நட்புக் கவிதைகள்

man-thinking

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! ”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

345 comments on “நட்புக் கவிதைகள்

 1. //போன் பண்ணுடா…
  எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
  “கண்டிப்பா”
  என நகர்வான்,
  நான் கொடுக்காத நம்பரை
  அவன்
  எழுதிக் கொள்ளாமலேயே
  😦

 2. //…பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ?//

  சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
  சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?

  //…நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே.//

  ஆஹாஆஆ…..

  //பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன…//

  ம்ம்ம்ம்ம்…நண்பர்கள் மனம் நோகக் கூடாதென்பதற்காகவா?…..

  //….நண்பனின் புன்னகை முகம் தெரிகிறது.
  இறந்து வெகு நாட்களான பின்னும்.//

  மாறும் உலகில் மாறாதிருப்பது “கடந்தகால நினைவுகள்” தாம்!

  //…தோழியின் பெயரைச் சொல்லி
  நட்பைப் பெருமைப்படுத்துகிறது நர்சரி!//

  தன்னுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை
  வெள்ளை மனம் கொண்ட பிள்ளைக்கும் தெரிந்திருக்கிறது!
  அழகு!…
  வாழ்த்துகள்!….
  தொடரட்டும் கவிப்பயணம்!

 3. சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
  சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?
  //
  பழைய நண்பர்களை ரொம்பவே ஞாபகம் வைத்திருப்பேன். எல்லா சமாச்சாரமும் நினைவுக்கு வரும். பெயர் மட்டும் வராது.
  அதைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன். உன் ஆபீஸ் மெயில் ஐடி சொல்லு மச்சி என்பேன். பெரும்பாலும் பெயர் இருக்கும் ! சட்டென நினைவுக்குள் வந்து விடும்😀

  நன்றி ஷாமா, வருகைக்கும், கருத்துக்கும்,அன்புக்கும்…

 4. Poojsoolli Pukaledukaa Vaalkkai,Méjorunaal Thélivaakkum Poothu, Unmaithaan Thulangki Vidumkannaa, Aathalinaal Kaathalukkup Poojpéci, Kaariyathai Niraivérum Kaathail, Poojjilai Niyamééthaan Enpathuthaan, Aathalinaal Kathalukkuk Kajikaadi, Nitrkkinréén Aathalinaal Sukamaaka, Valinthuvidu Nithamaaka Niiduniir VALLVIIR. “NIIDU NIIR VAALKA” ++K.SIVA++(Fr).

 5. //“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
  என சிலிர்ப்புடன்
  பெயர் சொல்லி அழைக்கும்
  நண்பனுடன் பேசுகையில்
  பயமாய் இருக்கிறது
  “எம் பேரு ஞாபகமிருக்கா”
  என கேட்டு விடுவானோ ?//

  நச்.

  கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 6. அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க !

 7. அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது தோழரே…

 8. ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
  கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???

 9. உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்.

 10. அண்ணே….

  இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

  நீங்க ஒன்னும் பயப்படாதீங்க…
  😦

  என்னை மட்டும் காப்பாத்துங்கண்ணே….

  [சேவியர்: அடச் சீ… அடிக்கடி ஆதவன் ட்ரெய்லர் பாக்காதேன்னு சொன்னா கேக்கறியா நீ…]

 11. //அண்ணே….

  இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

  நீங்க ஒன்னும் பயப்படாதீங்க
  /

  என்ன தம்பி… நீ.. இன்னா பேசறேன்னு பிரியலையே…😉

 12. //உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்//

  வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் வருகையில் மிகவும் மகிழ்கிறேன். அடிக்கடி வருகை தாருங்கள்.

 13. /ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
  கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???//

  போன வாரம் தானே சந்திச்சோம். அதுக்குள்ள மறக்க முடியுமா என்ன🙂

 14. //அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க //

  வாய்ப்பே இல்லை. நண்பர்களை மறந்தாலும், சகோதரியை எப்படி மறப்பேன்🙂

 15. //கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

  பகிர்வுக்கு நன்றிகள்
  //

  நன்றி. அருமையான உரைநடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது !

 16. மீண்டும் மிர்த்தன் பேசுகிறேன்!
  தங்களின் வருகைக்கு நன்றி பல!
  உங்களின் நினைவுகளுக்கு, வார்த்தைகள் வடிவம் கொடுக்கும் விதம் மிகவும் நயமாக உள்ளது!
  உங்கள் மேல் அளவில்லாத பொறாமை கொள்கிறேன் மரியாதையுடன்! உங்களை போல் ஒருமுறை பிறக்க.
  உண்மைதான்! உங்களுக்கும் கடவுள் கை திறக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன் உங்கள் விருப்பத்துடன்!

  நிச்சயம் மறுமுறை வருகிறேன் என் கடமையாய் ஒரு விசிறியாய்!!!

  (பின் குறிப்பு: தளம் அழகாக உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்! கவிதைக்கு கருத்து சொல்லவில்லையே! (ஹா ஹா ஹா)

  அன்புடன்,
  மிர்த்தன்!
  (mirthonprabhu.blogspot.com)

 17. நன்றி மிர்த்தன். உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது தான் தமிழ் தரும் வரம் எனக்கு.

  உங்கள் தளம் என்பது உங்கள் கவிதையையும் சேர்த்துத் தானே நண்பரே🙂

 18. NEE Rojavaga Ierutala
  nan athil mullaga varuven
  Unnai Kuthuvatharkaga Alla
  Unnai Yarum
  Thodamal Ierupatharga

 19. \\யாரை ரொம்பப் பிடிக்கும் ?
  எதிர்பார்ப்புடன்
  மகளைக் கொஞ்சுகையில்,
  தோழியின் பெயரைச் சொல்லி
  நட்பைப் பெருமைப்படுத்துகிறது
  நர்சரி !
  \\ arumaiyaana varigal

 20. \\கிராமத்து மௌன வீட்டின்
  கம்பி அளியின் ஊடாக
  நண்பனின்
  புன்னகை முகம் தெரிகிறது.
  இறந்து
  வெகு நாட்களான பின்னும்.
  \\\ nalla irukku…

 21. HELLO SIR UNGA KAVITHAI SUPERB

  KAVITHAI KU AAZLUGU POI THAN AANAL
  IPPO THU UNMAI KOODA AAZLHAI ULATHU .

 22. Natpum Nanbanum Irunthal nam valvil Tholvigalea illai…..

  Nanbanai kattilum Sirantha uravu Ulagil Verillai……

  I love my FRIENDS…, Always…….

  With Love…..,
  Mohana

  Natpu….., Nanban……, Evvalavu Azhagana Varikal Ivai……

  Petravarkalea illai endralum…, oruvanukku nanban illamal irukka mudiyathu….. That’s TRUE……

 23. //Natpum Nanbanum Irunthal nam valvil Tholvigalea illai…..

  Nanbanai kattilum Sirantha uravu Ulagil Verillai……

  I love my FRIENDS…, Always…….

  With Love…..,
  Mohana

  Natpu….., Nanban……, Evvalavu Azhagana Varikal Ivai……

  Petravarkalea illai endralum…, oruvanukku nanban illamal irukka mudiyathu….. That’s TRUE……
  //

  வருகைக்கும் கருத்துக்கும்… நன்றி நன்றி🙂

 24. //UKALUDYA NADPU KAVITHAKAL SUPAR UKALUDAYA FRIENDS VERY LUCKY SIR//

  நீங்களும் அதில் ஒன்றாகிவிடுங்கள்🙂 நன்றி !

 25. அன்ன கவிதை எல்லாம் நன்றாக இருக்கிறது . உங்களது முயட்சிக்கு பாராட்டுக்கள் .

 26. விபின்சன் .குலாஸ்,8 -வட்டாரம் பேசாலை. மன்னார்

  உங்க கவிதை எல்லாம் super

 27. ungal kavithai migavum arumai

  என்னை கருவில் சுமந்திராத இன்னொரு தாய் என் நண்பன்

 28. migavum sirappana kavithai natpai patthi

  oru sila kavithaikalai padikkum poluthu kannare vanthu vidukirathu

  Mukkiamaga
  எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
  என சிலிர்ப்புடன்
  பெயர் சொல்லி அழைக்கும்
  நண்பனுடன் பேசுகையில்
  பயமாய் இருக்கிறது
  “எம் பேரு ஞாபகமிருக்கா”
  என கேட்டு விடுவானோ ?

 29. Best reply for rejecting a proposal….
  i like u my friend but love is something that gives pain and i cant see u in pain………..

 30. Best reply for rejecting a proposal….
  i like u my friend but love is something that gives pain and i cant see u in pain………..

  //

  மிக்க நன்றி இனிய தோழி…

 31. Aval Parvaiyai thaane Kadanaga Ketten,
  Anaal Avalo en Idhayathai Vattiyaga eduthukkondal,
  Meela mudiyamal thavikkum en idhayam.

 32. Nee Ninaipathu Asai Endru Ninaikkamal,
  Latchiyam Endru Ninaitthal Vetri Uruthi

  Tamilselvi ( MBA ) APEC

 33. Kaatrukkum Enakkum Sandai.
  Yaar Mudhalil Un
  “IDHAYATHAI” Thoduvathu endru.
  Kaatrukku Vittukoduthu Vitten
  Ungal Swasam Nindru Vidakoodadhu Enpathanal.
  Tamil selvi MBA
  My friend mano

 34. Sailence in lips may avoid many many
  problems…..And
  Smile in lips may solve many many
  problems…..So
  Always have a silent smile.

  Tailselvi@deepi

 35. “U r a Good Runner,
  Bcoz U r always
  Running in my mind

  TAMILSELVI @BOX,PREME,MANO

 36. ennai thira
  un manadhai thirakiraen
  eppadikku- pena

  nanbarae thangalin natpu kavidhai miga arumai…………….vaazhthukkal

 37. அழுதால் உன் பார்வையும்
  அயந்தால் உன் கால்களும்
  அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
  நிழல் தேடிடும் ஆண்மையும்
  நிஜம் தேடிடும் பெண்மையும்
  ஒரு போர்வையில் வாழும் இன்பம்
  தெய்வம் தந்த சொந்தமா
  என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
  சுமை தாங்கும் எந்தன் கண்மணி
  எனை சுடும் பணி..
  by
  divya………………..

 38. //அழுதால் உன் பார்வையும்
  அயந்தால் உன் கால்களும்
  அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
  நிழல் தேடிடும் ஆண்மையும்
  நிஜம் தேடிடும் பெண்மையும்
  ஒரு போர்வையில் வாழும் இன்பம்
  தெய்வம் தந்த சொந்தமா
  என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
  சுமை தாங்கும் எந்தன் கண்மணி
  எனை சுடும் பணி..
  by
  divya………………..

  //

  நல்ல பாட்டு🙂

 39. enaku athu purila 2 lines la sonalum avanga manasa aluthura mathiri i mean avanga nampa oru pona eamathitam nu alugaura mathiri veanum pls……….

 40. //hi
  boys ponugala emathitu poranga so avangaluku pathil adi tharamathiri kavithai veanum pls. enaku apadi nala kavithaiya eathir pakuran
  //

  ஒரு பிரியாணி பார்சல்ல்ல்ல்ல் … ன்னு சொல்ற உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு🙂

 41. //ennakku pidikkala ithu kavithaya sirippu than varruthu

  //

  சிரிப்பது ஆரோக்கியமானது ! சிரியுங்கள், நட்புக்கும் அதுவே அவசியம் !🙂

 42. பொய்கள் தான்
  உண்மையாகவே
  நட்பைக் காப்பாற்றுகின்றன.

 43. annudaiya best friend fasla . nan orupothum avalaiparrithappaga enniyathillai . enenralengal natpu punithamanathu

 44. unnai parkumpodhu punnakai sinndhum en idhazhgalaivida unnai kaanadhapodhu kanneer sindhum en kankalaiye adhigam nesikkiren !

 45. உங்கள் கவிதைகள் ஈர்புடையவை ,இதை ஏன் புத்தக பதிப்பாக நீங்கள் வெளியீட கூடாது ?? வாழ்த்துக்கள் .

 46. இந்த ஒரு பார்வைக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன் பல ஆயிரம் நாட்களாக நண்பனாக அல்ல… நாளையா கணவன் ஆக…BY sathishnive77@gmail.com

 47. தோழியின் பெயரைச் சொல்லி
  நட்பைப் பெருமைப்படுத்துகிறது
  நர்சரி ! – நன்று

 48. நட்புக் கவிதைகள் நண்பரிடமிருந்து . பாராட்டுகள் ,கருத்துரைகள் ஏராளம் .இது உங்கள் நட்புக்கும் பாராட்டு மற்றும் உங்கள் கவிதைக்கும் பாராட்டு .யதார்த்தம் .

 49. உண்மைகளை உன்னத நடையில் வெளிப்படுத்தும் -கவியின்
  தன்மையினை பொய்யின்றி ரசிக்கின்றேன்.
  வாழ்த்துக்கள்!
  சிவபாலன் – நியூயார்க்

 50. தோழியின் பெயரைச் சொல்லி
  நட்பைப் பெருமைப்படுத்துகிறது
  நர்சரி ! – நன்று

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s