கவிதை : Take it ez … பி.டி பிரியா

வாசல் கடக்கையில்
எதேச்சையாய் மோதிய
வசீகர அழகிக்கு
“நன்றி” சொல்ல வாயெடுத்தேன்
சாரி
சொல்லி கடந்து போனாள்.

இயற்கை அழகு அபாரம் என்றேன் !tamanna_(11)
உற்றுப் பார்த்தது
ஸ்கூட்டி ஜீன்ஸையோ
என
அருகிருந்த மனைவி
சந்தேகப்பட்ட வினாடியில்.

மானே, தேனே எல்லாம்
பழசாகிப் போச்சு
ஆங்கிலக் கொஞ்சல்களைத் தான்
விரல் அலகுகளால்
கொத்தித் தின்கின்றன
எஸ் எம் எஸ் கிளிகள்

பி.டி பருத்தி
பி.டி பிரிஞ்சால் …
இது
மரபணு மாற்று யுகமாமே
விரைவில் வரவாளோ
சந்தியாவின் சிரிப்பையும்
காவ்யாவின் குணத்தையும் இணைத்த
பி.டி பிரியா ?

Advertisements

20 comments on “கவிதை : Take it ez … பி.டி பிரியா

 1. //“நன்றி” சொல்ல வாயெடுத்தேன்
  சாரி சொல்லி கடந்து போனாள்.//
  கண்ணைக் கவரும் அழகு அந்த மங்கைக்கு இருந்த போதிலும், இருவரிடமும் உள்ள “நடைமுறை வேறுபாட்டை” அழகுடன்,
  “நன்றி” “சாரி” என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் எனத்தான் எண்ணத் தோன்றுகிறது…..
  அற்புதம் சேவியர்!

  //விரைவில் வரவாளோ
  சந்தியாவின் சிரிப்பையும் காவ்யாவின் குணத்தையும் இணைத்த பி.டி பிரியா ?//
  கொஞ்சம் கஷ்டம் தான்!…. முயற்சி திருவினையாக்கும் என்கிறார்களே!… முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதான்! 😉

  Like

 2. அண்ணா எப்பவும் போலவே உங்கள் கவிதைகள் அருமை.அபாரம்.எப்பவும் வந்தாலும் ரசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமலே போகிறேன்.

  இன்று உங்கள் வாழ்த்துக்கள் ஒரு புதுத் சந்தோஷத்தைத் தந்தது.அதைச் சொல்லவே ஓடி வந்தேன்.நன்றி அண்ணா.உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக் குளிகைபோல.

  Like

 3. //விரைவில் வரவாளோ
  சந்தியாவின் சிரிப்பையும்
  காவ்யாவின் குணத்தையும் இணைத்த
  பி.டி பிரியா//

  சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன். சந்தியா, காவ்யா, ப்ரியா எல்லாரும் இவருக்கே வேணுமாம்? நாங்க மட்டும் தூரத்துல நின்னு வேடிக்க பாக்கனுமாம்? என்னக் கொடுமை சார் இது…

  மாயாண்டி… (எஸ் பாஸ்…) ஒரு ரூபா பி.சி.ஓ.லேந்து திருமதி சேவியருக்கு ஒரு போனப் போடு (ஓகே பாஸ்)

  Like

 4. //சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன். சந்தியா, காவ்யா, ப்ரியா எல்லாரும் இவருக்கே வேணுமாம்? நாங்க மட்டும் தூரத்துல நின்னு வேடிக்க பாக்கனுமாம்? என்னக் கொடுமை சார் இது…

  //

  ஹலோ வி.கோ, மரபணு மாற்று பயிரையே எதிர்க்கிறவன் நான். இதில போயி…. ( மாயாண்டிக்கு இந்த மேட்டரை சொல்லிடுங்க… 😉 )

  Like

 5. அண்ணா எப்பவும் போலவே உங்கள் கவிதைகள் அருமை.அபாரம்.எப்பவும் வந்தாலும் ரசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமலே போகிறேன்//

  மிக்க நன்றி சகோதரி…

  Like

 6. Kaathalitha naatkalai
  Nenaithu parpatha illai
  Ennai kaathalipathai Vittuvidu
  Endru sounanthai
  Nenaipatha theriyavillai?……..

  Like

 7. Pidipitiyaa Matapanuvaal, Urumaaraa Oruvanuthaan, Aathalinaal Moothalikka Onrumila, VéthanaijEén Vidduvidu Kannaa, Aathalinaal Moothalilaa AvanivarungkanNaa. “AVANI VARUM KAN NAA ” ++K.SIVA++(Fr)

  Like

 8. நலல் கவித்துவம் நிறைந்த கவிதைகளுக்கு வரும் மறுமொழிகளை விட அதிகம் இக்கவிதைக்கு வருவதின் மர்மம் என்ன சேவியர்

  சந்தியா காவ்யா பிரியா ஸ்கூட்டி ஜீன்ஸ் வசீகர அழகியின் மோதல் – இவைகளாலா

  ம்ம் – இவைகளும் அவ்வப்பொழுது தேவைப்படுகின்றன – இல்லையா சேவியர்

  நல்வாழ்த்துகள்

  Like

 9. /நலல் கவித்துவம் நிறைந்த கவிதைகளுக்கு வரும் மறுமொழிகளை விட அதிகம் இக்கவிதைக்கு வருவதின் மர்மம் என்ன சேவியர்//

  ஐயா வணக்கம். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 🙂 மர்மங்கள் மர்மங்களாகவே இருப்பதில் தான் வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது 😀

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s