளேயே
மெல்லமாய்ப் பிராண்டும்
செல்ல
பூனைக்குட்டியாகவோ,tamanna_(6)
அதை நினைத்துக் கொள்ளலாம்.

உன்னைப் பற்றிய
கனவுகளைக்
கவளம் கவளமாய்த் தின்று
உன்
அழகு குடித்து
வளர்ந்து கிடக்கிறது அது.

நீ
புறக்கணிப்பாயோ
இல்லை
நீயும் ஒன்றை
அப்படியே வளர்க்கிறாயோ ?
தெரியவில்லை.

ஆனாலும்
கைகளில்
ஏந்திப் பார்க்காமல்
இருந்து விடாதே
பிரியமூட்டி பிரியமூட்டி
வளர்த்த இதயம் அது.

Advertisements

13 comments on “பிரியமூட்டி வளர்க்கிறேன்….

 1. //நீ
  புறக்கணிப்பாயோ
  இல்லை
  நீயும் ஒன்றை
  அப்படியே வளர்க்கிறாயோ ?
  தெரியவில்லை.

  ஆனாலும்
  கைகளில்
  ஏந்திப் பார்க்காமல்
  இருந்து விடாதே
  பிரியமூட்டி பிரியமூட்டி
  வளர்த்த இதயம் அது.//

  லாவகமாகக் கூறப்பட்டிருக்கும் அழகிய வரிகள்!…..
  “கைகளில் ஏந்திப் பார்க்காமல் இருந்து விடாதே
  பிரியமூட்டி பிரியமூட்டி வளர்த்த இதயம் அது”

  கடைசி வரி,
  முத்தாய்ப்பாய் அமைந்த
  இனிய வரி.

  Like

 2. காதலை பற்றிய கவிதைகள் சலிப்பை தருவதாகவே நினைக்கிறேன் …உங்கள் கடிகாரத்தை பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன் …… வாழ்த்துக்கள்

  Like

 3. Onrai Onru thuraththi, Orumithu Nitkinra Veelai, Ninru Vjeru Vaadum, Miindum Marumurai Sèèra, Thuukkam Kaninai Saada, Ninru Manath Thalumpum, Scnru Marumurai Thoodarnthu, NNdkal Vaarangkal Maathangkal, Onnraaji Seerthu AAndukalAAkum, Ithuvéé Manithanum Manikuudu, OnraajiInaintha Pirapu Pooleeyaam. “” ONRAAJI INAINTHA PIRAPU”” K.SIVA (Fr)

  Like

 4. //கைகளில்
  ஏந்திப் பார்க்காமல்
  இருந்து விடாதே
  பிரியமூட்டி பிரியமூட்டி
  வளர்த்த இதயம் அது”//

  nice kavithai as usual Anna.

  Like

 5. Kaalaijil Thoonri
  Kanil Valrum
  Ninaivin Alai Yathu
  éNNai Vaaduva Théén
  Nii Yéé Solvaaj
  Naanoo AriYééin
  ++ K.Siva Fr ++
  Nii Jéé Sol Vaaji
  =========

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s