கவிதை : அழகாராய்ச்சி…

மகரந்தம் தாங்கும்
கர்ப்பப் பையாய்
மலர்களைப் பார்ப்பதும்,
பனித்துளி ஏந்தும்
மேடையாய் இதழ்களைப் பார்ப்பதும்,
கனவுகளின்
வாசனை சாலையாய்
காதலில் பார்ப்பதும்
பார்வைகளைப் பொறுத்தது.

நீ
பூவை பூவாகவேனும்
பார்.

0

சூரிய ஒளிச் சமாச்சாரங்களையும்,
கோள்களின்
சுற்றுப் பாதை சங்கதிகளையும்,
தூர அகல
அறிவியல் ஆராய்ச்சிகளையும்
மனசுக்குள் உட்கார்த்தி
உரையாடாதே.

இரவு நேரத்தில்
நிலா வீதியில் நிற்கையில்.

0

அறிவியல்,
மூளையின் செல்களுக்குள்
செல்லட்டும்.
ரசனை
மனசின் நரம்புகளுக்குள்
பாயட்டும்.

சோதனைக் குடுவை கிடைத்தாலும்
சோதனைச் சாலைக்கு வெளியே
அதை
பூந் தொட்டியாய் பயன்படுத்து.

0

அகழ்வாராச்சிகள் எல்லாம்
தேவைதான்,
ஆனாலும்
அழகாராய்ச்சிகளையும் மறுதலிக்காதே.

ரசிக்கும் கண்கள் இருந்தால்
கோபுர கலசங்கள்
மட்டுமல்ல,
கூழாங் கற்களும் கூட
இயற்கைச் சிற்பியை
உனக்கு அறிமுகப் படுத்தும்.

உளிகளில் மட்டுமல்ல
அலைகளிலும்
சிற்பத்தின் சாவிகள் இருக்கின்றன.

0

நதிகள் இல்லாத,
பௌர்ணமிகள் விழிக்காத,
நட்சத்திரங்கள் முளைக்காத,
இருட்டின் காட்டுக்குள்
இருக்க நேர்ந்தால்
வெளிச்சம் வரும் வரை
விலகி இருக்காதே.

இரவை ரசி.
கருப்புச் சாயத்தைப் பூசிய
காற்றை ரசி.

ஒற்றைக் கீற்றில்
அத்தனை இருட்டும்
எங்கே ஒளிகின்றன என
மனசுக்குள்
வெளிச்ச வழக்காடு.
0

எழுது,
டைரிகளில் எழுதிப் பழகாத
ஜாம்பவான்கள்
ஜனித்ததில்லை.
நிராகரிக்கப் படாத
கவிதைகள்
ஆண்டவனாலும் நேர்ந்ததில்லை.

எழுது.
ஊருக்காக
இல்லையேல் உனக்காக.

0

நேசி.
நேசிக்கப்படுவாய்.
வாசி
வாசிக்கப்படுவாய்
எழுது
எழுதப்படுவாய்.

விலகியே இருந்தால் மட்டுமே
விலக்கப்படுவாய்.

பிடித்திருந்தால்… வாக்களியுங்கள்..நன்றி

Advertisements

20 comments on “கவிதை : அழகாராய்ச்சி…

 1. ஒற்றைக் கீற்றில்
  அத்தனை இருட்டும்
  எங்கே ஒளிகின்றன என
  மனசுக்குள்
  வெளிச்ச வழக்காடு.

  அழகு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  Like

 2. //நீ பூவை பூவாகவேனும் பார்.//

  ஆஹா அற்புத வரி!…. பெண்ணைப் பெண்ணாய்ப் பார் என்று கூறுவதுபோல் அமைந்திருக்கிறது!…

  //………..மனசுக்குள் உட்கார்த்தி உரையாடாதே;
  இரவு நேரத்தில் நிலா வீதியில் நிற்கையில்!//
  //சோதனைக் குடுவை கிடைத்தாலும்
  சோதனைச் சாலைக்கு வெளியே அதை
  பூந் தொட்டியாய் பயன்படுத்து//
  //உளிகளில் மட்டுமல்ல
  அலைகளிலும் சிற்பத்தின் சாவிகள் இருக்கின்றன.//

  ஏன் கண்களிலும் இருக்கின்றனவே சாவிகள் சேவியர்.

  //வெளிச்சம் வரும் வரை….இரவை ரசி.
  கருப்புச் சாயத்தைப் பூசிய காற்றை ரசி.//

  அறிவியல் அறிவியலாயிருக்கட்டும்…ரசனை, ரசனையாயிருக்கட்டும்!…
  என்றீர்கள்…அருமை…அழகு சேவியர்!

  //எழுது.
  ஊருக்காக இல்லையேல் உனக்காக.//
  //நேசி. நேசிக்கப்படுவாய்…….
  விலகியே இருந்தால் மட்டுமே விலக்கப்படுவாய்.//

  யதார்த்தம்!…உண்மை!!….வாழ்த்துகள்!!!

  Like

 3. Vaippu kidaikum poluthu unggal kavithaigalai vaasikiren anna, mighavum alagana varigal…varthaigalin korvai..miga..miga arputham…
  meendum..meendum padalgalai kekka thondruvathu pol…unggal kavithaigal meendum…meendum vaasikka thoondugirathu…Valtukkal Anna.

  “மகரந்தம் தாங்கும் கர்ப்பப் பையாய் மலர்களைப் பார்ப்பதும்,
  பனித்துளி ஏந்தும் மேடையாய் இதழ்களைப் பார்ப்பதும்,
  கனவுகளின் வாசனை சாலையாய் காதலில் பார்ப்பதும்
  பார்வைகளைப் பொறுத்தது….”

  “ரசிக்கும் கண்கள் இருந்தால் கோபுர கலசங்கள் மட்டுமல்ல,
  கூழாங் கற்களும் கூட இயற்கைச் சிற்பியை உனக்கு அறிமுகப் படுத்தும்.”

  Like

 4. //Vaippu kidaikum poluthu unggal kavithaigalai vaasikiren anna, mighavum alagana varigal…varthaigalin korvai..miga..miga arputham…
  meendum..meendum padalgalai kekka thondruvathu pol…unggal kavithaigal meendum…meendum vaasikka thoondugirathu…Valtukkal Anna.

  //

  நன்றி மகேஷ் 🙂 ரொம்ப சந்தோஷம்

  Like

 5. /ஒற்றைக் கீற்றில்
  அத்தனை இருட்டும்
  எங்கே ஒளிகின்றன என
  மனசுக்குள்
  வெளிச்ச வழக்காடு.

  அழகு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  //

  நன்றி கவிஞரே.. 🙂

  Like

 6. அன்பு நண்பர் சேவியர்

  அழகான கற்பனையில் – பெண்களுக்குப் அறிவுரை – நல்ல கவிதை

  அழகாராய்ச்சி செய் – அறிவாராய்ச்சி செய்யாதே

  நேசி.- நேசிக்கப்படுவாய்.
  வாசி – வாசிக்கப்படுவாய்
  எழுது – எழுதப்படுவாய்.

  விலகியே இருந்தால் மட்டுமே – விலக்கப்படுவாய்.

  நன்று நன்று நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

  Like

 7. //அழகான கற்பனையில் – பெண்களுக்குப் அறிவுரை – நல்ல கவிதை

  அழகாராய்ச்சி செய் – அறிவாராய்ச்சி செய்யாதே

  நேசி.- நேசிக்கப்படுவாய்.
  வாசி – வாசிக்கப்படுவாய்
  எழுது – எழுதப்படுவாய்.

  விலகியே இருந்தால் மட்டுமே – விலக்கப்படுவாய்.

  நன்று நன்று நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

  /
  மனமார்ந்த நன்றிகள் 🙂

  Like

 8. சேவியர் ,
  பல காரணங்களால் நீண்ட மாதங்களாக வர முடியவில்லை..நிறைய கவிதைகளை
  படித்து விட்டேன்.உங்களுக்கு இரண்டு
  மூன்று ஈமெயில் அனுப்பி இருந்தேன் பல மாதங்கள் முன்பு.
  படித்தீர்களா?

  இப்படிக்கு ,
  உங்கள் பழைய நண்பன்

  Like

 9. /சேவியர் ,
  பல காரணங்களால் நீண்ட மாதங்களாக வர முடியவில்லை..நிறைய கவிதைகளை
  படித்து விட்டேன்.உங்களுக்கு இரண்டு
  மூன்று ஈமெயில் அனுப்பி இருந்தேன் பல மாதங்கள் முன்பு.
  படித்தீர்களா?

  இப்படிக்கு ,
  உங்கள் பழைய நண்பன்
  //

  மீண்டும் வந்தமைக்கு நன்றி நண்பரே… எல்லா கடிதத்திற்கும் பதில் எழுதுவேனே … விடுபட்டு விட்டதோ ? எனில் மன்னிக்கவும் 😦

  Like

 10. மீண்டும் ஒருமுறை ஜொலித்துவிட்டீர்கள். நட்சத்திரங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன.

  Like

 11. //கடைசியில்
  ஒர் நாள்
  அப்பழுக்கற்ற இராமன் வந்து
  வில்லையும் ஒடித்து
  சீதையின் கரத்தையும் பிடித்தான்.

  சில வருடங்கள் சென்ற பின்
  ஓர்
  அதிகாலை அவசரத்தில்
  சீதை சினந்தாள்,

  இராவணனிடம் கூட
  புஷ்பகவிமானம் இருந்தது//

  சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.

  கவிதைப் பிரியன்.

  Like

 12. //மீண்டும் ஒருமுறை ஜொலித்துவிட்டீர்கள். நட்சத்திரங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன.//

  நன்றி நண்பரே…

  Like

 13. ஐயோ,மன்னிப்பெல்லாம் வேண்டாம் சேவியர் !!!!!
  சரி, இந்த பழைய நண்பன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? 🙂

  இப்படிக்கு,
  **************

  Like

 14. //சரி, இந்த பழைய நண்பன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?//

  ஆம் என்று சொன்னால் அது பொய் என்று அர்த்தம் 😉

  Like

 15. அருமையான வரிகள்

  நேசி.
  நேசிக்கப்படுவாய்.
  வாசி
  வாசிக்கப்படுவாய்
  எழுது
  எழுதப்படுவாய்.

  விலகியே இருந்தால் மட்டுமே
  விலக்கப்படுவாய்.

  Like

 16. //அருமையான வரிகள்

  நேசி.
  நேசிக்கப்படுவாய்.
  வாசி
  வாசிக்கப்படுவாய்
  எழுது
  எழுதப்படுவாய்.

  விலகியே இருந்தால் மட்டுமே
  விலக்கப்படுவாய்.

  //

  நன்றி நண்பரே..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s